Posts

Showing posts from May 27, 2012
கார்ப்பரேட் இன்றி அமையாது உழவு. பசுமை புரட்சி. கேட்பதற்கும், உச்சரிப்பதற்கும் மிகவும் கவர்ச்சிகரமான வாக்கியம். படித்தவர்களுக்கு என் நேரமும் ஆரோக்கியம் தரக்கூடிய பாதுகாப்பான உணவு உற்பத்திக்கான தாரக மந்திரமாகவம், படிக்காதவர்களுக்கு வழக்கம் போல விளங்காத மூடு மந்திரமாகவும், உழைத்து அன்றாடம் காய்ச்சிப் பிழைப்பவர்களுக்கு திருமந்திரமாகவும், மேலாக விவசாயிகளுக்கு ரசவாத மந்திரமாகவும் ஒளித்த, ஒளிக்க வைக்கப்பட்ட வார்த்தை பசுமை புரட்சி. இயற்கையோடு ஒத்துழைத்து, அதின் காலச்சக்கரத்திற்கு தகுந்தகடி அமைந்து வளமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்த இந்திய தீபகர்பத்தின் விவசாயமுறையை மேலும் மேலும் வலப்படுத்த போவதாக கூறிக்கொண்டு இந்திய ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பசிரோக நிவாரணி இந்த கவர்ச்சிகரமான பசுமை புரட்சி. ஒவ்வொரு ஐந்தாண்டுகாலப் பத்தாண்டுகால பசுமை புரட்சித் திட்டங்களும், ஓவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் ஆரோக்கியமான உணவு அளிப்பதோடு நாட்டின் (இல்லாத) தானியக் கிடங்குகளையும் போதும் போதும் என்று சொல்கிற அளவிற்கு நிரப்பும் என்று நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் விவாதிக்கப்பட்டதும் இல்லாமல்,
ஜான் ஆபிரஹாம் – கலகக்கார கழுதை. சினிமா என்னும் அற்புத விளக்கைத் தமிழ் நாட்டில் தேய்த்தத் தொடக்கக் காலத்திலிருந்து தறபோது வரை அதன் இயங்கியல் எப்படி இருக்கிறது? சினிமாவின் தாக்கம் எப்படி உணரப்பட்டிருக்கிறது? உணர்த்தப்பட்டிருகிறது? சினிமா கலை ஊடகமா அல்லது பணம் காய்க்கும் கற்பக மரமா அல்லது புகழ் வெளிச்சத்தில் ஒரு சிலரை நனைத்தெடுக்கும் மந்திர விளக்கா? இப்படி தமிழ் சினிமாவைக் குறித்து பலக் கேள்விகளை முன்வைத்துக்கொண்டே போகலாம். உண்மையில் சினிமாவிற்கு ஏன் இந்த ஈர்ப்பு? இந்த கேள்விக்கு மிக எளிதாக பதில் சொல்லிவிடலாம். அது மனிதனின் மனவியலோடு தொடர்புடையது. சினிமா மிகவும் வலிமையாக இருப்பதற்கும் இதுவே காரணம். அது என்ன மனவியல்பு? கதை கேட்டல் மற்றும் கதை சொல்லல் . மனித இனம் பூமியில் தோன்றிய காலம் தொட்டு இன்றுவரை ஒரிடத்தில் ஒன்று சேர்வதறகு அவன் கடைபிடிக்கம் ஒரு விசயம் கதைகேட்பது. வேட்டையாடியாக நாகரிகத்தைத் தொடங்கிய மனிதன் கூடவே கதைப்பதையும் தொடங்கிவிட்டான். வேட்டை முடிந்து, நட்சத்திரங்களும் நிலவும் மின்னும் அற்புத இரவுகளில் நெருப்பை மூட்டி சுற்றி அமர்ந்து கதை கேட்க்கும் பழக்கத்தை மனிதன்