Posts

Showing posts from July 22, 2012

காத்திருக்கிறது வாயில் காப்போரின் நிலா சோறு கதைகள்

கடவுள் இந்த சொல் ஒன்று போதும், தமிழன் அடிமைத்தனத்தின் கீழ்த்தரமான எந்த நிலைக்கும் இறங்குவதற்கு தயங்க்கவேமாட்டான். 3000 வருடங்களுக்கு முன்பு இந்த ஒற்றை வார்த்தையை வைத்துதான் ஆரியமும், பார்ப்பனியமும் தமிழனின் நிலையை, தன்மானத்தை, சிறப்புகளை, கலைகளை அடகுக்கு எடுத்துக்கொண்டான். பார்ப்பனியம் வெகு சுலபமாக தமிழனின் ஓட்டுமொத்த வாழ்க்கைக்கும் ஆரிய சாயம் பூசிவிட்டது. மொழித் தொடங்கி கலைகள் வரை அனைத்தும் ஆரியப் பெயர்கள் தாங்கி ஓலைச்சுவடிகளில் ஏறின. தமிழனின் கட்டிடக் கலையும் இதற்கு விதிவிலக்கு கிடையாது. இன்று தமிழர்களின் கட்டிடக் கலையைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்பும் ஒருவர், ‘ மாய மதம் ’ , ‘ காசிப சில்பசாத்திரம் ’ என்கிற இரு ஆரிய மொழி நூல்களைத்தான் படித்தாகவேண்டும். ஏமாந்த தமிழர்களின் கட்டிடக் கலை நுட்பங்களை தமிழ் மொழியிலிருந்து ஆரிய மொழிக்கு மொழிமாற்றம் ( Translation) செய்து எழுதி எடுத்துக்கொண்டு அதைத் தமிழர்களிடமே காட்டி தமிழர்களின் கட்டிடக் கலை நுட்பத்திற்கு மூலம் தங்களின் சமஸ்கிருத நூல்கள் தான் என்று பார்ப்பனியம் சாதித்துவிட்டது. மூலத் தமிழ் நூல்கள் மாயமாய் மறைந்து போய்விட்டன இல்லை இல்லை

நியாயத்தைப் புரட்டும் மனிதநேயத்தின் மனசாட்சிகள்

இனப் பற்றும் மொழிப் பற்றும் நிலவியல் சார்ந்தது. உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த நிலவியல் சார்ந்தப் பற்றுகளை தன்னுடைய தினசரி வாழ்வில் பிரதிபலிப்பவனாக இருக்கிறான். மொழி இன அடையாளங்கள் இல்லாமல் மனிதர்கள் தங்களின் வாழ்வை கடந்துப்போவது கடினம். நாம் பேசும் மொழியும், அந்த மொழி கட்டமைக்கிற இனமும் இந்த உலகில் நமக்கான விலாசத்தை உருவாக்குகின்றன. ஐரோப்பியர்கள் என்று சொன்னால் உடனடியாக நம்முடைய மனம் அவர்கள் பேசும் மொழியையும், அவர்களின் இனம் சார்ந்த பழக்க வழக்கங்களையுமே முதலில் கற்பனை செய்யும். மானுடவியலாளர்களைக் கேட்டுப்பாருங்கள் ( Anthropologist) மொழியும் இனம் சார்ந்த தகவல்களும் மனித இனத்தின் வரலாற்றைக் கட்டமைப்பதற்கு எவ்வளவு முக்கியம் என்று, பக்கம் பக்கமாக விலக்க ஆரம்பித்துவிடுவார்கள். மொழி பற்றும் இனப் பற்றும் ஒவ்வொரு மனிதனுடைய பிறப்பு உரிமை. உலகில் எந்த மூலையிலும் மனிதனின் இந்த உரிமையை விமர்சிப்பது வாழ்வதற்கான அவனுடைய அடிப்படை சுதந்தரத்தில் தலையிடுவதற்கு சமம். ஆனால் இந்தியா மட்டும் இதற்கு விதிவிலக்கு. இங்கே இந்த உரிமையைப் பற்றி பேசுபவர்களை ஒருவரா

வற்றிய வயிறும் ஒரு சகாப்தமும்

வரலாறு மகத்தான மனிதர்களை, ஆளுமைகளை உருவாக்குகிறது. சில வேலைகளில் மனிதர்கள் வரலாற்றை உருவாக்குகிறார்கள். அபூர்வமாக வரலாறும் தனிப்பட்ட மனிதர்களும் சேரந்து சகாப்த்ததை உருவாக்குவார்கள். இதை ஆங்கிலத்தில் Era என்று அழைக்கிறார்கள். காலமே இத்தகைய சகாப்தங்களை தீர்மானிக்கிறது. திரை சகாப்தங்களில் ஒருவர் சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளின் ( Charles Spenzer Chaplin). சகாப்தம் என்ற உடன் அவரைத் தலையில் தூக்கிவைத்துக்கொண்டாடவேண்டும், நாயக வழிபாடு செய்து தெய்வமாக்கவேண்டும் என்று எடுத்துக்கொள்வது வடிகட்டிய முட்டாள்தனத்திலும் வடிகட்டிய மூடத்தனம். சாதனையாக உயர்ந்தவர்களை, அவர்களின் இருண்டப் பக்கங்களை மறைத்துவிட்டு, சாதனைகளை மட்டுமே அந்த மனிதர்களுடைய வெற்றியின் அளவுகோலாக, முன்னுதாரணமாக வைத்து பிறரும் வாழ்க்கையில் அவரைகளைப் போலவே ஆகவேண்டும் என்கிற அபத்த சுயமுன்னேற்ற உலறல் அசிங்கங்களும் ஒரு வகையில் குருட்டு மூடநம்பிக்கைக்கு சமம். சாதித்தவர்களின் வாழ்வை, அவர்கள் அனுபவித்த ஏற்றத்தாழ்வுகளை, அவர்கள் சிக்கிக்கொண்ட நெருக்கடிகளை, அவர்கள் பயந்த பயங்களை எப்படிப் படித்து உள்வாங்கி உணரவேண்டும், ரத்தமும் சதையுமாக நம