Posts

Showing posts from 2017

மின்னூல்....கேஃபேப் ரஸ்லிங் நாடகம்

Image
இந்த லிங்கை சொடக்கி இந்த மின்னூலை இணையத்தில் வாங்கலாம்.... https://www.instamojo.com/DavidJpillai/-kayfabe/ பன்னாட்டு வாசகர்கள் கீழே இருக்கும் Paypal லிங்கை சொடுக்கி இணையத்தில் வாங்கலாம்..... https://www.paypal.com/cgi-bin/webscr?cmd=_s-xclick&hosted_button_id=DN6CRBK782X3A பாரம்பரிய ப்ரோ ரஸ்லிங் விதிகளை மிக கடுமையாக தன்னுடைய ப்ரோமோஷன் நிறுவனத்தில் கடைபிடித்தவர் ஜேம்ஸ் மேக்மேன். ப்ரோ ரஸ்லிங் வீரர்கள் அவர்கள் உண்டு அவர்களின் வேலை உண்டு என்று இருந்துவிட்டு போய்விட வேண்டும் என்பதில் அவர் கண்டிப்பாக இருந்தார். ப்ரோ ரஸ்லர்களின் மீது அதிக மீடியா கவனம் படும் பட்சத்தில் அது ப்ரோ ரஸ்லிங் தொழில் இரகசியங்களை வெளிக்கொண்டு வந்து ப்ரோ ரஸ்லிங் மீதான பொது மக்களின் கவர்ச்சியை கலைத்துவிடும் என்பது அவருடைய போன தலைமுறை நம்பிக்கை. இந்த வகையிலும் வின்ஸ் மேக்மேன் ப்ரோ ரஸ்லிங் தொழிலின் தலையெழுத்தை மாற்ற இருக்கிறார் என்பது கண்டிப்பாக அன்றைய நாட்களில் ஜேம்ஸ் மேக்மேனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். அன்றைய நாட்களில் பொது மக்களிடம் தங்களுக்கு இருக்கும் புகழை அடிப்படையாக வைத்துக்கொண்டு ப்ரோ ரஸ

மின்னூல்.....தென்னமெரிக்க தமிழர்கள்

Image
To buy the Ebook https://www.instamojo.com/DavidJpillai/7d495604a2791510327dfb6f3a7cf267/ ஸ்பானியர்கள் அமெரிக்கக் கண்டம் என்கிற புதிய உலகை ( New World) கண்டுபிடித்த பிறகே , அதில் ஐரோப்பியர்கள் குடியேறிய பிறகே அந்த மண்ணில் கலாச்சாரம் என்பது தோன்றியது என்பதைப் போலவும் , அந்த மண்ணின் பூர்வக் குடி மக்கள் காடுகளில் வாழ்ந்த அடிப்படை நாகரீக வளர்ச்சியையும் கூட அடைந்திருக்காத மக்கள் என்பதைப் போன்ற பொதுப்புத்தி தோற்றத்தைத் தலையைச் சுற்றித் தூக்கி எறியவே இந்தப் புத்தகம். அமெரிக்கக் கண்டம் என்று ஒட்டுமொத்தமாகக் குறிப்பிட்டாலும் அதில் வடக்கு தெற்கு என்று இரண்டு பெரும் கண்டங்கள் இருக்கின்றன. அவைகளை இணைக்கும் இடை நிலப்பகுதியும் உண்டு. வடக்கு கண்டம் இன்றைக்கு அமெரிக்கா என்றும் தெற்கு கண்டம் தென்னமெரிக்கா என்றும் இடைநிலை பகுதி மெக்சிக்கோ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மூன்று நிலப்பகுதிகளுக்கும் தனித் தனியே இன , மொழி , கலாச்சார வரலாறுகள் உண்டு. இந்தப் புத்தகத்தில் மீசோ அமெரிக்க நாகரீகம் என்று அழைக்கப்படும் இடைப்பகுதி மெக்சிக்க நாகரீகம் குறித்து மாத்திரமே பார்க்க இருக்கிறோம். மீசோ அமெரிக்கக

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

Image
"வருடம் கி.மு. 1,00,000. சுமார் 13 டிகிரி வடக்கிலும் (அட்சரேகை – Latitude), 80 டிகிரி கிழக்கிலும் (தீர்க்கரேகை – Longitude) இருக்கும் அந்த நிலப்பகுதி வெப்ப மண்டல காடுகளால் சூழப்பட்ட பகுதி1. காடு என்றால் அப்படியொரு அடர்த்தியான காடுகள் அவை. அவைகளின் இடையே அடர்த்தியான மரங்கள் அற்ற சமவெளி பகுதிகளுகும் கூட உண்டு. புற்கள் நிறைந்த சமவெளி. அவைகளுக்கு இடையே சதுப்பு நிலப்பகுதிகளும் ஏராளம் தாராளம். சொல்லப்போனால் தென்னிந்திய தீபகர்பத்தின் மிகப் பெரிய சதுப்பு நிலமும் அது சார்ந்த காடுகளும் இந்த பகுதியில்தான் இருக்கிறது2. (இருந்தது கிருத்துவுக்கு முன்பு ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக). காடுகள் அடர்த்தியாக இருக்கும் அதே சமயத்தில் முரட்டுத் தோற்றமும் கொண்டவைகள். ஆனால் அந்த முரட்டுத்தனத்தை மறைத்துக்கொண்டிருப்பது கண்களை பறிக்கும் பச்சை நிறம். அவைகள்தான் முரட்டுத்தனம் கொண்டவைகள் என்றால் அங்கே பொழியும் மழை என்பது அதைவிட முரட்டுத்தனம் கொண்டது. சுமார் மூன்று மாதங்களுக்கு (அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரை – வடகிழக்கு பருவ மழை) முரட்டுத்தனமாக பொழியும் இடைவிடாத மழையே அந

தென்னமெரிக்க தமிழர்கள் Amazon Kindle Edition is out now

Image
தென்னமெரிக்க தமிழர்கள்: ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், டோல்டெக் மீசோ அமெரிக்க நாகரீகம்...... புத்தகத்தின் Kindle Edition is out now...... Available in Amazon..... Paperback Edition will be out soon..... https://www.amazon.in/dp/B0743NWC9R

தென்னமெரிக்க தமிழர்கள்.....புத்தகத்தின் சிறு துளி....

Image
"பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதாவது கி.பி. 900-களின் தொடக்கத்தில் டிக்கால் மயான சரிவை நோக்கி செல்லத் தொடங்கியது. இதற்கு காரணம் மற்ற மாயன் பேரரசுகளின் அல்லது மெக்சிக்க பேரரசுகளின் படையெடுப்புக்களோ அல்ல. கொஞ்சம் கொஞ்சமாக டிக்கால் வாசிகள் நகரத்தை விட்டு வெளியேறத் தொடங்கிவிட்டார்கள். வேறு வார்தைகளில் சொல்வது என்றால் நகரம் கைவிடப்பட்டுவிட்டது. இது டிக்கால் நகரத்திற்கு மாத்திரம் நேர்ந்த கதியல்ல அதன் சம காலத்தில் உச்சத்தில் இருந்த வடக்கு மற்றும் தெற்கு மாயன் பேரரசுகளுக்கும் நேர்ந்த கதி. மக்கள் கூட்டம் கூட்டமாக நகரங்களை விட்டு வெளியேறிவிட்டார்கள். இதற்கான காரணத்தை விளக்க கூடிய எத்தகைய வரலாற்று ஆதாரங்களும் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை. அளவுக்கு அதிகமான சனத்தொகை பெருக்கமும், அதற்கு ஈடுகொடுக்க கூடிய அளவிற்கான உணவு உற்பத்தி இன்மையும், பருவ நிலை மாற்றங்களும், மக்கள் மாயன் நகரங்களை கைவிடவைத்திருக்கவேண்டும் என்பது இன்றைய ஆய்வாளர்களின் அனுமானம். இந்த காரணங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவைகள்தான் என்றாலும் முழுமையாக இவைகள் மாத்திரமே காரணங்களாக இருக்க முடியாது என்பது மற்றொரு பிரிவ

தென்னமெரிக்க தமிழர்கள்....புத்தகத்தின் சிறு துளி....

Image
தென்னமெரிக்க தமிழர்கள்....புத்தகத்தின் சிறு துளி.... "மாயன் என்கிற வார்த்தைக்கும் மாயோன் என்கிற தமிழ் வார்த்தைக்குமான தொடர்பை காக்கைகளுக்கு படைத்துவிடுவோம். நிச்சயமாக நாம் அப்படியான மொழி ஆராய்ச்சிகளில் எல்லாம் ஈடுபட்டு நம்முடைய நேரத்தை வீணடிக்க கூடிய மூடர்கள் இல்லை என்பதாலும் நமக்கு சினிமா பாடல் கவிகளின் வார்தை ஜாலங்களை தூர் வாருவதற்கே நூற்றாண்டுகள் போதாமல் இருப்பதின் காரணமாகவும் வரலாற்று ஆய்வுகளை காக்கைகளுக்கு திண்ண கொடுத்துவிடுவதே சான்றோர் செயலாக இருக்கும். பாதி வேட்டை மீதி தோட்ட உணவு உற்பத்தி என்று மாயன் நிலப்பகுதிகளில் சுற்றி அலைந்த மாயன்களின் தொடக்க கால கிராம குடியிருப்புக்களை கி.மு. 1800 தொடங்கி பார்க்க முடிகின்றது. கிராம குடியிருப்புக்கள் என்றால் குறிப்பிட்ட பகுதியில் நானூறு ஐந்நூறு வீடுகள் இருக்கும் என்கிற பொருளுக்குள் சென்றுவிட வேண்டாம். ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு வீடு என்கிற அளவிலேயே தொடக்க கால மாயன் கிராம குடியிருப்புக்கள் இருந்திருக்கின்றன. மாயா என்கிற இனக் குழு பெயர் எங்கிருந்து பெறப்பட்டது என்பதற்கான தெளிவான ஆய்வு முடிவுகள் இதுவரை வெளிவரவில்லை. சில ஆ

தென்னமெரிக்க தமிழர்கள்.....சிறு துளி....

"சிற்ப கலை, கட்டிடக் கலை, நாள்காட்டி, எழுத்து வடிவம், இராணுவம் என்று முதிர்ந்த நகர கலாச்சாரம் ஒன்றிற்கான அனைத்து அடையாளங்களையும் கொண்டிருந்தது ஓல்மெக் கலாச்சாரம். ஒன்பதிலிருந்து பதினொரு அடி உயரமும் சுமார் இருபது டன் எடையும் கொண்ட தலை சிற்பங்கள் (Olmec colossal heads) ஓல்மெக் நாகரீகத்தின் சிற்பக் கலை நேர்த்திக்கும் முதர்ச்சிக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. ஓல்மெக் நாகரீகம் பரவியிருந்த நிலப்பகுதி முழுவதிலுமிருந்து இதுவரை பதினேழு தலை சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. பாசால்ட் பாறையில் செதுக்கப்பட்டிருக்கும் இவைகள் உருவாக்கப்பட்டதற்கான நோக்கமும் காரணமும் இதுவரை பிடிபடவில்லை. ஓல்மெக் நாகரீக மர்மங்களின் பட்டியலில் இதையும் இணைத்துக்கொள்வதை தவிர இப்போதைக்கு ஆய்வாளர்களுக்கு வேறு வழி இருப்பதாக தெரியவில்லை. தலை சிற்பங்களின் உருவ அமைப்புக்களை கொண்டு அவைகள் ஆப்பிரிக்க நீக்ராய்ட் இன மக்களை குறிக்கிறது என்று ஒரு பிரிவு ஆய்வாளர்களும், ஆஸ்டிலராய்ட் (தமிழ்) இன மக்களின் மண்டையோட்டு தன்மைகளை கொண்டிருப்பதாக மற்றொரு பிரிவு ஆய்வாளர்களும் இரு வேறு கருத்துக்களை முன் வைக்கிறார்

தென்னமெரிக்க தமிழர்கள்

இப்பொழுது எழுதிக்கொண்டிருக்கும்....."தென்னமெரிக்க தமிழர்கள்" புத்தகத்தின் சிறு துளி.... சோளம், அவக்காடா, கொக்கோ, ஸ்குவாஷ் பழ வகைகளை பருவ காலங்களில் விளைவித்து உணவு பொருளாக பயன்படுத்திவிட்டு வருடத்தின் மற்ற நாட்களில் இடம் பெயர்ந்து வேட்டையின் மூலம் கிடைக்கும் உணவுப் பொருட்களை பயன்படுத்தும் பாதி நிலையாக தங்குதல் மீதி இடம் பெயர்ந்து செல்லுதல் என்கிற வாழ்கை முறையே கி.மு. 2000 வரை நிலைத்திருந்தது. நிலையான விவசாய கிராம குடியிருப்புக்களுக்கான எத்தகைய தொல்லியல் ஆதாரங்களும் கி.மு. 2000 காலக்கட்டப் பகுதிவரை மெக்சிக்கோவின் எந்த ஒரு நிலப்பகுதியிலும் கிடைத்தப்பாடில்லை. இந்த நிலையில் திடீரென்று கி.மு. 1200-ல் ஓல்மெக் பேரரசின் முதல் தலைநகரான சான் லோரன்சோ (San Lorenzo) வரலாற்றின் வெளிச்சத்திற்கு வருகிறது. நிலையான குடியிருப்புக்கள், குடியிருப்புக்களின் தொகுப்பாக கிராமங்கள், கிராமங்களின் தொகுப்பாக வணிக நகரங்கள் பிறகு தலைநகரம் என்கிற விவசாய நாகரீகத்திற்கே உரிய படி நிலை வளர்ச்சியில் இல்லாமல் வானத்திலிருந்து உருண்டு வந்ததைப்போல சான் லோரன்சோ உருப்பெற்றது இன்றைக்கு வரை வரலாற்று புதிர்களில்

தென்னமெரிக்க தமிழர்கள்......புத்தகத்தின் சிறு துளி...

Image
"அலாஸ்கா நிலப்பகுதிக்குள் நுழைந்த கற்கால மனிதர்கள் முதலில் இன்றைய கனடா பிறகு வட அமெரிக்கா அடுத்து மத்திய அமெரிக்கா இறுதியாக தென்னமெரிக்கா என்று அமெரிக்க கண்டம் முழுவதும் படிப் படியாக பரவியிருக்கிறார்கள். புதிய உலகமான (New World) அமெரிக்காவிற்குள் கற்கால மனிதர்கள் சுமார் ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே நுழைந்துவிட்டிருக்கலாம் என்று தெளிவாக தெரிந்தாலும் அவர்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்கின்றன. இதை குறித்து பார்ப்பதற்கு முன்பாக மனித இனத்தின் முக்கிய இனப் பிரிவுகளைக் குறித்து அறிந்துக்கொள்வது அவசியம். இன்றைக்கு உலகம் முழுவதிலும் பல்வேறு மனித இனங்கள், அவைகளுக்கு என்று தனித்த மொழி, கலாச்சாரங்கள் இருந்தாலும் அனைத்தும் நான்கு முதன்மை இனத்திலிருந்து கிளைத்து உருவானவைகளே. நீக்ராய்ட், ஆஸ்டிரலாய்ட், காக்கசாய்ட் மற்றும் மங்கோலாய்ட். நீக்ராய்ட் ஆப்பிரிக்க கருப்பின மக்களையும் அவர்களின் கிளைப் பிரிவுகளையும் உள்ளடக்கியது. ஆஸ்டிரலாய்ட் தமிழர்களையும் தென்கிழக்காசிய மக்களினத்தையும் உள்ளடக்கியது. காக்கசாய்ட் ஐரோப்பிய வெள்ளையின மற்றும் ஆரிய மக்களின

தென்னமெரிக்க தமிழர்கள்.....புத்தகத்தின் சிறு துளி.....

Image
"வடக்கு அமெரிக்க கண்டம் மற்றும் தெற்கு அமெரிக்க கண்டம். இன்றைக்கு வடக்கு கண்டம் அமெரிக்கா (United States of America) என்றும் தெற்கு கண்டம் தென்னமெரிக்கா என்றும் குறிப்பிடப்படுகிறது. இன்றைக்கு இந்த இரண்டு கண்டங்களும் ஐரோப்பிய இனங்களின் குடியேற்றத்தால் நிறைந்திருக்கிறது. அமெரிக்கா ஆங்கில மொழி பேசுபவர்களால் பெரும்பான்மையாகவும், தென்னமெரிக்கா ஸ்பானிய மொழி பேசுபவர்களை பெரும்பான்மையாகவும் கொண்டிருக்கிறது. குடியேற்றக்காரர்களால் நிறைந்திருக்கிறது என்றால் அந்த மண்ணின் பூர்விக குடிகள் அவர்கள் இல்லைப்போலும் என்கிற பொருள்தானே கொள்ளவேண்டியிருக்கிறது. நிச்சயமாக அப்படித்தான். ஏனென்றால் அந்த இரண்டு பெரும் கண்டங்களின் பூர்விக மண்ணின் மைந்தர்கள் ஐரோப்பிய இனங்கள் கிடையாது. அவைகளுக்கு என்று தனித்த வரலாறு உண்டு. மண்ணின் மைந்தர்களின் தனித்த நாகரீகங்கள் உண்டு. அந்த மண்ணிற்கே உரிய வரலாறும் மைந்தர்களும் அழிக்கப்பட்டு இரத்த சரித்திரமாக வரையப்பட்டதே இன்றைய அந்த கண்டங்களின் முகம். இரத்த கரையை மறைத்திருக்கும் நவீன முகத்தைவிட மண்ணின் மைந்தர்களின் உண்மை முகத்தை அவர்களின் வரலாற்றை தெரிந்துக்க

மாற்று சினிமா திரைக்கதை அமைப்புக்கள்......

மாற்று சினிமா திரைக்கதை அமைப்புக்கள்...... புத்தகத்தின் முன்னோட்ட சிறு துளி.... "இந்த புத்தகத்தின் முதல் சில அத்தியாயங்களில் நடைமுறையியல் குறித்தும் கட்டமைப்புவாதம் குறித்தும் விரிவாக பார்த்தோம். அவைகளின் அடிப்படை கோட்பாடுகளில் ஒன்று படைப்பாளியால் எழுத்தைக்கொண்டு எதார்த்த உலகை அப்படியே கதைகளில் மீட்டுருவாக்கம் செய்ய முடியாது என்பது. படைப்பாளி என்னத்தான் இலக்கியம் என்கிற பெயரில் தலை கீழா நின்று வார்த்தை மாயவித்தை காட்டினாலும் எதார்த்த உலகை எழுத்துக்களால் பிரதிபலிக்க முடியாது. இதைத்தான் நமக்கு நடைமுறையியலும் கட்டமைப்புவாதமும் மொழியியல் ஆராய்ச்சிகளின் வழி தெளிவுப்படுத்துகின்றன. எழுத்துக்களால் ஆன நாவல் அல்லது கதைகளையும், காட்சிகளால் ஆன திரைப்படங்களையும் (திரைக்கதை) ஒப்பு நோக்கும் வேலையில் எழுத்துக்களால் எதார்த்த (realistic) உலகை பிரதிபலிக்க முடியாது என்கிற விமர்சன அறிவியல் கருத்து (நடைமுறையியல் மற்றும் கட்டமைப்புவாதம்) முக்கியத்துவம் கொண்டதாக இருக்கிறது. கதையாக கற்பனை செய்து பிறகு அதை திரைக்கதையாக மாற்றுவதாக இருந்தாலும், நல்ல நாவல் ஒன்றை திரைப்படத்திற்கு ஏற்

உலக சினிமாக்களின் திரைக்கதை அமைப்புக்கள்....

உலக சினிமாக்களின் திரைக்கதை அமைப்புக்கள்.... புத்தகத்தின் சிறு துளி.... "ஃபேபுலா (கதை) மற்றும் சியோசட் (பிளாட்): ஃபேபுலா என்பது கதை. சியோசட் என்பது ஒரு கதை சொல்லப்படும் விதம். இது இரண்டையும் ஒரு உதாரணத்தின் மூலம் பார்ப்போம். ராஜ் பிறந்தது சற்று வசதியான குடும்பத்தில்தான். அவனுடைய தலைமுறைக்கு வீட்டில் அக்கடா என்று உட்கார்ந்து சாப்பிட்டு அழிக்கும் அளவிற்கு வசதி உண்டு. அப்படி இருந்தும் பணத்தின் மீது அவனுக்கு பிடிப்பு. அதிலும் குறுக்கு வழியில் பணம் அவனை வந்தடைய வேண்டும் என்பது அவனுடைய இலட்சியம் என்று கூட சொல்லலாம். அதை சாத்தியப்படுத்த அவன் ஒரு வங்கியை கொள்ளையடிப்பது என்று திட்டம் போட்டு ஒரு நாள் வங்கி கொள்ளையிலும் ஈடுபட்டான். கொள்ளையடிக்கும்போது போலீசிடம் சிக்கிக்கொண்டு இறுதியில் சிறைக்கு சென்றான். இது கதை. பேராசை பிடித்த ஒருவன் சட்டத்திற்கு புறம்பாக நடந்து சட்டத்தால் தண்டிக்கப்பட்டான் என்பது இந்த கதையின் அடிப்படை. இதே கதையை எப்படி வேண்டுமானாலும் சொல்ல முடியும். அப்படி சொல்வதே சியோசட் (பிளாட்). பேராசை, திருட்டு, சட்டத்தால் தண்டிக்கப்படுதல் இவைகள் செயல