Posts

Showing posts from September 9, 2012

‘எதிர்ப்போ......ம் ஆனா...... எதிர்.....க்க மாட்டோம்’

Image
நேற்று இரவு புதிய தலைமுறையில் கூடங்களும் அணு உலை தொடர்பாக மீண்டும் ஒரு விவாதம் நடந்தது. இதில் கம்யூனிஸ்டுகளின் சார்பாக ராமநாதன் கலந்துகொண்டார். ராமநாதன் இந்த விவாதத்தில் கலந்துகொள்ளாமலேயே இருந்திருக்கலாம். அந்த அளவிற்கு அவரே அவர்களுடைய கொள்கைகளை நாறடித்துகொண்டார். நாம் கம்யூனிஸ கொள்கைகளுக்கு எதிரானவர்கள் கிடையாது. ஆனால் தற்பொழுது இந்தியாவில் செயல்படும் பொலிட் பியூரோவை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. கம்யூனிஸ்டுகள் தாங்களே தங்களை இந்தியாவை ஆளும் தகுதியிலிருந்து தள்ளிவைத்துகொள்ளுகிறார்கள். ரஷ்யா எது செய்தாலும் அதற்கு கண்மூடித்தனமான ஆதரவு ஆனால் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளுக்கு எதிர்ப்பு. ரஷியாவும் கூட இன்றைக்கு வல்லரசு நாடுகளைப் போல பெரு முதலாளிகளின் நலனைத்தான் முதன்மையாக பார்க்கிறது என்பதை இந்திய கம்யூனிஸ்டுகள் ஏற்க மறுப்பது வேதனை சிரிப்பைதான் வரவழைக்கிறது. நேற்று பேசிய ஜி. ராமநாதன் ரஷ்ய அணு உலைகள் மிகவும் பாதுகாப்பானது அதை ஆதரிப்பது கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு அதே சமயத்தில் அமெரிக்கா இந்தியாவிற்குள் கொண்டுவர இருக்கும் அணு உலைகளை எதிர்கிறோம், எதிர்ப்போம் என்றார். அ

காவிரி புகும் இடத்தில் துலைந்த சுவடுகள்

Image
மனித நாகரீகம் தான் கடந்து வந்த பாதைகளில் மறக்க முடியாத அதே சமயத்தில் ஆச்சரியமான பல நகரங்களை உருவாக்கியிருக்கிறது. சுமேரியர்களின், பாபிலோன் நகரம் பல ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் உள்ளடக்கி இருந்தது. வல்லரசு அடையாளத்தை இந்த பாபிலோன் நகரம் வரலாறு முழுவதும் சுமந்து திரிந்திருக்கிறது. வரலாற்று காலத்து உலக அதிசயங்களில் ஒன்றான தொங்கும் தோட்டம் இந்த நகரில்தான் இருந்தது. பைபிலிலும் கூட இந்த நகரத்தின் பிரம்மாண்டம் குறித்த செய்திகள் உண்டு. மேலை எகிப்தில் ( Upper Egypt) தோன்றி கீழை எகிப்தில் (Lower Egypt) முடியும் நைல் நதியின் இருகரை நெடுக எகிப்தியர்கள் பல நகரங்களை கட்டி எழுப்பியிருந்தாலும், மத்தியத் தரைகடல் பகுதியில் நைல் நதியின் கழிமுகத்தில் அலெக்ஸாண்டரால் தோற்றுவிக்கப்பட்ட அலெக்ஸாண்டிரியா நகரம் வரலாற்றில் மிக அழுத்தமான ஒரு அடையாளத்தை பதிவு செய்தது. உலகம் அதுவரை கண்டிராத ஒரு நூலகத்தை அலெக்ஸாண்டர் அந்த நகரத்தில் கட்டியெழுப்ப திட்டமிட்டு அது நிறைவேற்றபட்டது. அன்றைய காலகாட்டத்தில் அதாவது இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வல்லரசாக இருந்த அனைத்து நாடுகளின் அறிவு சொத்துகளும், மிக நீ

வையகத்து கோமான்கள் (வை.கோ)

தமிழகத்தின் பல போராட்ட களங்கள் இன்று அறிந்திருக்கும் ஒரு வார்த்தை வை.கோ. தெற்கில் கூடங்குள போராட்டம் தொடங்கி வடக்கில் ராஜபக்சே இந்திய வருகை என்று அனைத்து போராட்ட களங்களிலும் போராடுபவர்களுக்கு உறுதுணையாக ஆதரவு குரல் கொடுப்பது மட்டுமில்லாமல் தமிழர்களின் உணர்வுகள் சார்ந்த போராட்டங்களை கட்டமைத்தும்வருகிறார். தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் (விடுதலை புலிகள் மற்றும் நாம் தமிழர் கட்சிகள் நீங்களாக) சுப. உதயகுமாரனை ஒரு தீவிரவாதிபோலவும், தமிழகத்தின் அமைதியை குலைப்பவர் போலவும் சித்தரித்து வரும் நிலையில், வை.கோ அவர்கள் ஆரம்பம் தொட்டு உதயகுமாரனுக்கு ஆதரவு குரல் கொடுத்துவருகிறார். இங்கே நாம் ஒன்றை கவனிக்க வேண்டியிருக்கிறது. வை.கோ, உதயகுமாரனுக்கு ஆதரவு குரல் கொடுத்தவருகிறார் என்று குறிப்பிடுகிறோம். காரணம் மிகவும் வெளிப்படை, இதன் அர்த்தமும் வெளிப்படை அது வை.கோ இன்னொருவர் வென்றெடுத்த போராட்டதில், அரசியல் லாப குளிர் காய விரும்பவில்லை என்பது. வை.கோ உணர்வுப்பூர்வமாக கூடங்குள மக்களின் பின்னியில் இருக்கிறாரே தவிர அந்த சாதாரண மக்களின் போராட்டத்தை தனிப்பட்ட ஓட்டு வேட்டையாக வென்றெடுக்க விரும்ப

மண்ணில் புதைந்த பால்நிலாவின் வெளிச்ச சிதறல்கள்

Image
அது 1880-களின் தொடக்கம். கிழக்கு பாகிஸ்தானில் லாகூர், ராவில்பிண்டி இடையே உச்சி வெயிலில் ரயில் பாதை அமைத்துகொண்டிருந்த அந்த தொழிலாளர்கள் தீடிரென்று ரயில் பாதை வேலையை அப்படியே போட்டது போட்டபடி நிறுத்திவிட்டார்கள். அங்கே அவர்கள் பார்த்த காட்சி அவர்களை முற்றிலும் குழப்பிவிட்டது. மேற்கொண்டு என்ன செய்வது என்றே அவர்களுக்கு புரியவில்லை. அந்த திட்டத்தின் பொறியாளர் மண்டைய திறக்கும் வெயிலையும் கூட பொருட்படுத்தாமல் அடித்துபிடித்துகொண்டு அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார். அவரும் தன்னுடைய வாழ் நாளில் அப்படி ஒரு காட்சியை கண்டதில்லை. வெள்ளை மேலதிகாரிகளுக்கு தகவல் பறந்தது. அது லண்டனில் பிரதிபலித்து, பிரிட்டீஸ் இந்திய தொல்லியல் துறையின் இயக்குனர் அலெக்ஸாண்டர் கன்னிங்கம் அங்கு வந்து சேர்ந்தார். அந்த நொடியிலிருந்து மண்ணில் புதைந்து கிடந்த அரப்பா மற்றும் மோகஞ்சதரோ நகரங்களை உள்ளடக்கிய சிந்து நாகரீகத்தின் ரகசியங்கள் வெளி உலகிற்கு தெரியத்துவங்கின. ஆரியமே இந்தியா, இந்தியாவே ஆரியம் என்று கற்பனை செய்துகொண்டிருந்தவர்களின் தலையில், முதல் இடி இறங்கிய தருணமும் இதுதான். இந்தியாவின் வரலாறு ஆரியர்களின் வருகையோடுத