தண்ணீர் தண்ணீர்



ஆட்டை கடித்து மாட்டை கடித்து இறுதியில் நம் வீட்டு கிணற்றையும் கடித்து விட்டது தனியார்மயமாக்கல். நீர் மேலாண்மை திட்டம் 2012-ன் படி இனி தண்ணீர் இந்தியாவில் விற்பனைக்கு உரிய பொருள். விற்பனைக்கு உரிய பண்டம் என்றால் பொது மனித பாவனைக்கு இனி தண்ணீர் கிடையாது என்பது உள் அர்த்தம். இனி விருப்பம் போல உங்கள் வீட்டு கிணற்றிலிருந்தோ, ஆழ் துளை குழாயிலிருந்தோ நீரை அள்ளி தெளிக்க முடியாது. வளர்ச்சி என்கிற பெயரில் உள்ளே நுழைந்த தாராளமயமாக்கலும், உலகமயமாக்கலும் இன்று நம்முடைய அடிப்படை பிறப்பு உரிமையான தண்ணீரை காவுகேட்கின்றன.

நதிகளில் பொங்கி பிரவாகம் எடுக்கும் தண்ணீர் இனி நதிகளுக்கே சொந்தம் கிடையாது. பாகாசுர தனியார் கும்பெனியின் உற்பத்தி பொருள் நதிகளின் வெள்ள பெருக்கு. நம்மை ஆள்கிறவர்கள் நம்முடைய அடிப்படை உரிமையான நீரை காவுகொடுக்க முன்வைக்கும் காரணம் இந்திய குடிமக்களுக்கு தண்ணீர் மேலாண்மை குறித்த புரிதலும், அறிவும் இல்லை என்பதான். அதிலும் முக்கியமாக விவசாயிகளுக்கும் நீர் மேலாண்மைக்கும் காதா தூரம் என்கிறார்கள். நீரின்றி அமையாது உலகு என்று சொன்ன விவசாயிக்கே நீர் மேலாண்மை குறித்த அறிவே கிடையாது என்பது பிரியாணியில் யானையை மறைப்பதற்கு சமம்.



இனி விவசாயிகள் உரம், விவசாய இடுபொருட்கள், மரபணு மாற்றப் பட்ட விதைகள் இவைகளோடு சேர்த்து விவசாயத்திற்கான நீரையும் வாங்க வேண்டும். வங்கிகள் நீர் வாங்குவதற்கு என்று தனியாக வட்டியில்லா கடன் தந்தாலும் தரலாம். விவசாயிகளுக்கு இப்படி என்றால் சாதாரண குடிமக்களுக்கு குடி தண்ணீரை இனி தனியார்கள் அளந்து ஊற்றுவார்கள். எனக்கு தண்ணீர் காசுகொடுத்து வாங்க வேண்டாம் என் வீட்டிலேயே கிணறு இருக்கிறது என்றால் நீங்கள் இந்த நூற்றாண்டின் அதி முக்கிய அப்பாவி. உங்கள் வீட்டு கிணறு உங்களுக்கு சொந்தமானது அல்ல உங்களுக்கு யார் என்றே தெரியாத ஏதோ ஒரு பாகசுர கும்பெனிக்கு சொந்தமாகிவிடும். உங்கள் வீட்டு கிணற்றில் நீர் எடுக்க நீங்கள் இந்த முகம் தெரியாத பாகசுர கும்பெனிக்கு 'காப்பி ரைட்' கட்டணம் கொடுக்கும்படி இருக்கம். இப்படியே போனால் வளர்ச்சி என்கிறப் பெயரில் நாம் சுவாசிக்கும் காற்றுக்கும் ஒரு விலை வைத்துவிடுவார்கள் போலிருக்கிறது!

Comments

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

களப்பிரர் என்னும் கலி அரசர்