சாயம் வெளுத்த பசுமை




கடந்த பல பத்தாண்டுகளாக இந்திய விவசாயிகளுக்கு மோடி மஸ்தான் வித்தைக் காட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டுவந்த பசுமை புரட்சியின் சாயம் மெல்ல மெல்ல வெளுக்கத் தொடங்கியிருக்கிறது. விளைச்சலை JCB Machine கொண்டு வாரலாம், பூச்சிகள் தொல்லை இனி அரவே இல்லை, வயலுக்கு உரம் போட்டு சட்டை பையில் பணம மரத்தையே கொண்டுவந்துவிடலாம் என்றெல்லாம் இந்திய விவசாயிகளை பாரம்பரிய விவசாய முறையிலிருந்து தகர்த்தெரிந்த பசுமை புரட்சியின் பசுமை வார்த்தைகள் பல்லை காட்டுகின்றன. விவசாயிகள் தாங்கள் ஏமாற்றப்பட்டத்தை உணரத்தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் அதற்கு அவர்கள் கொடுத்த விலை அதிகம். அதிகமோ அதிகம்.

விளை நிலங்கள் அனைத்தும் வேதியியல் உரங்களால் மலடாகிப் போயி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று வேதியியல் உரங்களே நாம் உண்ணும் உணவு பொருட்களை விளைவிக்கின்றன மண்ணில் உள்ள இயற்கை சத்துகள் அல்ல. பாரம்பரிய சிறு தானியங்களை ஓரம் கட்டிய பசுமை புரட்சி நம் வயிற்றை அரிசியையும், கோதுமையையும் அரைக்கும் அரவை இயந்திரங்களாக மாற்றிவிட்டது. கேழ்வரகு, கம்பு, குதிரைவாலி போன்ற நம்முடைய பாரம்பரிய சிறு தானிய உணவுகள் அழியும் தருவாயில் இருக்க நாம் OATS விரும்பி வேண்டி வாயில் அடைத்துகொள்ளுகிறோம். இந்த OATS வெள்ளையர்களின் சிறு தானிய வகையை சேர்ந்ததுதான் என்பதை கூட நாம் சிந்திக்க தவறிவிடுகிறோம். நம்மிடமே சிறு தானியங்கள் ஏராளமாக குவிந்து கிடக்க நாம் எதற்கு இறக்குமதி செய்து OATS வாயில் கவிழ்த்துக்கொள்ளவேண்டும் என்கிற சிறு சிந்தனைக் கூட நமக்கு நேரம் இருப்பதில்லை.


இப்படி விவசாயிகளையும் பொது மக்களையும் தங்களுடைய பாரம்பரிய உணவு விளைவிக்கும், உணவு உட்கொள்ளும் முறையிலிருந்து முற்றிலும் அன்னியப்படுத்தும் வேலையை பல பத்தாண்டுகால பசுமை புரட்சி செவ்வனெ செய்திருக்கிறது.

Comments

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

களப்பிரர் என்னும் கலி அரசர்