Posts

Showing posts from August 5, 2012

நடுநிலை வரலாறு இங்கே விற்பனைக்கு

முஸ்லிம் படையெடுப்புகளையும், முஸ்லிம் படையெடுப்பாளர்களையும் மிகவும் வன்மையாக சித்தரிப்பது இந்திய வரலாற்றின் பண்பு. சிறுபிள்ளைகளின் வரலாற்று பாட புத்தகம் முதல் கல்லூரி வரலாற்று துறைகள் வரை இந்த பண்பை மறைமுகமாக காணமுடியும். முஸ்லிம் படையெடுப்புகளால் இந்திய சமூகம் பாதிக்கப்பட்டுவிட்டதைப் போன்ற தோற்றம் நமது வரலாற்றை சுற்றி கட்டமைக்கப்படுகிறது. இது மிகவும் ஆழ்ந்து நோக்கப்பட வேண்டிய விசயம். இந்த விதமான படையெடுப்புகளைக் குறித்த பின்னனித் தகவல்கள் மிகவும் முக்கியமாகின்றன. மேலும் அக்காலத்திய போர் முறைகளையும், போர் முறைகள் சார்ந்த நடவடிக்கைகளின் பின் விளைவுகளையும் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் அவைகள் எல்லாம் காற்றில் விடப்படுகின்றன. இந்த கட்டுரையில் நாம் ஒட்டுமொத்த முஸ்லிம் படையெடுப்புகளையும் பார்க்கப் போவதில்லை. தென்னிந்தியாவில், அதிலும் முக்கியமாக தமிழகத்தில் நடந்த முஸ்லிம் படையெடுப்பின் தொடக்கத்தையே பார்க்கப் போகிறோம். தென்னிந்தியாவில் முஸ்லிம் படையெடுப்பால் ஏற்பட்ட வரலாற்று நிகழ்வுகள் குறித்து ‘ மதுர விஜயா ’ என்கிற புத்தகம் பேசுகிறது. இது எழுதப்பட்ட காலம் கி.பி. 13 ஆம்