மின்னூல்.....தென்னமெரிக்க தமிழர்கள்

To buy the Ebook
https://www.instamojo.com/DavidJpillai/7d495604a2791510327dfb6f3a7cf267/

ஸ்பானியர்கள் அமெரிக்கக் கண்டம் என்கிற புதிய உலகை (New World) கண்டுபிடித்த பிறகே, அதில் ஐரோப்பியர்கள் குடியேறிய பிறகே அந்த மண்ணில் கலாச்சாரம் என்பது தோன்றியது என்பதைப் போலவும், அந்த மண்ணின் பூர்வக் குடி மக்கள் காடுகளில் வாழ்ந்த அடிப்படை நாகரீக வளர்ச்சியையும் கூட அடைந்திருக்காத மக்கள் என்பதைப் போன்ற பொதுப்புத்தி தோற்றத்தைத் தலையைச் சுற்றித் தூக்கி எறியவே இந்தப் புத்தகம்.

அமெரிக்கக் கண்டம் என்று ஒட்டுமொத்தமாகக் குறிப்பிட்டாலும் அதில் வடக்கு தெற்கு என்று இரண்டு பெரும் கண்டங்கள் இருக்கின்றன. அவைகளை இணைக்கும் இடை நிலப்பகுதியும் உண்டு. வடக்கு கண்டம் இன்றைக்கு அமெரிக்கா என்றும் தெற்கு கண்டம் தென்னமெரிக்கா என்றும் இடைநிலை பகுதி மெக்சிக்கோ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மூன்று நிலப்பகுதிகளுக்கும் தனித் தனியே இன, மொழி, கலாச்சார வரலாறுகள் உண்டு. இந்தப் புத்தகத்தில் மீசோ அமெரிக்க நாகரீகம் என்று அழைக்கப்படும் இடைப்பகுதி மெக்சிக்க நாகரீகம் குறித்து மாத்திரமே பார்க்க இருக்கிறோம்.


மீசோ அமெரிக்கக் நாகரீகமே ஓட்டுமொத்த அமெரிக்க கண்டத்தின் மிகப்பெரும் அதே சமயத்தில் மிகத் தொன்மையான நாகரீகம் என்பதால் அதைக் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியம். சரி மீசோ அமெரிக்காவிற்கும் தமிழர்களுக்கும் என்ன தொடர்பு? ஏன் இந்தப் புத்தகத்திற்கு அப்படியான ஒரு தலைப்பு என்பதற்கான பதிலைப் புத்தகத்தைப் படிக்கும்போது நீங்களே உணர்ந்துகொள்வீர்கள். அமெரிக்கக் கண்டத்தை முதன் முதலில் கண்டுபிடித்தது யார் என்கிற கேள்விக்கான பதிலைத் தேடிய படித்தான் இந்தப் புத்தகத்தைத் தொடங்கியிருக்கிறேன்.





Comments

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

களப்பிரர் என்னும் கலி அரசர்

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....