Posts

Showing posts from March 17, 2013

வாகனத்தில் ஏறும் டைனோசார்கள்

Image
சமூக சீரழிவுகளுக்கான முக்கியமான காரணிகளுள் ஒன்றாக கருதப்படுவது குடி. குடி போதை பல வரம்பு மீறிய செய்களுக்கு தூண்டுகோளாக இருந்துவருகிறது. இந்தியாவில் உலகமயமாக்கலுக்கு பிறகு, நுகர்ப் பொருட்களில் குடி முதல் ஐந்து இடங்களில் நிச்சய இடம் உண்டு. 'என்னது குடிகாரனா?' என்பது போய் 'என்னது குடிக்கமாட்டானா?' என்று அதிரும்படியாக குடி தமிழ் சமூகத்தின் ஈசானி மூலையைக் கூட விட்டுவைக்காமல் எங்கும் பொங்கி நுரைக்கிறது. முன்பு கல்யாணத்திலும், இழவு வீட்டிலும் ஒலிந்து மறைந்துக்கொண்டிருந்த குடி, இந்த இரு பத்தாண்டுகளில் 'எல்லாத்துக்கும் ஊத்திக்கோ' என்றாகிவிட்டது. ' ஊத்திக்' கொள்வதற்காகவே புதிது புதிதாக சமுதாய தனி மனித நிகழ்வுகளை தினமும் கண்ட்டைகிறார்கள். 'பியரில்' தொடங்குபவர்கள் 'ஹாட்டில்' ஆட்ட நாயகர்களாகும் காட்சிகள் இன்றைய பார்களின் தினசரி சமாச்சாரம். இரண்டு 'புல்' அடித்தாலும் 'ஹாப் பாயில்' போடாமல் 'கன்'-னாக வீடு போய் சேர்பவனே இன்றைய சமுதாயத்தின் கள மன்னிக்கவும் போதைப் போராளி. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய வணக்கத்துடன் புதிய நாளை