Posts

Showing posts from July 29, 2012

தமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas)

Image
இன்று உலகமே Mayan என்கிற வார்த்தையை அறிந்திருக்கிறது. Mayan Calendar -யை வைத்து உலகம் முழுவதும் இன்று பரபரப்பு கிளப்பப்படுகிறது. 2012-ல் உலகம் அழிந்திவிடலாம் என்கிற புனைவுகளும் தொலைக்காட்சி மர்மத் தொடர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. Mayan- கள் யார் என்றுத் தெரியாதவர்கள் கூட Mayan என்கிறப் பெயரை உச்சரிக்கிறார்கள். தமிழ் நாட்டின் முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் Mayan Calendar பற்றிய நிகழ்ச்சிகளை வெளிநாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து பிச்சையெடுத்து, தமிழ் படுத்தி கட்டைக் குரல்களில் உலக அழிவைப் பற்றி பேசுகின்றன. வரலாற்று அறிவு கொஞ்சம் கூட இல்லாத நம்முடைய தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் Mayan தொடர்பான வரலாற்று நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவது அபத்தம். Omlec, Aztec, Mayan, Inca இவைகள் வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்த மக்களுடைய நாகரீகங்களின் பெயர்கள். இவர்களை வெள்ளையர்கள் செவ்விந்தியர்கள் என்று பொதுபட அழைத்தார்கள். ஆங்கிலேயர்கள் இவர்களை செவ்விந்தியர்கள் என்று அழைத்ததற்கு வரலாற்று பின்னனி உண்டு. கி.பி. 14, 15 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்

களப்பிரர் என்னும் கலி அரசர்

Image
கி.பி. 250 தொடங்கி கி.பி. 575 வரையான 325 வருடங்களை தமிழகத்தின், தமிழக வரலாற்றின் இருண்ட காலமாக இந்திய வரலாற்றாளர்கள் வரையறுத்திருக்கிறார்கள். இந்த உலகில் உள்ள எல்லா மனித நாகரிகத்திற்கும் இருண்ட காலம் என்று ஒன்று உண்டு. ஒரு நாகரிகத்தில் புறவயமாகவோ, எதிரிகளாலோ, தனக்குள்ளேயோ ஏற்படும் கலாச்சார சீரழிவுகளை, கொள்ளைகளை, மனித கொலைகளை, இன படுகொலைகளை அந்த நாகரிகத்தின் இருண்ட காலம் என்பார்கள். உலகில் எந்த நாகரிகமும் இந்த காட்டுமிராண்டி செயல்களிலிருந்து தப்பியது கிடையாது. இப்பொழுது நம் முன் இருக்கும் கேள்வி தமிழகத்தின் இருண்ட காலமும் இத்தகைய தன்மைகள் கொண்டவைகள் தானா என்பது. இதை சற்று விரிவாகவே நாம் பார்க்க வேண்டியுள்ளது. தமிழகத்தில் கடை சங்கம் என்று சொல்லப்படும் மூன்றாம் சங்கம் கி.பி. 150 முதல் தடையமே இல்லாமல் மறைந்துவிட்டது. சங்கம் என்பது சேர, சோழ, பாண்டியர் என்று சொல்லப்படும் மூவேந்தர்களால் தமிழ் மொழியின் இலக்கியத்தை வளர்ப்பதற்காக நிறுவப்பட்டது. முதல் தமிழ் சங்கமும், இரண்டாம் தமிழ் சங்கமும் கடல் கோளினால் (சுனாமி) அழிந்துவிட்டது. இந்த இரண்டு தமிழ் சங்கங்களின் காலமும் இன்றிலிருந்து சுமார் 50