Posts

Showing posts from December 1, 2013

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

Image
‘என்ன கொடும சார் இது. எல்லா வழியும் ரோமுக்கு போகுது’. 2100 வருசங்களுக்கு முன்னால நீங்க மத்திய தரை கடலை சேர்ந்த ஏதாவது ஒரு நாட்டுலயோ இல்ல மேற்கு ஐரோப்பாவுல ஏதாவது ஒரு சந்துலயோ, போய் சேர வேண்டிய இடத்தோட விலாசத்த தொலச்சுட்டு வழி தேடிக்கிட்டிருந்தீங்கன்னா இப்படித்தான் பொலம்பி இருப்பீங்க. கிரேக்க நாகரீகத்த கபளீகரம் செஞ்ச ரோம பேரரசோட மெய்கீர்த்தி அப்படி.பேரரசோட வல்லரசுன்னு சொன்னா வரலாறு கோச்சுக்காது. Age of Expansion, Age of Exploration, Age of Empires, Age of Consolidation, Age of ......கிழிஞ்சது இப்படியே போனா படிக்கிற உங்களுக்கு Age of கடுப்பு வந்துடும். இதெல்லாம் வேற ஒன்னுமில்லீங்க ரோம பேரரசர்கள் அவங்களோட நாடு புடிக்கிற ஆசைக்கு வச்சுகிட்ட punch subtitles. கட்டுக்கடங்காத ராணுவத்த கட்டுக்கடங்காம எந்த நாட்டுமேல கட்டவிழ்த்து விடலாம்னு யோசிக்கறது ரோமபேரரசர்களோட பதினாறு மணி நேர வேலைதிட்டம். உடனே ரோம பேரரசர்களோட வேலயே இதானோன்னு நினைச்சுட வேண்டாம்.ரோம பேரரசர்களோட கவனம், war -க்கு எந்த நாடும் சிக்காத பொழுது சிறிது கலைக்கும் ஈயப்பட்டது. கலைன்னா போர் கலை தொடங்கி கட்டிட கலை, சிற்பக் கலை,

திராவிடத்த தீயா தேடணும் திராவிடா

Image
தலைப்பு அச்சுபிச்சுன்னு இருந்தாலும் இந்த கட்டுரையில நாம பாக்கபோற விசயம் அப்படிப்பட்டது இல்ல. திராவிட கருத்தியில், திராவிட கோட்பாடு, திராவிட சித்தாந்தம், திராவிடம் இதெல்லாம் அரசியல் சாரந்து அரசியல் கட்சிகளோடு முடிஞ்சுபோற விசயங்களான்னு யோசிக்குறப்ப தேடலுக்கான ஒரு பாதை தெரியுது.இதுலதிராவிடம்ங்கற சொல்லே இன வெறியை தூண்டுதுங்ற குசும்பு அரசியல் வேறு ஒரு பக்கம் சக்கப்போடு போட்டு box-office hit -ஆ போயிட்டிருக்கு. திராவிடம்ங்ற சொல்லோ, திராவிட சித்தாந்தமோ இனப் பெறுமையில இருந்தோ இல்ல இன வெறியில இருந்தோ உண்டானது இல்ல. அறிவியல் சார்ந்த மானுடவியல் ஆராய்ச்சிதான் முதல் முதல்ல திராவிடம்ங்றத உலகத்துக்கு அறிமுகப்படுத்துது. இன்னிக்கு உலக பல்கலைகழகங்கள் திராவிட ஆராய்ச்சி பத்தின விசயங்கள நடத்தி ஆக்கபூர்வமான விசயங்கள வெளிப்படுத்திக்கிட்டுருக்கும்போது இங்கமட்டும் திராவிடத்தை இனவெறின்னு கழுவி கழுவி ஊத்துறதுல நமக்கு சல்லாப மகிழ்ச்சி. தமிழன்தான் இந்த திராவிடத்த கண்டுபுடுச்சான்னு நினைச்சுக்கிட்டு இருந்தா உங்கள விட அசடு வேற யாரும் இருக்கமுடியாது. ஏன்னா தமிழன் கண்டுபிடிப்பு, புத்தாக்கம் அது இது யெதுங்கற வீ