அடங்கா குதிரையும் அலெக்ஸாண்டரின் நிழலும்

Part 5

வணிகர்கள், போர்வீரர்கள் மூலமாக சோக்டோனியா நிலம் வலை அறிந்துவைத்திருந்த கிரேக்கர்களுக்கு இந்து குஸ் மலைபகுதி முற்றிலும் புதிதானது. மித மிஞ்சிய வெப்பத்தாலும், உயரத்தால் ஏற்படும் மன இறுக்கத்தாலும் படை வீரர்கள் நிலைகுலைந்தார்கள். கி.மு. 329 கோடைகாலத்தில் Bessus தன்னுடைய கூட்டாளிகளாலேயே சிறைபிடிக்கபட்டு அலெக்ஸாண்டரிடம் ஒப்படைக்கப்பட்டான். பிறகு Bessus கதி அதோகதி.

Bessus கொலையோடு அலெக்ஸாண்டர் நிற்க விரும்பவில்லை. மேலும், மேலும். அலெக்ஸாண்டர் மேலும், மேலும் என்று மந்தரிக்க அவனுடைய படைகள் போதும், போதும் என்றது. படை பலமும் குறையத் தொடங்கியது. போதாதற்கு Spitamenes என்கிற பாக்டீரிய நாட்டைச் சேர்ந்த பிரபு குலத்தைச் சேர்ந்த போர் வீரன் மலைவாழ் குதிரை படையினரை சேர்த்துக்கொண்டு, அலெக்ஸாண்டரின் படைகள் அசந்த நேரம் பார்த்து கொரில்லா போர் முறையில் தாக்கிவிட்டு மலையிடுக்குகளில் சென்று ஓளிந்துக்கொண்டு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தான்.

படை பலத்தை பெருக்க வேறு வழியற்ற அலெக்ஸாண்டர் தான் அடிமைபடுத்திய பாக்டீரிய நாட்டிலிருந்தே போர் வீரர்களைள படையில் சேர்க்கத்தொடங்கினான். இது வம்பை விலை கொடுத்து வாங்குவதற்கு சமம். மாசிடோனிய வீரர்கள் இதற்குக எதிர்ப்பு காட்ட எதிர்ப்புகாடகடியவர்களுக்குக பரலோகத்திற்கான வழி காட்டபட்டது. படையில் குழப்பம் உண்டு பண்ணுகிறார்கள் என்கிற சந்தேகத்தில் தனக்கு மிகவும் நெருக்கமானவர்களையும், உண்மையானவர்களையும் கூட அலெக்ஸாண்டர் கொன்று புதைத்தான்.

Parmenio, Parmenio-வின் மகனும், Granicus போரில் அலெக்ஸாண்டரின் உயிரை காப்பாற்றியவனுமான Celitus, அரிஸ்டாட்டலின் உறவினன் Callisthenes என்று பலருக்கு அலெக்ஸாண்டர் சமாதி கட்டினான். இதற்கிடையில் பெர்சிய வீரர்களின் நம்பிக்கையை பெறுவதற்காக அலெக்ஸாண்டர் தன் உடை தொடங்கி பழக்க வழக்கம் வரை பெரிசிய சாயலை பூசிக்கொண்டான். Hyrcania என்கிற ஊரில் Bagos என்ற திருநங்கை அலெக்ஸாண்டருக்கு பரிசு பொருளாக கொடுக்கப்பட்டாள். பரிசாக வந்த Bagos உடனடியாக அலெக்ஸாண்டரின் காதலியாக மாறிப்போனாள்.

அலெக்ஸாண்டர் அளவிற்கு மீறித் தன்னை பெரிசிய அரசவை பழக்கங்களில் புதைத்துக்கொண்டான். இம்முறை தன்னை பெரிசிய வம்சாவளியில் வந்தவனாக கற்பனை செய்துகொண்டு, தன்னை சுற்றி நறுமணப் புகையை எந்நேரமும் வளர்த்துக்கொண்டான். அவனிடம் பேசுவதற்கே படையினர் அஞ்சினார்கள். எந்நேரமும் குடி. குடி தெளிந்தால் யார் தலையாவது சீவப்படும். மீண்டும் குடி. குடி தெளிந்தால் முட்டாள் தனக் கூத்துகள். மீண்டும் குடி.

கி.மு. 327-ல் Spitamenes கூட்டாளிகளால் கொல்லப்பட்டு, அவனுடைய தலை, அமைதிப் பரிசாக அலெக்ஸாண்டருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. நல்லது. கொரில்லா தாக்குதல் ஓழிந்தது. Sogdian பகுதிகளில் மறைந்து சண்டையிட்டுக்கொண்டிருந்த துண்டு துக்கடா போர் தலைவர்களை (War Lords) அலெக்ஸாண்டர் வழிக்கு கொண்டுவந்தான். இத்தகைய War Lord ஒருவரின் மகள் Roxane. பன்னிரெண்டு வயது Roxane-னின் அழகு அலெக்ஸாண்டரை ஆண்பால் காதலிலிருந்து கொஞ்சம் பெண்பால் காதலுக்கும் திசை திருப்பியது Roxane.

இத்திருமணத்தோடு மத்திய கிழக்கில் இரண்டு வருடங்களாக நீடத்த அலெக்ஸாண்டரின் போர் வெறி முடிவிற்கு வந்தது. கி.மு. 327-ல் அலெக்ஸாண்டர் மீண்டும் தன் படைகளை திரட்டிக்கொண்டு இந்துக் குஸ் மலையை நோக்கி கிளம்பினான். இம்முறை அவனிடம் இருந்த படை வீரர்களின் எண்ணிக்கை 75000. இதில் 15000 வீரர்கள் மட்டுமே மாசிடோனியர்கள். அந்த வருடத்தின் June மாதத்தில் Hydaspes நதி கரைக்கு வந்து சேர்ந்தான். அந்த நதி  தற்போது Jhelum என்று அழைக்கபடுகிறது.

தன் வாழ் நாளிலேயே மிக முக்கியமான போர் களத்தையும் எதிரியையும் அந்த நதி கரையில் அலெக்ஸாண்டர் சந்தித்தான். ஏழடி உயரம் உடைய போரஸ் (Porus) பஞ்சாப் பெரும் பகுதியின் அரசன். நதிக்கு மறுகரையில் போரஸின் படை திரண்டிருந்தது. போரஸின் படை பலம் 50000 காலாட்படை. இதைத் தவிர குதிரைப்படையும், மாசிடோனியர்களை கலங்கடித்துவிடும் என்று நம்ப்பட்ட யானைப் படையும் இருந்தது.

மாசிடோனியர் யானைப் படையை தங்களின் வாழ் நாளில் பார்த்தது அதுதான் முதல் முறை. அலெக்ஸாண்டருக்கும் கூட. போரஸ் மிகவும் பாதுகாப்பான இடத்தில் தனது படைகளை அணிவகுத்து நிற்கச்செய்து அலெக்ஸாண்டருக்காக காத்திருந்தான். ஆனால் அலெக்ஸாண்டரின் போர் தந்திரம் எதன் பொருட்டும் காத்திருக்கவில்லை. நதியின் இந்தப் பக்கம் இருந்த அவன் முடிந்த அளவுக்கு எதிரிக்கு குழப்பத்தை ஏற்படுத்துவது என்று முன் கூட்டியே திட்டமிட்டுக்கொண்டான்.

Comments

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

களப்பிரர் என்னும் கலி அரசர்