Posts

Showing posts from July 23, 2017

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

Image
"வருடம் கி.மு. 1,00,000. சுமார் 13 டிகிரி வடக்கிலும் (அட்சரேகை – Latitude), 80 டிகிரி கிழக்கிலும் (தீர்க்கரேகை – Longitude) இருக்கும் அந்த நிலப்பகுதி வெப்ப மண்டல காடுகளால் சூழப்பட்ட பகுதி1. காடு என்றால் அப்படியொரு அடர்த்தியான காடுகள் அவை. அவைகளின் இடையே அடர்த்தியான மரங்கள் அற்ற சமவெளி பகுதிகளுகும் கூட உண்டு. புற்கள் நிறைந்த சமவெளி. அவைகளுக்கு இடையே சதுப்பு நிலப்பகுதிகளும் ஏராளம் தாராளம். சொல்லப்போனால் தென்னிந்திய தீபகர்பத்தின் மிகப் பெரிய சதுப்பு நிலமும் அது சார்ந்த காடுகளும் இந்த பகுதியில்தான் இருக்கிறது2. (இருந்தது கிருத்துவுக்கு முன்பு ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக). காடுகள் அடர்த்தியாக இருக்கும் அதே சமயத்தில் முரட்டுத் தோற்றமும் கொண்டவைகள். ஆனால் அந்த முரட்டுத்தனத்தை மறைத்துக்கொண்டிருப்பது கண்களை பறிக்கும் பச்சை நிறம். அவைகள்தான் முரட்டுத்தனம் கொண்டவைகள் என்றால் அங்கே பொழியும் மழை என்பது அதைவிட முரட்டுத்தனம் கொண்டது. சுமார் மூன்று மாதங்களுக்கு (அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரை – வடகிழக்கு பருவ மழை) முரட்டுத்தனமாக பொழியும் இடைவிடாத மழையே அந