Posts

Showing posts from September 2, 2012

மலை முழுங்கிகள்

Image
மனித நாகரீகத்தின் முதல் நாவல் வடிவ இலக்கியமாக இன்று உலக இலக்கிய விமர்சகர்களால் போற்றப்படுவது கில்காமேஸ்( Gilgamesh). இந்த நாவல் எந்தவிதமான மாறுதல்களுக்கும், குறைந்த பட்ச திரிபுகளும்கூட உட்படாமல் ஏறத்தாழ் 7000 வருடங்களாக புழக்கத்திலிருக்கிறது. இது சுமேரிய நாகரீகத்தின் இலக்கிய தொடக்கமாக கருதப்படுகிறது. இன்று ஐரோப்பாவின் கலாச்சாரத்திற்கும், மொழிகளுக்கும் மூலமாக கருதப்படும் கிரேக்கத்தில் 2900 வருடங்களுக்கு முன்பு இலியாட்( Ilayd) தோன்றி, கிரேக்க பாதிக் கடவுள்( Demigod) கதாநாயகர்களின் கதைகளை பேசி இன்றளவும் எந்திவித மாறுதல்களுக்கும் உட்படாமல், உட்படுத்தப்படாமல் கிரேக்கர்களின் கலாச்சார கூறுகளை வெளிச்சமிடுகிறது. எகிப்தியர்களின் பாப்பைரஸ் சுருள்களுக்கு ( Papyrus Scrolls) ஏறத்தாழ ஐந்தாயிரம் வயது. இவைகள் எகிப்திய பாரோ வம்சாவளியினரின் கதைகளை எந்தவிதமான இடைசொறுகல்களும், எந்தவிதமான மாயமால திரிபுகலும் இல்லாமல் உள்ளதை உள்ளவாரு பாதுகாத்து இன்றைய நாகரீக உலகத்திற்கு எடுத்துசொல்லி நம்மை வாய்பிளக்க வைக்கின்றன. நாம் பார்த்த இந்த நாகரீகங்கள் அனைத்தும் அந்நியர்களின் படையெடுப்புகளுக்கும், ஆளுகைகளுக்க

மாமல்லனோடு மல்யுத்தம்

Image
‘ காஞ்சிபுரத்தை சுற்றிக் கொண்டு நுங்கும் நுரையுமாக கரைபுரண்டு ஓடும் பால் ஆற்றில் இன்னும் சில வினாடிகளில் மாமல்லபுரம் துறைமுகத்திற்கு புறபட இருக்கும் பாய்மர படகில் நாம் எப்படியாவது இடம் பிடித்துவிட வேண்டும். மகேந்திரவர்மனும், நரசிம்ம பல்லவனும் மாமல்லபுரத்தை பார்வையிட அந்த பாய்மர படகில் கிளம்ப போகிறார்கள். பேசுவதற்கு நேரம் இல்லை வாருங்கள் ஓட்டமாக ஓடி படகில் ஏறிக்கொள்வோம் ’ . ஆயிரத்து முந்நூறு வருடங்களுக்கு முன்பு கலை ஆர்வளர்கள் இப்படிதான் தங்களுக்குள் பேசியபடி மாமல்லபுரம் செல்லும் பாய்மர படகில் இடம் பிடித்திருப்பார்கள். இன்று பால் ஆறு பாலை ஆறாக காட்சியலிக்கிறது. மாமல்லபுரம், அதன் பெயர் தொடங்கி அனைத்து அம்சங்களிலும் வரலாற்றுக்கு முரணான ஆரிய மாயை பூசி நிற்கிறது. ஆரிய மாயையால் பூசி மொழிகி நிறுத்தப்பட்டிருக்கிறது என்பது சரியாக இருக்கும். முதலில் மாமல்லபுர பெயர் காரணத்திலிருந்து தொடங்கலாம். மாமல்லபுரம் என்பதுதான் உண்மை வரலாற்றின் அடிப்படையில் அந்த பல்லவர் கால துறைமுக நகரத்திற்கு வழங்கப்பட்ட பெயராகும். மகேந்திரவர்மனின் மகன் நரசிம்மவர்மனுடைய சிறப்பு பெயர்களில் ஒன்று மாமல்லன். இவன் சி

நதியோடு ஒரு பயணம்

Image
நைல் நதியின் ஓட்டம் மேலை எகிப்து( Upper Egypt) , கீழை எகிப்து( Lower Egypt) என்று இரண்டு நாகரீகங்களை உருவாக்கியது. யூப்ரடீஸ் மற்றும் டைகீரிஸ் நதிகள் சுமேரிய நாகரீகத்தை உருவாக்கியது. இந்த வரிசையில் மேலே குறிப்பிடப்பட்ட நைல், யூப்ரடீஸ், டைகீரிஸ் நதிகளைப் போல் இன்னும் குறிப்பாக சொல்வதென்றால் இந்த நதிகளுக்கெல்லாம் வெகு காலத்திற்கு முன்பே ஒடிய ஒரு நதி உலகின் மிகப் மிகப் பழமையான நாகரீகம் ஒன்றை வளர்தெடுத்தது. உலகின் தென்பாகத்தில் ஓடிய அந்த நதி இலக்கியங்களில் குறிப்பிட்டபட்ட மிகப் பழமையான நதியும் கூட. இன்று இந்துமகா சமுத்திரத்தின் அடி ஆழத்தில் புதைந்துவிட்ட அது தன்னோடு கூட உலகின் உன்னதமான ஒரு நாகரீகத்தின் அடையாளங்களையும் கொண்டு சென்றுவிட்டது. பல நூறு வருடங்களின் வரலாற்றை தன்னோடு அணைத்தபடி அது சமுத்திரத்தின் இருண்ட பாகத்தில் உறங்கி கிடக்கிறது. சமுத்திரத்திற்குள் முழ்கி அந்த நதியின் கரைகளில் புதைந்து கிடக்கும் வரலாற்றை மீட்டு எடுக்க வேண்டிய நாடு இன்று சுயநல அரசியல் வாதிகளால் பாழ்பட்டு கிடக்கிறது. வரலாற்று சுரணையற்ற அந்த நாட்டின் மக்களும் சித்தம் போக்கு சிவன் போக்கு என்று உழன்று கொண்ட

பயணித்த பாதைகளில் சில கால் தடங்கள்

Image
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தை சேர்ந்த ஒரு மனிதர் சத்தமேயில்லாமல் உலகின் கிழக்கு, மேற்கு என்று இரு திசைகளிலும் சுற்றி வந்துகொண்டிருந்தார். கிழுக்கு மற்றும் மேற்கு நாடுகளுக்கு பயணம் போவது ஒன்றும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் இல்லையென்றாலும் இந்த மனிதர் பல சுவாரசியமான சமாச்சாரங்களுக்கு சொந்தக்காரர். அதுவரை தமிழ் இலக்கிய உலகம் அவ்வளவாக கண்டுகொள்ளாத பயண இலக்கியத்திற்கு ஒரு புதிய அத்தியாயத்தை இந்த மனிதர் தொடங்கிவைத்தார். பயண கட்டுரைகளை சுவாரசியமான வாசிப்பு வெளியாக்க முடியும் என்பதை நிருபித்து காண்பித்த முதல் மனிதர். ஏ.கே. செட்டியார் இது அவருடைய பெயர். இவர் எழுதிய ஐரோப்பிய பயண கட்டுரைகளும், கரீபிய பயண கட்டுரைகளும் இன்று படித்தாலும் புது மணலின் மனத்தை நுகரும் அனுபவத்தை தரக் கூடியது. இவர் வெறும் பயண கட்டுரையாளர் மாத்திரம் கிடையாது, தின மலர் என்கிற மாத பத்திரிக்கையின் ஆசிரியரும் கூட. தின மலரின் ஆசிரியர், அச்சுகோப்பவர், பதிப்பாளர், வினியோகஸ்தர் என்று தனி ஒரு மனிதராக இந்த இதழை நடத்தியிருக்கிறார். இவர் அக்காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பத்திரிக்கைகளில் வெளிவந்த

நீதிக்கு ஒரு கட்சி

உலக அரங்கில் 1920-கள் மிகவும் கொந்தளிப்பான காலகட்டம். தமிழகமும் தன் பங்கிற்கு ஒரு கொந்தளிப்பை உருவாக்கிய காலகட்டம் 1915-களின் பிற்பகுதி. South Indian Liberal Federation என்று அழைக்கப்பட்ட நீதிக் கட்சி இந்த காலகட்டத்தில் மிக வலுவாக உருபெற்றது. காங்கிரஸ் அல்லாத தமிழகத்தின் முதல் அரசியல் காட்சி. மிகச் சிறந்த படிப்பாளிகளால் உருவாக்கபட்டு வழிநடத்தபட்ட மிகத் தெளிவான கொள்கை கொண்ட கட்சி. கொள்கைகள் வேறு நடவடிக்கைகள் வேறு, கொள்கையே இல்லாத நடிவடிக்கைகள், நடவடிக்கையே இல்லாத கொள்கைகள், சாதி அடையாளம், மத அடையாளம் என்று இன்றைய, நேற்றைய கட்சிகள் போலில்லாமல் மிக மிகத் தெளிவாக ஒரே ஒரு கொள்கையோடு அரசியிலில் இறங்கி இயக்கம் நீதி கட்சி. அந்த ஒரே ஒரு கொள்கையையும் மிகத் தீவிரமாக எந்தவித சமரசத்திற்கும் இடம் இல்லாமல் நிறைவேற்றிய கட்சியும் கூட. தமிழகத்தை பொறுத்த மட்டில், தான் முன்வைத்த ஒரு கொள்கைக்காக கடைசி நிமிடம் வரை போராடிய முதலும் கடைசியுமான கட்சி நீதி கட்சி மட்டும்தான். நீதி கட்சி முன் வைத்த அந்த ஒரே ஒரு கொள்கை பிராமணர் அல்லாதார் முன்னேற்றம். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் தினசரி வாழ்விலும், ச