Posts

Showing posts from 2013

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

Image
‘என்ன கொடும சார் இது. எல்லா வழியும் ரோமுக்கு போகுது’. 2100 வருசங்களுக்கு முன்னால நீங்க மத்திய தரை கடலை சேர்ந்த ஏதாவது ஒரு நாட்டுலயோ இல்ல மேற்கு ஐரோப்பாவுல ஏதாவது ஒரு சந்துலயோ, போய் சேர வேண்டிய இடத்தோட விலாசத்த தொலச்சுட்டு வழி தேடிக்கிட்டிருந்தீங்கன்னா இப்படித்தான் பொலம்பி இருப்பீங்க. கிரேக்க நாகரீகத்த கபளீகரம் செஞ்ச ரோம பேரரசோட மெய்கீர்த்தி அப்படி.பேரரசோட வல்லரசுன்னு சொன்னா வரலாறு கோச்சுக்காது. Age of Expansion, Age of Exploration, Age of Empires, Age of Consolidation, Age of ......கிழிஞ்சது இப்படியே போனா படிக்கிற உங்களுக்கு Age of கடுப்பு வந்துடும். இதெல்லாம் வேற ஒன்னுமில்லீங்க ரோம பேரரசர்கள் அவங்களோட நாடு புடிக்கிற ஆசைக்கு வச்சுகிட்ட punch subtitles. கட்டுக்கடங்காத ராணுவத்த கட்டுக்கடங்காம எந்த நாட்டுமேல கட்டவிழ்த்து விடலாம்னு யோசிக்கறது ரோமபேரரசர்களோட பதினாறு மணி நேர வேலைதிட்டம். உடனே ரோம பேரரசர்களோட வேலயே இதானோன்னு நினைச்சுட வேண்டாம்.ரோம பேரரசர்களோட கவனம், war -க்கு எந்த நாடும் சிக்காத பொழுது சிறிது கலைக்கும் ஈயப்பட்டது. கலைன்னா போர் கலை தொடங்கி கட்டிட கலை, சிற்பக் கலை,

திராவிடத்த தீயா தேடணும் திராவிடா

Image
தலைப்பு அச்சுபிச்சுன்னு இருந்தாலும் இந்த கட்டுரையில நாம பாக்கபோற விசயம் அப்படிப்பட்டது இல்ல. திராவிட கருத்தியில், திராவிட கோட்பாடு, திராவிட சித்தாந்தம், திராவிடம் இதெல்லாம் அரசியல் சாரந்து அரசியல் கட்சிகளோடு முடிஞ்சுபோற விசயங்களான்னு யோசிக்குறப்ப தேடலுக்கான ஒரு பாதை தெரியுது.இதுலதிராவிடம்ங்கற சொல்லே இன வெறியை தூண்டுதுங்ற குசும்பு அரசியல் வேறு ஒரு பக்கம் சக்கப்போடு போட்டு box-office hit -ஆ போயிட்டிருக்கு. திராவிடம்ங்ற சொல்லோ, திராவிட சித்தாந்தமோ இனப் பெறுமையில இருந்தோ இல்ல இன வெறியில இருந்தோ உண்டானது இல்ல. அறிவியல் சார்ந்த மானுடவியல் ஆராய்ச்சிதான் முதல் முதல்ல திராவிடம்ங்றத உலகத்துக்கு அறிமுகப்படுத்துது. இன்னிக்கு உலக பல்கலைகழகங்கள் திராவிட ஆராய்ச்சி பத்தின விசயங்கள நடத்தி ஆக்கபூர்வமான விசயங்கள வெளிப்படுத்திக்கிட்டுருக்கும்போது இங்கமட்டும் திராவிடத்தை இனவெறின்னு கழுவி கழுவி ஊத்துறதுல நமக்கு சல்லாப மகிழ்ச்சி. தமிழன்தான் இந்த திராவிடத்த கண்டுபுடுச்சான்னு நினைச்சுக்கிட்டு இருந்தா உங்கள விட அசடு வேற யாரும் இருக்கமுடியாது. ஏன்னா தமிழன் கண்டுபிடிப்பு, புத்தாக்கம் அது இது யெதுங்கற வீ

மாரடித்தழும் அசகாயசூரர்கள்

Image
Spider Man, Super Man, He Man, Batman, Catwoman, Watchman, இப்படி அனைத்துவிதமான Man- களையும் தமிழ் கூறும் நல்லுலகம் அனேகமாக அறிந்தேவைத்திருக்கிறது . நம்முடைய Super- கள் மற்றும்  Star- களின் படங்களுக்கு இடையே , சில நேரங்களில் போட்டியாகவே இந்த ஹாலிவுட் அசகாயசூரர்கள் திரை அரங்குகளை தங்களின் கட்டுப்பாட்டிற்குள்கொண்டுவருவதுண்டு .  தமிழ் சமுகத்தின் கடைத்தேற்றமே நம்முடைய படங்கள் மட்டும்தான் என்று நம்மிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமா நட்சத்திரங்களுக்கும் ஹாலிவுட் அசகாயசூரர்களுக்கும் அதிக வித்தியாசம் ஒன்றும் கிடையாது . ஆனால் இவர்களுக்கு இடையே இருக்கும் சில வித்தியாசங்கள் மிக முக்கியமானவைகள் . மக்களுக்கு பெரிய ஆபத்துகள் வரும்பொழுதெல்லாம் ,  அவர்களுக்குள் ஒருவனாக ,  தங்களுடைய உண்மை அடையாளத்தை மறைத்து வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த அசகாய சூரர்கள் தாங்களாகவே வரிந்துகட்டிக்கொண்டு ஓடியோ , பறந்தோ , புரண்டோ வந்து மக்களை அந்த ஆபத்துகளிலிருந்து காப்பாற்றி சாவுவிமோசனம் தருவார்கள் . இதில் ஆச்சரியம் இந்த அசகாயசூரர்களின் கதைகள் அனைத்திலும் மக்களுக்கு ஆபத்தை உண்டுபண்ணுபவர்கள் வேற்று உலகவாசிகளோ அல்லது

பிண்டமே அண்டம், அண்டமே பிண்டம்

Part 1 'வரும் காலம் வசந்த காலம்' என்று நற்செய்தி சொன்ன நம்முடைய ஆட்சியாளர்கள், தாராளமயமாக்கலுக்கும், உலகமயமாக்கலுக்கும் இந்தியாவின் நான்கு திக்கு கதவுகளையும் அகல திறந்துவிட்டார்கள். நம்முடைய பொருளாதார மெஸியாக்களான மன்மோகன் சிங்கும், சிதம்பரமும் இந்தியா, உலக பெரு நிறுவனங்களின் நுகர்வுப் பொருளாக மாறுவதும், தொடர்ந்து அப்படியே இருப்பதும் இந்தியர்களின் மோட்சத்திற்கான ஒரே வழி என்று தீர்க்கதரிசனம் சொன்னார்கள். அவர்களுடைய சிஷியப் பிள்ளைகளான வளர்ச்சி விரும்பிகளும் தங்களுடைய நாக்குளில் பச்சை மிளகாயைத் தடவிக்கொண்டு கிளிகள் போல கடந்து இரு பத்தாண்டுகளாக அதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை தரத்தை உயர்த்தவேண்டிய வளர்ச்சி, வாழும் தரத்தை மேலும் மேலும் குறைத்துக்கொண்டிருக்கிறது. ரத்தக் கொதிப்பும், சர்கரையும் இன்று சமநிலை சமுதாயத்திற்கான குறியீடுகளாக மாறிவிட்டது. மனிதகுலத்தை மீட்டெடுக்க வந்த நவீன மருத்துவம் இன்றைக்கு பாகாசுர கம்பெனிகளின் பணத் தோட்டமாகிவிட்டது. ஒருவகையில் நவீனம் என்று சொல்லப்படும் இன்றை மருத்துவம் செயற்கையே. பக்க விளைவுகள் இல்லா மருத்துவம் என்பது இன்றை

வாகனத்தில் ஏறும் டைனோசார்கள்

Image
சமூக சீரழிவுகளுக்கான முக்கியமான காரணிகளுள் ஒன்றாக கருதப்படுவது குடி. குடி போதை பல வரம்பு மீறிய செய்களுக்கு தூண்டுகோளாக இருந்துவருகிறது. இந்தியாவில் உலகமயமாக்கலுக்கு பிறகு, நுகர்ப் பொருட்களில் குடி முதல் ஐந்து இடங்களில் நிச்சய இடம் உண்டு. 'என்னது குடிகாரனா?' என்பது போய் 'என்னது குடிக்கமாட்டானா?' என்று அதிரும்படியாக குடி தமிழ் சமூகத்தின் ஈசானி மூலையைக் கூட விட்டுவைக்காமல் எங்கும் பொங்கி நுரைக்கிறது. முன்பு கல்யாணத்திலும், இழவு வீட்டிலும் ஒலிந்து மறைந்துக்கொண்டிருந்த குடி, இந்த இரு பத்தாண்டுகளில் 'எல்லாத்துக்கும் ஊத்திக்கோ' என்றாகிவிட்டது. ' ஊத்திக்' கொள்வதற்காகவே புதிது புதிதாக சமுதாய தனி மனித நிகழ்வுகளை தினமும் கண்ட்டைகிறார்கள். 'பியரில்' தொடங்குபவர்கள் 'ஹாட்டில்' ஆட்ட நாயகர்களாகும் காட்சிகள் இன்றைய பார்களின் தினசரி சமாச்சாரம். இரண்டு 'புல்' அடித்தாலும் 'ஹாப் பாயில்' போடாமல் 'கன்'-னாக வீடு போய் சேர்பவனே இன்றைய சமுதாயத்தின் கள மன்னிக்கவும் போதைப் போராளி. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய வணக்கத்துடன் புதிய நாளை

வேப்பிலை அடிக்கும் உலகமயமாக்கலும் சாமியாடும் நுகர்வு கலாச்சாரமும்

Image
உலகமயமாக்கலும், திறந்தவெளி சந்தையும் மனிதர்களை அந்நியப்படுத்துவதில் தீராத வேட்கையோடு மனித உறவுகளையும் உணர்வுகளையும் வேட்டையாடிக்கொண்டிருக்கின்றன. இயற்கையிடம் இருந்து மனிதன் அந்நியப்பட்டு பல பத்தாண்டுகள் ஓடிவிட்டன. தங்கள் வாழ்வின் பெரும் பகுதியை இயற்கையோடு பங்கிட்டு அனுசரித்து வாழ்ந்த மனிதர்கள் இன்று இயற்க்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக எழுந்து நிற்கிறார்கள். தங்களுக்குள் அந்நியப்படுவதிலும் போட்டிப்போட்டுகொண்டிருக்கிறார்கள். உலக நாகிரீகம் ஒவ்வொன்றும் இயற்க்கையிலிருந்து தங்களுக்கான உணவையும், நல் வாழ்வுக்கான மருந்துகளையும் சூழல் அமைவிற்கு ஏற்ப பெற்றுக்கொண்டிருந்த உறவு அறுக்கப்பட்டு, ஒருசில பாகசுர கும்பெனிகளின் லாப பேராசையை தணிக்கும் விதமாக, Research & Development Lab-களிலிருந்து இன்றைய உலக மக்கள் தங்களுக்கான உணவையும், மருந்துகளையும் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கே உரித்தான மண் சார்ந்த வாழ்க்கைமுறை என்பது இன்றைக்கு உலகத்திலிருக்கும் எல்லா மனித நாகரீகத்திற்கும் சென்ற தலைமுறையின் பழங்கதையாகிவிட்டது. வளர்ச்சி என்கிற பெயரில் வந்த அறிவியல் கண்டுபிடிப்புகள், உலக நாகரீகங்களை அதனுடைய

அடங்கா குதிரையும் அலெக்ஸாண்டரின் நிழலும்

Part 6 இங்கு நாம் கவனிக்க வேண்டிய ஒன்று அலெக்ஸாண்டர் தன்னுடைய தளபதிகளுடன் போர் திட்டம் குறித்து கலந்தாலோசிக்கவேயில்லை. அதற்கான சந்தர்பத்தைக்கூட அவன் விட்டுவைத்ததுகிடையாது. போரும் நானே, எதிரியும் நானே, போர் களமும் நானே. நானே, நானே,.... ஆற்றில் பெரு வெள்ளம் ஓடிக்கொண்டிருக்க அலெக்ஸாண்டர் தன்னுடைய வீரர்களுக்கு கொடுத்த கட்டளை, ஆற்றை பாதி தூரம் கடந்துவிட்டு, முடியாத என்பதுபோல் திரும்பிவிட வேண்டும். வீரர்களும் அலெக்ஸாண்டரின் சொல் தப்பவில்லை. விடிந்ததும் போருக்கான சகல வஸ்துகளையும் சுமந்துகொண்டு ஆற்றை பாதி தூரம் கடப்பது பிறகு திரும்பிவிடுவது. இப்படியே இரண்டு மூன்று நாட்கள் ஓடியது. எதிர்கரையிலிருந்த போரஸக்கு சற்றே சலிப்பு தட்ட தனது படையணிக்கு ஏற்படுத்திவைத்திருந்த இரவு நேர ரோந்துக் காவலை பின் வாங்கிக்கொண்டான். மிக மிக சரியாக அலெக்ஸாண்டரும் இந்த நடவடிக்கையைத்தான் போரஸிடமிருந்து எதிர்பார்த்தான். போரஸ் பழத்தை பாலில் நழுவ விட்டான். அலெக்ஸாண்டரின் படைகள் ஆற்றில் ஆட்டம் காட்டிக்கொண்டிருக்க அவனுடைய உளவுப் பிரிவு Jhelum நதியின் மிக குறுகலான கடப்பதற்கு எளிதான பாதை ஒன்றை, அவர்கள் தங்கியிருந்த இடத்த

அடங்கா குதிரையும் அலெக்ஸாண்டரின் நிழலும்

Part 5 வணிகர்கள், போர்வீரர்கள் மூலமாக சோக்டோனியா நிலம் வலை அறிந்துவைத்திருந்த கிரேக்கர்களுக்கு இந்து குஸ் மலைபகுதி முற்றிலும் புதிதானது. மித மிஞ்சிய வெப்பத்தாலும், உயரத்தால் ஏற்படும் மன இறுக்கத்தாலும் படை வீரர்கள் நிலைகுலைந்தார்கள். கி.மு. 329 கோடைகாலத்தில் Bessus தன்னுடைய கூட்டாளிகளாலேயே சிறைபிடிக்கபட்டு அலெக்ஸாண்டரிடம் ஒப்படைக்கப்பட்டான். பிறகு Bessus கதி அதோகதி. Bessus கொலையோடு அலெக்ஸாண்டர் நிற்க விரும்பவில்லை. மேலும், மேலும். அலெக்ஸாண்டர் மேலும், மேலும் என்று மந்தரிக்க அவனுடைய படைகள் போதும், போதும் என்றது. படை பலமும் குறையத் தொடங்கியது. போதாதற்கு Spitamenes என்கிற பாக்டீரிய நாட்டைச் சேர்ந்த பிரபு குலத்தைச் சேர்ந்த போர் வீரன் மலைவாழ் குதிரை படையினரை சேர்த்துக்கொண்டு, அலெக்ஸாண்டரின் படைகள் அசந்த நேரம் பார்த்து கொரில்லா போர் முறையில் தாக்கிவிட்டு மலையிடுக்குகளில் சென்று ஓளிந்துக்கொண்டு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தான். படை பலத்தை பெருக்க வேறு வழியற்ற அலெக்ஸாண்டர் தான் அடிமைபடுத்திய பாக்டீரிய நாட்டிலிருந்தே போர் வீரர்களைள படையில் சேர்க்கத்தொடங்கினான். இது வம்பை விலை க

அடங்கா குதிரையும் அலெக்ஸாண்டரின் நிழலும்

Part 4 இந்த போரில் அலெக்ஸாண்டர் டேரியஸை வீழ்த்த கடைபிடித்த Military Strategy குறித்து தனியே ஒரு கட்டுரையே எழுதலாம். இங்கு கவனிக்க வேண்டியது போரில் திட்டமிடுவதெல்லாம் அலெக்ஸாண்டர் மட்டுமேதான். அவனுடைய தளபதிகளெல்லாம் வெறும் தலையாட்டி பொம்மைகள் மட்டும்தான். போர்களத்தில் தன்னுடைய திட்டங்களை நிறைவேற்றும் போர் இயந்திரங்களாக தான் அலெக்ஸாண்டர் தன்னுடைய வீரர்களை பாவித்தான். போரில் கிடைக்கும் வெற்றி குறித்தப் பெருமை வேறு யாருக்கும் சென்றுவிடாமல் இருப்பதில் அலெக்ஸாண்டர் கவனமாக இருந்தான். இந்த போரில் அலெக்ஸாண்டரின் வெற்றியை பற்றி சில வரிகளில் சொல்வதானால் , போரின் இறுதி முடிவை முன்பே எடுத்துவிட்டு டேரியஸை அந்த முடிவை நோக்கி தள்ளியதுதான் அலெக்ஸாண்டரின் போர் தந்திரம். இது போர் வரலாற்றில் ( Military History) முறைகேடானதாகப் பார்க்கப்படுகிறது. வழக்கம்போல டேரியஸ் போர்களத்தை விட்டு ஓடினான். Gaugamela- க்கு அடுத்து அவன் பாபிலோனுக்கும் பிறகு Susa- க்கும் படையெடுத்து சென்றான். ஜனவரி , கி.மு. 330 வாக்கில் அலெக்ஸாண்டர் பெரிசியாவின் தலைநகர் Persepolis- யை அடைந்தான். சொற்கத்தின் மாதரியை மண்ணில் பார்க