Posts

Showing posts from July 15, 2012

முரட்டுக் கூத்தாடி – எம்.ஆர்.ராதா

மதராசு ராசகோபால ராதாகிருசண நாயுடுவை பழைய கருப்பு வெள்ளைத் திரைப்படங்களில் தோன்றும் வில்லன் நடிகராகவோ, நகைச்சுவை நடிகராகவோ நம்மில் பலர் நிச்சயமாக அறிந்திருப்போம். இன்னும் சிலர் அவரின் திரைப்படமான ரத்தக் கண்ணீர் மூலம் அவரின் ரசிகராக கூட இருக்கலாம். ஆனால் நம்மில் எத்தனைப் பேருக்கு தன்மானமே பெரிது என்று சமரசத்திற்கு இடமலிக்காமல் வாழ்ந்து மறைந்த எம்.ஆர்.ராதாவின் கலகம் கலந்த புரட்சிகர இன்னொரு முகம் தெரியும்? செல்லுலாய்டில் மட்டுமே புரட்சியும், கலகமும் செய்து தங்களின் பெயர்களுக்கு முன்னால் பட்டங்களை வெற்றுப் பெருமையாக போட்டுக் கொண்டவர்களின் மத்தியில், தன் வாழ்வையே புரட்சியும் கலகமாகவும் மாற்றி வாழ்ந்து மறைந்தவன் எம்.ஆர்.ராதா என்கிறக் கலகக்காரன். குரலில் ஏற்ற இறக்கங்களைக் காட்டி திரையில் நகைச்சுவை செய்யும் ராதா உண்மையில் முரட்டு சுபாவம் கொண்டவர். முரட்டு சுபாவம் என்றால் வலிய சென்று வம்பை தேடும் சுபாவம் அல்ல தேடிவரும் வம்பை உண்டு இல்லை என்று பார்க்கும் அளவிற்கு எதற்கும் எந்த நிலைக்கும் இறங்க தயங்காதவர். வம்பை கொண்டுவருபவர் யாராக இருந்தாலும் எப்பேர்பட்டவராக இருந்தாலும் ராதாவின் அதிரடி நடவ

மாய பிரதிபிம்பங்களும் பாரதியும்

மனித மனம் பிரதிபிம்பங்களுக்கு பெயர் போனது. அதிலும் தமிழனின் மனமானது பிம்பங்களின் பொய் தோற்றத்தை பிரித்தறியாமல் தன்மேல் தினிக்கப்பட்ட பிம்பங்களை பிரதிபலிப்பதில் ஈடு இணையற்றது. ஏன், எதற்கு, எப்படி, யார் – இவைப் போன்ற மனித அறிவு வளர்ச்சிக்கான கேள்விகளை தமிழன் கடந்த பல ஆயிரமாண்டுகளாக கேட்கவுமில்லை, கேட்க வேண்டுமென்ற உணரச்சியும் பெறவில்லை. விளைவு தமிழனின் அறிவுசார் சொத்துகள் ஆரிய பிராமண கருவறைக்குள் போனது. அறிவுசார் சொத்துகளை சர்வ அலட்சியமாக பறிகொடுத்த தமிழினம் அதைப்பற்றிய எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் இல்லாமல் தமிழ் படுத்தப்பட்ட ஆரிய வேதப் புராணங்கள் மற்றும் வேதங்களுக்கு தங்களை அடிமைபடுத்திக் கொண்டார்கள். அத்தோடு நின்றுவிடாமல் தங்கள் மீது வலிந்து திணிக்கப்படும் அனைத்து பொய் புரட்டுகளையும் எந்தவித எதிர் கேள்வியும் கேட்டுவிடாமல் மிகவும் கவனமாக தலைமுறைத் தலைமுறையாக பிரதிபலிக்கத் தொடங்கிவிட்டார்கள். இந்த பிம்பங்களில் ஒன்று பாரதி. பாரதியைப் பற்றிய பல பிம்பங்கள் தமிழனிடம் ஏராளம் இருக்கிறது. பாரதியும் தமிழன் என்பதால் இந்த பிம்பங்களின் நம்பகத் தன்மையில் எந்த விதமான கேள்விகளும் எழ வாய்பில்ல

குருட்டுப் பூனைகளை பகடிச் செய்யும் வம்ச வரலாறு

பல்லாயிரம் ஆண்டுகள் பழமையும் செழுமையும் கொண்ட தமிழ்மொழியின் சாபக்கேடு முறையான வரலாற்று நூல்கள் இல்லாமை. பொதுவாகவே தமிழர்கள் வரலாற்று உணர்வு அற்றவர்கள் என்கிற குற்றச்சாட்டு உண்டு. தங்களைப் பற்றித் தாங்களே பிரசங்கம் செய்துக் கொள்வதா என்கிற கூச்ச உணர்வின் காரணமாக தமிழர்கள் தங்களின் முறையான வரலாற்றை பல நூற்றாண்டுகளாப் பதிவு செய்யாமல் விட்டது, பிற்காலத் தலைமுறையினருக்கு அவர்கள் செய்த பெரும் குற்றமே. வேங்கட மலைக்கு (இன்றைய திருப்பதி) அப்பாலிருக்கும் தக்காண பீட பூமிக்கும், அதற்கும் வடக்கிலிருக்கம் பறந்த நிலபரப்புகளுக்கும், துணை கண்டமான ஈழத்திற்கும் இரண்டாயிரமாண்டுகால முறையான வரலாறு இருக்க தமிழர்களிடம் அதுகிடையாது. அங்குமிங்கும் கிடைக்கும் கல்வெட்டுகள், செப்பெடுகளின் மூலமே ஓரு கோர்வையான தமிழக வரலாற்றை கொண்டு வரமுடிகிறது. இந்த அழகில் சுயவரலாறு ( Autobiography) என்பதை தமிழர்கள் நினைத்தும் பார்த்தது கிடையாது. ஐரோப்பியர்களின் வருகைக்கு பிறகே தமிழர்கள் Autobiography என்ற துறையைப் பற்றி யோசிக்கத் தொடங்கினார்கள். இதன் விளைவு 17-ஆம் நூற்றாண்டு அநந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்புகள். சுயவரலாறு என்பத