Posts

Showing posts from March 24, 2013

பிண்டமே அண்டம், அண்டமே பிண்டம்

Part 1 'வரும் காலம் வசந்த காலம்' என்று நற்செய்தி சொன்ன நம்முடைய ஆட்சியாளர்கள், தாராளமயமாக்கலுக்கும், உலகமயமாக்கலுக்கும் இந்தியாவின் நான்கு திக்கு கதவுகளையும் அகல திறந்துவிட்டார்கள். நம்முடைய பொருளாதார மெஸியாக்களான மன்மோகன் சிங்கும், சிதம்பரமும் இந்தியா, உலக பெரு நிறுவனங்களின் நுகர்வுப் பொருளாக மாறுவதும், தொடர்ந்து அப்படியே இருப்பதும் இந்தியர்களின் மோட்சத்திற்கான ஒரே வழி என்று தீர்க்கதரிசனம் சொன்னார்கள். அவர்களுடைய சிஷியப் பிள்ளைகளான வளர்ச்சி விரும்பிகளும் தங்களுடைய நாக்குளில் பச்சை மிளகாயைத் தடவிக்கொண்டு கிளிகள் போல கடந்து இரு பத்தாண்டுகளாக அதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை தரத்தை உயர்த்தவேண்டிய வளர்ச்சி, வாழும் தரத்தை மேலும் மேலும் குறைத்துக்கொண்டிருக்கிறது. ரத்தக் கொதிப்பும், சர்கரையும் இன்று சமநிலை சமுதாயத்திற்கான குறியீடுகளாக மாறிவிட்டது. மனிதகுலத்தை மீட்டெடுக்க வந்த நவீன மருத்துவம் இன்றைக்கு பாகாசுர கம்பெனிகளின் பணத் தோட்டமாகிவிட்டது. ஒருவகையில் நவீனம் என்று சொல்லப்படும் இன்றை மருத்துவம் செயற்கையே. பக்க விளைவுகள் இல்லா மருத்துவம் என்பது இன்றை