அடங்கா குதிரையும் அலெக்ஸாண்டரின் நிழலும்


Part 4

இந்த போரில் அலெக்ஸாண்டர் டேரியஸை வீழ்த்த கடைபிடித்த Military Strategy குறித்து தனியே ஒரு கட்டுரையே எழுதலாம். இங்கு கவனிக்க வேண்டியது போரில் திட்டமிடுவதெல்லாம் அலெக்ஸாண்டர் மட்டுமேதான். அவனுடைய தளபதிகளெல்லாம் வெறும் தலையாட்டி பொம்மைகள் மட்டும்தான். போர்களத்தில் தன்னுடைய திட்டங்களை நிறைவேற்றும் போர் இயந்திரங்களாக தான் அலெக்ஸாண்டர் தன்னுடைய வீரர்களை பாவித்தான். போரில் கிடைக்கும் வெற்றி குறித்தப் பெருமை வேறு யாருக்கும் சென்றுவிடாமல் இருப்பதில் அலெக்ஸாண்டர் கவனமாக இருந்தான். இந்த போரில் அலெக்ஸாண்டரின் வெற்றியை பற்றி சில வரிகளில் சொல்வதானால், போரின் இறுதி முடிவை முன்பே எடுத்துவிட்டு டேரியஸை அந்த முடிவை நோக்கி தள்ளியதுதான் அலெக்ஸாண்டரின் போர் தந்திரம். இது போர் வரலாற்றில் (Military History) முறைகேடானதாகப் பார்க்கப்படுகிறது. வழக்கம்போல டேரியஸ் போர்களத்தை விட்டு ஓடினான்.

Gaugamela-க்கு அடுத்து அவன் பாபிலோனுக்கும் பிறகு Susa-க்கும் படையெடுத்து சென்றான். ஜனவரி, கி.மு. 330 வாக்கில் அலெக்ஸாண்டர் பெரிசியாவின் தலைநகர் Persepolis-யை அடைந்தான். சொற்கத்தின் மாதரியை மண்ணில் பார்க்க வேண்டுமானால் நிச்சயம் பெர்சிபோலிஸ் போகவேண்டும். செல்வச் செழிப்பு. செழிப்பு செல்வம். இதுதான் பெர்சிபோலிஸ். விடுவார்களா அலெக்ஸாண்டரின் போர் இயந்திரங்கள். கண்ணில் பட்டதெல்லாம் கொள்ளையடிக்கும் பொருளாக மாறிப்போனது. மனித நேயம் வடக்கிருந்து உயிர்விட்டது. ஆண்கள் அனைவரும் பத்திரமாக விண்ணிலிருக்கும் சொர்கத்திற்கு வழியனுப்பி வைக்கப்பட்டார்கள். கொள்ளை முடிந்து, படுகொலையும் முடிந்ததும், சாவகாசமாக போதையில் பல்லைக் குத்திக்கொண்டு வந்த அலெக்ஸாண்டர் அங்கிருந்த அரண்மனைகளுக்கு தீவைக்க கட்டளையிட்டான். திட்டமிட்டு நகரை அழிக்கவேண்டும் என்கிற நோக்கில் வைக்கப்பட்ட தீ அது. அலெக்ஸாண்டரின் ஆளுமை திறனுக்கும், 23 வயதில் உலகை வெல்ல வந்த தன்னம்பிக்கைக்கும் மீண்டும் ஒரு மனித இனமும், வரலாற்று சின்னங்களும் காவுகொடுக்கப்பட்டது.

அலெக்ஸாண்டர் ஆசியாவின் பேரரசனாக மாறியிருந்தான். அவன் கைகளில் 1,00,000 தாலந்து பெரிசிய தங்கம். இன்றைக்கு அதனுடைய மதிப்பு பல பில்லியன் டாலர்கள். ஆனால் ஒரே ஒரு குறை. அலெக்ஸாண்டரின் ரத்தம் நுறைக்கும் கோப்பையில் டேரியஸின் ரத்தம் மட்டும் இன்னும் நுறைத்தபாடில்லை. டேரியஸ் இன்னும் ரத்தமும் சதையுமாக ஏக்பட்ணா என்கிற ஊரில் உயிரோடு இருப்பதாக செய்திகள். இந்த ஊர் இன்றைய Tehran நாட்டின் தென்மேற்கில் இருக்கிறது. அலெக்ஸாண்டர் டேரியஸை துரத்தத் தொடங்கினான். ஒருவழியாக தாக்கப்பட்ட நிலையில் குத்துயிரும் குலை உயிருமாக டேரியஸை கண்டான். டேரியஸை தாக்கியது யார் என்பது வரலாற்றில் மர்மமாக இருக்கிறது. 'அலெக்ஸாண்டர் வந்து டேரியஸின் நிலையை பார்த்ததும் வருந்தியதாகவும், டேரியஸின் மரணத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக தன்னுடைய மேலங்கியை கழற்றி டேரியஸின் உடலை மூடினான்' என்று வரலாற்று ஆசிரியர் ப்ளுட்டார்ச் கூறிப்பிடுகிறார்.

பிறகு டேரியஸின் உடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட பெர்சியாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டது. அடுத்து அலெக்ஸாண்டர் வந்தடைந்தது எக்டோம்பிலஸ் (Hecatompylus). இங்கு தன்னுடைய படைக்கு ஓய்வு கொடுக்க அவன் திட்டமிட்டிருந்தான். ஒய்வும் கொடுக்கப்பட்டது. கொள்ளையடித்த மனமும், வாள் வீசிய கையும் சும்மாயிருக்குமா. படையினரிடையே புரளி கிளம்பிவிட்டது. இத்தோடு நாடுகளை கொள்ளையடிக்கும் படையெடுப்பு முடிந்து விட்டதாகவும், அலெக்ஸாண்டரும் படையினரும் ஊர் திரும்ப போவதாகவும் வதந்தி படையினரிடையே பரவியது. சுதாரித்துக் கொண்ட அலெக்ஸாண்டர், தன்னுடைய தளபதிகளை ஓன்று கூட்டினான். கண்களில் கண்ணிரோடு தன்னுடைய பிரகாசமான குறிக்கோள் பாதியிலேயே முடிவுக்குகொண்டுவரப்பட்டுவிட்டது என்று அலெக்ஸாண்டர் குற்றம் சாட்டியதாக வரலாற்று ஆசிரியர் குர்டீஸ் எழுதுகிறார். திரும்பி போக விரும்பியவர்களை போக அனுமதித்துவிட்டு மற்றவர்களுடன் அலெக்ஸாண்டர் தன்னுடைய போர் வெறி பயணத்தை தொடர்ந்தான். இம்முறை அவனுடைய கவனம் Bessus அரசன் மீது திரும்பியது. Bessus பாக்ட்டீரியாவிலிருந்து பின் வாங்கி Sogdiana-வில் பதுங்கிவிட்டான். ஒரு வருடம். ஆம் Bessus-யை தேடி அலெக்ஸாண்டர் கரடுமுரடான நிலப்பகுதியில் திரிந்தது ஒரு வருடம். இந்து குஸ் மலையடிவார நிலப்பகுதி அலெக்ஸாண்டரின் படைகளை நிலைகுலைய வைத்தது.

Comments

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

களப்பிரர் என்னும் கலி அரசர்