Posts

Showing posts from March 10, 2013

வேப்பிலை அடிக்கும் உலகமயமாக்கலும் சாமியாடும் நுகர்வு கலாச்சாரமும்

Image
உலகமயமாக்கலும், திறந்தவெளி சந்தையும் மனிதர்களை அந்நியப்படுத்துவதில் தீராத வேட்கையோடு மனித உறவுகளையும் உணர்வுகளையும் வேட்டையாடிக்கொண்டிருக்கின்றன. இயற்கையிடம் இருந்து மனிதன் அந்நியப்பட்டு பல பத்தாண்டுகள் ஓடிவிட்டன. தங்கள் வாழ்வின் பெரும் பகுதியை இயற்கையோடு பங்கிட்டு அனுசரித்து வாழ்ந்த மனிதர்கள் இன்று இயற்க்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக எழுந்து நிற்கிறார்கள். தங்களுக்குள் அந்நியப்படுவதிலும் போட்டிப்போட்டுகொண்டிருக்கிறார்கள். உலக நாகிரீகம் ஒவ்வொன்றும் இயற்க்கையிலிருந்து தங்களுக்கான உணவையும், நல் வாழ்வுக்கான மருந்துகளையும் சூழல் அமைவிற்கு ஏற்ப பெற்றுக்கொண்டிருந்த உறவு அறுக்கப்பட்டு, ஒருசில பாகசுர கும்பெனிகளின் லாப பேராசையை தணிக்கும் விதமாக, Research & Development Lab-களிலிருந்து இன்றைய உலக மக்கள் தங்களுக்கான உணவையும், மருந்துகளையும் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கே உரித்தான மண் சார்ந்த வாழ்க்கைமுறை என்பது இன்றைக்கு உலகத்திலிருக்கும் எல்லா மனித நாகரீகத்திற்கும் சென்ற தலைமுறையின் பழங்கதையாகிவிட்டது. வளர்ச்சி என்கிற பெயரில் வந்த அறிவியல் கண்டுபிடிப்புகள், உலக நாகரீகங்களை அதனுடைய

அடங்கா குதிரையும் அலெக்ஸாண்டரின் நிழலும்

Part 6 இங்கு நாம் கவனிக்க வேண்டிய ஒன்று அலெக்ஸாண்டர் தன்னுடைய தளபதிகளுடன் போர் திட்டம் குறித்து கலந்தாலோசிக்கவேயில்லை. அதற்கான சந்தர்பத்தைக்கூட அவன் விட்டுவைத்ததுகிடையாது. போரும் நானே, எதிரியும் நானே, போர் களமும் நானே. நானே, நானே,.... ஆற்றில் பெரு வெள்ளம் ஓடிக்கொண்டிருக்க அலெக்ஸாண்டர் தன்னுடைய வீரர்களுக்கு கொடுத்த கட்டளை, ஆற்றை பாதி தூரம் கடந்துவிட்டு, முடியாத என்பதுபோல் திரும்பிவிட வேண்டும். வீரர்களும் அலெக்ஸாண்டரின் சொல் தப்பவில்லை. விடிந்ததும் போருக்கான சகல வஸ்துகளையும் சுமந்துகொண்டு ஆற்றை பாதி தூரம் கடப்பது பிறகு திரும்பிவிடுவது. இப்படியே இரண்டு மூன்று நாட்கள் ஓடியது. எதிர்கரையிலிருந்த போரஸக்கு சற்றே சலிப்பு தட்ட தனது படையணிக்கு ஏற்படுத்திவைத்திருந்த இரவு நேர ரோந்துக் காவலை பின் வாங்கிக்கொண்டான். மிக மிக சரியாக அலெக்ஸாண்டரும் இந்த நடவடிக்கையைத்தான் போரஸிடமிருந்து எதிர்பார்த்தான். போரஸ் பழத்தை பாலில் நழுவ விட்டான். அலெக்ஸாண்டரின் படைகள் ஆற்றில் ஆட்டம் காட்டிக்கொண்டிருக்க அவனுடைய உளவுப் பிரிவு Jhelum நதியின் மிக குறுகலான கடப்பதற்கு எளிதான பாதை ஒன்றை, அவர்கள் தங்கியிருந்த இடத்த

அடங்கா குதிரையும் அலெக்ஸாண்டரின் நிழலும்

Part 5 வணிகர்கள், போர்வீரர்கள் மூலமாக சோக்டோனியா நிலம் வலை அறிந்துவைத்திருந்த கிரேக்கர்களுக்கு இந்து குஸ் மலைபகுதி முற்றிலும் புதிதானது. மித மிஞ்சிய வெப்பத்தாலும், உயரத்தால் ஏற்படும் மன இறுக்கத்தாலும் படை வீரர்கள் நிலைகுலைந்தார்கள். கி.மு. 329 கோடைகாலத்தில் Bessus தன்னுடைய கூட்டாளிகளாலேயே சிறைபிடிக்கபட்டு அலெக்ஸாண்டரிடம் ஒப்படைக்கப்பட்டான். பிறகு Bessus கதி அதோகதி. Bessus கொலையோடு அலெக்ஸாண்டர் நிற்க விரும்பவில்லை. மேலும், மேலும். அலெக்ஸாண்டர் மேலும், மேலும் என்று மந்தரிக்க அவனுடைய படைகள் போதும், போதும் என்றது. படை பலமும் குறையத் தொடங்கியது. போதாதற்கு Spitamenes என்கிற பாக்டீரிய நாட்டைச் சேர்ந்த பிரபு குலத்தைச் சேர்ந்த போர் வீரன் மலைவாழ் குதிரை படையினரை சேர்த்துக்கொண்டு, அலெக்ஸாண்டரின் படைகள் அசந்த நேரம் பார்த்து கொரில்லா போர் முறையில் தாக்கிவிட்டு மலையிடுக்குகளில் சென்று ஓளிந்துக்கொண்டு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தான். படை பலத்தை பெருக்க வேறு வழியற்ற அலெக்ஸாண்டர் தான் அடிமைபடுத்திய பாக்டீரிய நாட்டிலிருந்தே போர் வீரர்களைள படையில் சேர்க்கத்தொடங்கினான். இது வம்பை விலை க

அடங்கா குதிரையும் அலெக்ஸாண்டரின் நிழலும்

Part 4 இந்த போரில் அலெக்ஸாண்டர் டேரியஸை வீழ்த்த கடைபிடித்த Military Strategy குறித்து தனியே ஒரு கட்டுரையே எழுதலாம். இங்கு கவனிக்க வேண்டியது போரில் திட்டமிடுவதெல்லாம் அலெக்ஸாண்டர் மட்டுமேதான். அவனுடைய தளபதிகளெல்லாம் வெறும் தலையாட்டி பொம்மைகள் மட்டும்தான். போர்களத்தில் தன்னுடைய திட்டங்களை நிறைவேற்றும் போர் இயந்திரங்களாக தான் அலெக்ஸாண்டர் தன்னுடைய வீரர்களை பாவித்தான். போரில் கிடைக்கும் வெற்றி குறித்தப் பெருமை வேறு யாருக்கும் சென்றுவிடாமல் இருப்பதில் அலெக்ஸாண்டர் கவனமாக இருந்தான். இந்த போரில் அலெக்ஸாண்டரின் வெற்றியை பற்றி சில வரிகளில் சொல்வதானால் , போரின் இறுதி முடிவை முன்பே எடுத்துவிட்டு டேரியஸை அந்த முடிவை நோக்கி தள்ளியதுதான் அலெக்ஸாண்டரின் போர் தந்திரம். இது போர் வரலாற்றில் ( Military History) முறைகேடானதாகப் பார்க்கப்படுகிறது. வழக்கம்போல டேரியஸ் போர்களத்தை விட்டு ஓடினான். Gaugamela- க்கு அடுத்து அவன் பாபிலோனுக்கும் பிறகு Susa- க்கும் படையெடுத்து சென்றான். ஜனவரி , கி.மு. 330 வாக்கில் அலெக்ஸாண்டர் பெரிசியாவின் தலைநகர் Persepolis- யை அடைந்தான். சொற்கத்தின் மாதரியை மண்ணில் பார்க

அடங்கா குதிரையும் அலெக்ஸாண்டரின் நிழலும்

Part 3 இங்குதான் அலெக்ஸாண்டரின் போர் வியூகத்தையும் , தந்திரத்தையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அலெக்ஸாண்டரின் படை வீரர்கள் வைத்திருந்தது 16 அடி குத்தீட்டி. இது சராசரி குத்தீட்டியைவிட 9 அடி நீண்டது. இது மேட்டு நிலத்தில் கடக்க வேண்டிய பதினாறு அடியை குறைத்ததோடு மட்டுமல்லாமல் மேட்டு நிலத்திலிருந்த எதிரிகளை சுலபமாக கையாளவதற்கும் உதவியாக அமைந்துவிட்டது. பார்மீனியோ தவறவிட்ட இந்த சிறு போர் நுணுக்கத்தை அலெக்ஸாண்டர் கனகச்சிதமாக தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டான். கல்யாண வீட்டில் தான் தான் மாப்பிள்ளை , இழவு வீட்டில் தான் தான் பிணம் என்கிற அலெக்ஸாண்டரின் மனோபாவம் இந்தப் போரில் வெட்ட வெளிச்சமானது. தன்னுடைய போர் வெற்றிகளை யாரோடும் பங்கிட்டுக்கொள்ள அலெக்ஸாண்டர் விரும்பியதே கிடையாது. போர் வெறியிலும் , போர் வெற்றியிலும் தனி மனித அதாவது தன்னுடைய ஏகபோகம் என்பதுதான் அவனுடைய சித்தாந்தம். அதே வேலையில் கடை நிலை போர் வீரனையும் அலெக்ஸாண்டர் மதிக்கத் தவறியது கிடையாது. போரில் காயம்பட்ட வீரர்களை தவறாமல் சென்று பார்த்துவருவதும் , அவர்கள் எப்படி காயமடைந்தார்கள் என்று அவர்களை விளக்கச்  சொ

அடங்கா குதிரையும் அலெக்ஸாண்டரின் நிழலும்

Image
Part 2 போரில் வெற்றி என்பது வாழ்வின் மிக உன்னத பெருமை என்பதே சிறுவனாக அலெக்ஸாண்டர் கற்றுக்கொண்ட முதல் பாடம். சிறு வயது முதலே போர் வெறி அவனுடைய தலைக்கு ஏற்றப்பட்டுவிட்டது. பிற்காலத்தில் அவன் நாடு பிடிக்கத் தொடங்கியது இந்த போர் வெறிக்குத் தீணிப்போட மட்டும் தான். பிலிப்புக்கும் அலெக்ஸாண்டருக்கும் இடையில் சில விசயங்களில் உரசல்கள் இருந்தாலும், பிலிப் அவனை ஒரு சக்தி மிக்க அரசனாக வளர்த்தெடுப்பதில் கவனமாக இருந்தான். பிலாட்டோவின் (Plato) மாணவரும், பிலிப்பின் தந்தையிடம் அரச வைத்தியராக இருந்தவரின் மகனுமான அரிஸ்டாடிலை(Aristotle) அலெக்ஸாண்டருக்கு ஆசிரியராக பிலிப் நியமித்தார். பிலிப், பெரிசியா மீது போர்தொடுக்க சமயம் பார்த்துக்கொண்டிருக்க, காலனும் பிலிப்பை முடிக்க காத்துக்கொண்டிருந்தான். கி.மு. 336-ல் பிலிப் தன்னுடைய மெய்காப்பாளர்களில் ஒருவனால் கொலை செய்யப்பட்டார். இந்த  மெய்காப்பாளர் பிலிப்பின் ஆண் காதலரும் கூட. அப்பொழுது பிலிப்பின் வயது 46. அலெக்ஸாண்டரே தன் தந்தையை கொன்றதாக இந்திய வரலாற்று நூல்கள் சில சமயம் முனகுவதுண்டு. ஆனால் அது முற்றிலும் வரலாற்று பிழையான செய்தி. பிலிப் இறந்தவுடன்,  அலெக

அடங்கா குதிரையும் அலெக்ஸாண்டரின் நிழலும்

Image
Part 1 இந்திய திருநாட்டில் வரலாறு என்பது சமையல் கலைப் போல் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. வரலாறு என்ற சட்டியை பொதுவெளி என்ற அடுப்பில் வைத்து தங்களின் ருசிக்கேற்ப மிகை உண்மைகளை மசாலாவாக கலந்து பொங்கி இறக்குவதே நடைமுறையில் வரலாற்று ஆய்வாக முன்வைக்கப்படுகிறது. வரலாற்றுக்கு பன்முகத் தன்மை கொண்ட விமர்சனப் பூர்வமான முகம் உண்டு. பலவீனங்களை, துரோகங்களை, வெற்றிகளை, தோல்விகளை, பச்சோந்திதனங்களை, பேராசைகளை, சுயநலன்களை இப்படி வாழ்வின் அனைத்து அம்சங்களையும் உள்ளது உள்ளபடி எடுத்துவைத்து வாசகர்களின் நியாயமான வாழ்வியல் விமர்சனத்தை தூண்டுவதே நடுநிலையான வரலாற்றின் கடமையாக இருக்க முடியும். இருக்கவேண்டும். ஆனால் நம்மை பிடித்த கேடு, இந்தியாவில் வரலாறு பண்முகத் தன்மை அற்றது. இந்தியர்களைப் பொறுத்தவரை வரலாறுக்கு ஓரு முகத் தன்மை மட்டுமே உண்டு. அது மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் எழுதப்படும் தனிமனித, சமூக வரலாறுகள் அனைத்தும் இந்த ஒரு முகத் தன்மையின் காரணமாக உள்ளீடு இல்லாத உலுத்தப்போன மூங்கில் போல இருக்கின்றது. நாயக வழிபாடே இந்திய வரலாறுகளின் உயிர் நாடி. இந்தியர்களைப் பொறுத்தமட்டில் வரலாற்று

சாயம் வெளுத்த பசுமை

Image
கடந்த பல பத்தாண்டுகளாக இந்திய விவசாயிகளுக்கு மோடி மஸ்தான் வித்தைக் காட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டுவந்த பசுமை புரட்சியின் சாயம் மெல்ல மெல்ல வெளுக்கத் தொடங்கியிருக்கிறது. விளைச்சலை JCB Machine கொண்டு வாரலாம், பூச்சிகள் தொல்லை இனி அரவே இல்லை, வயலுக்கு உரம் போட்டு சட்டை பையில் பணம மரத்தையே கொண்டுவந்துவிடலாம் என்றெல்லாம் இந்திய விவசாயிகளை பாரம்பரிய விவசாய முறையிலிருந்து தகர்த்தெரிந்த பசுமை புரட்சியின் பசுமை வார்த்தைகள் பல்லை காட்டுகின்றன. விவசாயிகள் தாங்கள் ஏமாற்றப்பட்டத்தை உணரத்தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் அதற்கு அவர்கள் கொடுத்த விலை அதிகம். அதிகமோ அதிகம். விளை நிலங்கள் அனைத்தும் வேதியியல் உரங்களால் மலடாகிப் போயி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று வேதியியல் உரங்களே நாம் உண்ணும் உணவு பொருட்களை விளைவிக்கின்றன மண்ணில் உள்ள இயற்கை சத்துகள் அல்ல. பாரம்பரிய சிறு தானியங்களை ஓரம் கட்டிய பசுமை புரட்சி நம் வயிற்றை அரிசியையும், கோதுமையையும் அரைக்கும் அரவை இயந்திரங்களாக மாற்றிவிட்டது. கேழ்வரகு, கம்பு, குதிரைவாலி போன்ற நம்முடைய பாரம்பரிய சிறு தானிய உணவுகள் அழியும் தருவாயில் இருக்க நாம் OATS விரும்பி வே

தண்ணீர் தண்ணீர்

Image
ஆட்டை கடித்து மாட்டை கடித்து இறுதியில் நம் வீட்டு கிணற்றையும் கடித்து விட்டது தனியார்மயமாக்கல். நீர் மேலாண்மை திட்டம் 2012-ன் படி இனி தண்ணீர் இந்தியாவில் விற்பனைக்கு உரிய பொருள். விற்பனைக்கு உரிய பண்டம் என்றால் பொது மனித பா வனைக்கு இனி தண்ணீர் கிடையாது என்பது உள் அர்த்தம். இனி விருப்பம் போல உங்கள் வீட்டு கிணற்றிலிருந்தோ, ஆழ் துளை குழாயிலிருந்தோ நீரை அள்ளி தெளிக்க முடியாது. வளர்ச்சி என்கிற பெயரில் உள்ளே நுழைந்த தாராளமயமாக்கலும், உலகமயமாக்கலும் இன்று நம்முடைய அடிப்படை பிறப்பு உரிமையான தண்ணீரை காவுகேட்கின்றன. நதிகளில் பொங்கி பிரவாகம் எடுக்கும் தண்ணீர் இனி நதிகளுக்கே சொந்தம் கிடையாது. பாகாசுர தனியார் கும்பெனியின் உற்பத்தி பொருள் நதிகளின் வெள்ள பெருக்கு. நம்மை ஆள்கிறவர்கள் நம்முடைய அடிப்படை உரிமையான நீரை காவுகொடுக்க முன்வைக்கும் காரணம் இந்திய குடிமக்களுக்கு தண்ணீர் மேலாண்மை குறித்த புரிதலும், அறிவும் இல்லை என்பதான். அதிலும் முக்கியமாக விவசாயிகளுக்கும் நீர் மேலாண்மைக்கும் காதா தூரம் என்கிறார்கள். நீரின்றி அமையாது உலகு என்று சொன்ன விவசாயிக்கே நீர் மேலாண்மை குறித்த அறிவே கிடையாது என்பது பிரிய