Posts

Showing posts from June 18, 2017

உலக சினிமாக்களின் திரைக்கதை அமைப்புக்கள்....

உலக சினிமாக்களின் திரைக்கதை அமைப்புக்கள்.... புத்தகத்தின் முன்னோட்ட சிறு துளி.... "பின்கட்டமைப்பு வாதம் (Poststructuralism) அறுபதுகளுக்கு பின்பும் எழுபதுகளின் தொடக்கத்திலும் கவனம் பெற்று தலையெடுக்கத் தொடங்கியது பின்கட்டமைப்பு வாதம். கட்டமைப்பு வாதத்தின் உட் பிரிவு, கிளை பிரிவு, மற்றொரு பகுதி, அதின் ஒரு பாகம் என்று எப்படி வேண்டுமானாலும் பின்கட்டமைப்பு வாதத்தை வகைப்படுத்த முடியும். அதே சமயத்தில் கட்டமைப்பு வாதத்திற்கு எதிரான போக்கை கொண்டது பின்கட்டமைப்பு வாதம் என்றும் சொல்ல முடியும். கட்டமைப்பு வாதத்தை போலவே பின்கட்டமைப்பு வாதமும் மொழியியலை அடிப்படையாக கொண்டிருந்தாலும் சில அடிப்படை கருத்து நிலைகளில் அது கட்டமைப்பு வாதத்திலிருந்து வேறுபட்டு நிற்க கூடியது. யதார்த்த உலகிற்கும், மனித வாழ்வியலுக்கும் அதை குறிப்பிட பயன்படுத்தப்படும் மொழிக்கும் உள்ள வித்தியாசத்தையும் (signifier & signified), வார்த்தைகள் தனக்கு முன் மற்றும் பின் இருக்கும் வார்தைகளில் இருந்தும் தனக்கான அர்த்தங்களை பெறுகிறது, மொழிக்கும் முன்பே இருத்தல் (presence – உலக படைப்புக்கள் அனைத்

உலக சினிமாக்களின் திரைக்கதை அமைப்புக்கள்....

Image
உலக சினிமாக்களின் திரைக்கதை அமைப்புக்கள்: An Introductory To Next Gen Screenwriting.... புத்தகத்தின் முன்னோட்ட சிறு துளி... "இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரையில் (அதாவது 1960-களுக்கு முன்பு வரை) இலக்கியமாக கருதப்படும் எழுத்துக்களில் சமகால அரசியலின் பிரதிபலிப்பை விமர்சன ரீதியில் தேடுவதும் ஆராய்வதும் வாசிப்பு அனுபவத்திற்கு இடையூறை ஏற்படுத்துவதாக இருக்கும் என்கிற எழுதப்படாத நம்பிக்கை பரவலாக நடைமுறையில் இருந்தது. இந்த நம்பிக்கையை உடைத்துக்கொண்டு உருவெடுத்தது எழுத்துக்களின் அரசியல் விமர்சனம். பின்கட்டமைப்புவாத (Poststructuralism) காலக்கட்டத்தில் (1980-களுக்கு பிறகு) எழுத்துக்கள் பிரதிபலிக்கும் சமூக-அரசியல் சூழ்நிலை என்பது பழமை வாதமாக பார்க்கப்பட்டாலும் விமர்சன கலையில் அவைகளுக்கான இடம் முற்றிலுமாக மறுக்கப்படவில்லை. மேற்கை பொருத்தவரையில் எழுத்துக்களின் சமூக-அரசியல் பிரதிபலிப்பு என்பது மூன்று நிலைகளில் வெளிப்படுகிறது. அவை மார்க்ஸ்சிசம், பெண்ணியம் மற்றும் இன வாதம் (வெள்ளை – மற்ற இனங்கள்). நம்மை பொருத்தவரையில் இனவாதம் என்பது இரண்டு கிளைகளாக பிரியக் கூடியது. திராவிடம் மற்றும் தலித்