மின்னூல்....கேஃபேப் ரஸ்லிங் நாடகம்

இந்த லிங்கை சொடக்கி இந்த மின்னூலை இணையத்தில் வாங்கலாம்....

https://www.instamojo.com/DavidJpillai/-kayfabe/


பன்னாட்டு வாசகர்கள் கீழே இருக்கும் Paypal லிங்கை சொடுக்கி இணையத்தில் வாங்கலாம்.....

https://www.paypal.com/cgi-bin/webscr?cmd=_s-xclick&hosted_button_id=DN6CRBK782X3A


பாரம்பரிய ப்ரோ ரஸ்லிங் விதிகளை மிக கடுமையாக தன்னுடைய ப்ரோமோஷன் நிறுவனத்தில் கடைபிடித்தவர் ஜேம்ஸ் மேக்மேன். ப்ரோ ரஸ்லிங் வீரர்கள் அவர்கள் உண்டு அவர்களின் வேலை உண்டு என்று இருந்துவிட்டு போய்விட வேண்டும் என்பதில் அவர் கண்டிப்பாக இருந்தார். ப்ரோ ரஸ்லர்களின் மீது அதிக மீடியா கவனம் படும் பட்சத்தில் அது ப்ரோ ரஸ்லிங் தொழில் இரகசியங்களை வெளிக்கொண்டு வந்து ப்ரோ ரஸ்லிங் மீதான பொது மக்களின் கவர்ச்சியை கலைத்துவிடும் என்பது அவருடைய போன தலைமுறை நம்பிக்கை. இந்த வகையிலும் வின்ஸ் மேக்மேன் ப்ரோ ரஸ்லிங் தொழிலின் தலையெழுத்தை மாற்ற இருக்கிறார் என்பது கண்டிப்பாக அன்றைய நாட்களில் ஜேம்ஸ் மேக்மேனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.

அன்றைய நாட்களில் பொது மக்களிடம் தங்களுக்கு இருக்கும் புகழை அடிப்படையாக வைத்துக்கொண்டு ப்ரோ ரஸ்லிங் வீரர்கள் ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்க முயற்ச்சி செய்வது சர்வ சாதாரணமான காரியம். ஆனால் ஜேம்ஸ் மேக்மேன் அவருடைய ப்ரோமோஷன் நிறுவனத்தில் வேலைப் பார்த்த அனைத்து ரஸ்லர்களுக்கும் இந்த விசயத்தில் மிக கடுமையான தடை விதித்திருந்தார். எந்த அளவிற்கு கடுமையான தடை என்றால் அப்படி முயற்ச்சி செய்யும் ரஸ்லரை வேலையை விட்டு துரத்தியடிக்கும் அளவிற்கு. அப்படி துரத்தியடிக்கப்பட்டவர்களில் மிக முக்கியமானவர் ஹல்கோகன் (Hulk Hogan).

இதே ஹல்கோகனை வைத்து அவருடைய மகன், அவருடைய ப்ரோமோஷன் நிறுவனத்தை அமெரிக்காவின் பலம் மிக்க ப்ரோ ரஸ்லிங் ப்ரோமோஷன் நிறுவனமாக கட்டமைப்பார் என்பதும் ஹல்கோகனை விரட்டியடித்த சமயத்தில் ஜேம்ஸ் மேக்மேனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். இப்படி பல வாய்ப்பில்லைகளுக்கு இடையேதான் இராணுவ கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வந்த நின்ற (திருமணம் செய்துகொண்டு) வின்ஸ் மேக்மேனுக்கு அவருடைய வேல்ட் வைட் ரஸ்லிங் பெடரேஷன் (WWWF) நிறுவனத்தில் போட்டி அறிவிப்பாளர் வேலையை கொடுத்தார். ப்ரோ ரஸ்லிங் தொழிலின் மிக வேகமான போட்டி அறிவிப்பாளர் என்கிற பெயரையும் மிக சீக்கிரத்திலேயே தன் பக்கம் வாங்கி வைத்துக்கொண்டார் வின்ஸ். பிற்காலத்தில் வின்ஸ் ப்ரோ ரஸ்லிங் தொழிலில் செய்ய இருந்த அதிரடிகளுடன் ஒப்பிட்டால் இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லாத சமாச்சாரம்.

ஃப்பட்டி ரோஜர்சை பிடித்துக்கொண்டு வந்து ஜேம்ஸ் மேக்மேன் ப்ரோ ரஸ்லிங் போட்டிகளை நடத்திக்கொண்டிருந்தார் என்பதை பார்த்தோம் தானே. ஃப்பட்டி ரோஜர்சை தொடர்ந்து சேம்பியனாக்கப்பட்டவர் ப்ரூனோ சமாரிட்டானோ (Bruno Sammartino). WWWF பிற்பாடு WWF என்றும் WWE என்றும் பெயர் மாற்றம் பெற்று சுமார் ஐம்பது சொச்சம் வருடங்களை கடந்து வந்துவிட்டிருந்தாலும் ப்ரூனோ சமாரிட்டானோ செய்த சாதனையை வேறு எந்த ஒரு ப்ரோ ரஸ்லரும் செய்யவில்லை. இனி செய்யவும் முடியாது என்பது வேறு விசயம்.

சுமார் எட்டு வருடங்களுக்கு தொடர்ச்சியாக வேல்ட் ரஸ்லிங் சேம்பியனாக, வேல்ட் ரஸ்லிங் சேம்பியன்ஷிப் பெல்ட்டை இடுப்பிலும், தோளிலும், தலைக்கு மேலும் தூக்கி சுமந்தவர் ப்ரூனோ சமாரிட்டானோ. இவருக்கு அடுத்து WWWF-ல் மக்களின் பேராதரவுடன் சூப்பர் ஸ்டார்களாக இருந்தவர்கள் பில்லி க்ரஹேம் மற்றும் பாப் பக்லண்ட். ஜேம்ஸ் மேக்மேன் பாரம்பரிய முறையில் ப்ரோ ரஸ்லிங் தொழிலை நடத்தினாலும் அவருடைய காலத்தில் சில முற்போக்கு மற்றும் வித்தியாச நடவடிக்கைகளையும் துணிச்சலாக எடுக்கத்தான் செய்தார்.


Comments

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

களப்பிரர் என்னும் கலி அரசர்

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....