Posts

Showing posts from August 12, 2012

ஊர்-ல் காயும் தமிழ் நிலவு

Image
வருடம் கி.மு. 3000 அதாவது இன்றிலிருந்து மிகச் சரியாக 5000 வருடங்களுக்கு முன்பு, அரேபிய ( Arab) நாட்டை தெற்கு வடக்காக கடந்து Persian Gulf -யை அடைந்து பிறகு Euphrates நதிக்கரையில் அமைந்திருக்கும் அந்த புகழ்பெற்ற நகரத்தை நோக்கி ஒரு வணிக கூட்டம் போய்கொண்டிருக்கிறது. அவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டே போகிறார்கள். என்ன ஆச்சரியம் அவர்கள் பேசுவது தமிழ் மொழி, ஆம் அவர்கள் தமிழில் தான் பேசிக்கொள்கிறார்கள். அவர்களை நாம் இன்னும் கொஞ்சம் அருகில் சென்று பார்க்கலாம் வாருங்கள். அடக் கடவுளே அவர்கள் தமிழ் வணிகர்கள். தமிழக வணிகர்களுக்கு இங்கு என்ன வேலை? இந்து மா கடலையும், அரேபியாவின் பாலைவனங்களையும் கடந்து இவர்கள் எங்கே போய்கொண்டிருக்கிறார்கள்? ஊர் ( Ur), அந்த தமிழ் வணிகர்கள் போய்கொண்டிருப்பது இந்த நகரத்தை நோக்கித்தான். அவர்களில் சிலர் ஊர்க் ( Urk) என்கிற நகரத்தை நோக்கி பிறகு செல்வார்கள். இந்த ஊர் மற்றும் ஊர்க் நகரங்கள் எங்கே இருக்கின்றன என்று நீங்கள் புருவம் உயர்த்தினால் இதை படியுங்கள். இந்த இரண்டு நகரங்களும் Mesopotamia நாகரீகம் செழித்து வளர்ந்த Sumeria- யாவில் இருக்கின்றன. Euphrates மற்றும்

ஒரு குச்சி, ஒரு பறை, ஒரு குறை

Image
இனக்குழு நடனம் ஒவ்வொரு மனித நாகரீகத்தின் மன இயல்புகளை வெளிப்படுத்தக் கூடிய கலை சாதனம். உலகின் பழமையான அனைத்து நாகரீகங்களுக்கும் அவற்றிர்கே உரிதான புராதன நடன கலை உண்டு. இந்த இனக்குழு நடனத்தின் முக்கிய அம்சம், வேட்டை மற்றும் இனக்குழு மோதல்களை சித்தரிப்பதாக இருக்கும். வேட்டையாடிய மிருகத்தின் தோலைக் கொண்டு இந்த நடனத்திற்கான வாத்தியங்கள் செய்யப்பட்டிருக்கும். இந்த வாத்தியங்கள் எழுப்பும் இசையோடு அமைந்த நடனம் காண்பவரை வசீகரிக்கக் கூடியது. இவ்வகை இனக்குழு நடனங்களில் பெயர் போனவர்கள் ஆப்பிரிக்க பழங்குடிகள். ஆப்பிரிக்க மக்களின் மரபனுவோடு கலந்த ஒன்று இந்த இனக்குழு நடனம். ஆப்பிரிக்க இனத்தவருக்கு நடனம் வெகு இயல்பாக வருவதற்கும் இதுவே காரணம். ஆப்பிரிக்க இனக்குழு நடனங்களும் அதற்கான இசையும் இன்று உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. உலகில் பத்தில் இரண்டு பேர் ஆப்பிரிக்க இனக்குழு நடனத்தையும் இசையும் அறிந்திருக்கிறார்கள். Money M என்கிற இசை குழுவின் புகழ் பெற்ற பாடல்கள் அனைத்துமே முழுக்க முழுக்க ஆப்பிரிக்க இனக்குழு இசையின் மேற்கத்திய பிரதிபலிப்பு. Money M குழுவின் பாடல்களை கேட்டவர்களுக்கு தெரியும் அந்