தென்னமெரிக்க தமிழர்கள்

இப்பொழுது எழுதிக்கொண்டிருக்கும்....."தென்னமெரிக்க தமிழர்கள்" புத்தகத்தின் சிறு துளி....

சோளம், அவக்காடா, கொக்கோ, ஸ்குவாஷ் பழ வகைகளை பருவ காலங்களில் விளைவித்து உணவு பொருளாக பயன்படுத்திவிட்டு வருடத்தின் மற்ற நாட்களில் இடம் பெயர்ந்து வேட்டையின் மூலம் கிடைக்கும் உணவுப் பொருட்களை பயன்படுத்தும் பாதி நிலையாக தங்குதல் மீதி இடம் பெயர்ந்து செல்லுதல் என்கிற வாழ்கை முறையே கி.மு. 2000 வரை நிலைத்திருந்தது. நிலையான விவசாய கிராம குடியிருப்புக்களுக்கான எத்தகைய தொல்லியல் ஆதாரங்களும் கி.மு. 2000 காலக்கட்டப் பகுதிவரை மெக்சிக்கோவின் எந்த ஒரு நிலப்பகுதியிலும் கிடைத்தப்பாடில்லை.

இந்த நிலையில் திடீரென்று கி.மு. 1200-ல் ஓல்மெக் பேரரசின் முதல் தலைநகரான சான் லோரன்சோ (San Lorenzo) வரலாற்றின் வெளிச்சத்திற்கு வருகிறது. நிலையான குடியிருப்புக்கள், குடியிருப்புக்களின் தொகுப்பாக கிராமங்கள், கிராமங்களின் தொகுப்பாக வணிக நகரங்கள் பிறகு தலைநகரம் என்கிற விவசாய நாகரீகத்திற்கே உரிய படி நிலை வளர்ச்சியில் இல்லாமல் வானத்திலிருந்து உருண்டு வந்ததைப்போல சான் லோரன்சோ உருப்பெற்றது இன்றைக்கு வரை வரலாற்று புதிர்களில் ஒன்றாக இருக்கிறது.

இந்த புதிரை அவிழ்க்க கூடிய அனைத்து புற காரணிகளும் மற்ற நாகரீகங்களிடமே இருக்கிறது. அதாவது தமிழ், எகிப்து மற்றும் சுமேரிய நாகரீகங்களிடம். இதே காலக்கட்டத்தில் அதாவது கி.மு. 1200 வாக்கில் இந்த மூன்று நாகரீகங்களும் வளர்ச்சியின் முதிர்வு நிலையில் இருந்தன. தமிழ், எகிப்து மற்றும் சுமேரிய நாகரீகங்களிடையே வணிகத் தொடர்புகளும் இருந்தன. அதிலும் தமிழ் நாகரீகத்தின் கை ஓங்கியே இருந்தது. அதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று கடல் வழி பயண அறிவு மற்றும் அனுபவம். எகிப்து மற்றும் சுமேரிய நாகரீகங்களை விட தமிழ் நாகரீகமே கடல் வழி வணிகத்தில் முன்னிலையில் இருந்தது.

தமிழ் நாகரீகத்தின் கடலோடும் அனுபவத்திற்கு உதாரணம் மணி கிராமத்தார், அஞ்சுவண்ணத்தார், சித்திரமேழி பெரிய நாட்டவர், திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர், எண்பேராயம் போன்ற தமிழர்களின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு வணிக அமைப்புக்கள். (இந்த அமைப்புக்கள் குறித்து போன அத்தியாயத்தில் விரிவாக பார்த்திருக்கிறோம்). எகிப்து மற்றும் சுமேரிய நாகரீகங்களிடம் இப்படியான கடலோடும் வணிக அமைப்புக்கள் இருந்ததற்கான எத்தகைய ஆதாரங்களும் இல்லை. ஆக நடு கடலில் பயணம் செய்து கண்டங்களை கடக்கும் திறமை என்பது தமிழ் நாகரீகத்திற்கு மாத்திரமே உரிய ஒன்று.

தமிழ் நாகரீகம் தன்னுடைய உற்பத்தி பொருளுக்கான வணிக சந்தைக்காக  வேண்டி எகிப்து மற்றும் சுமேரிய நாகரீகங்களுடன் தொடர்பில் இருந்ததும், தன்னுடைய வணிக நடவடிக்கைகளுக்காக வேண்டி சுமேரியாவில் ஊர் மற்றும் ஊர்க் என்கிற இரண்டு பழங்கால நகரங்களை (சுமேரிய நாகரீகத்தின் முதல் இரண்டு முக்கிய நகரங்கள் இவைகள் என்பதும் இங்கே மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. கி.மு. 3000 வாக்கில் உருவாக்கப்பட்டவைகள்.) உருவாக்கியிருக்கிறது என்பதும் தொல்லியல் ஆதாரங்களின் வழி வரலாற்று உண்மையாக நிறுவப்பட்ட ஒன்று.

உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்வதற்கான வணிக சந்தைகளை தேடி அலைந்த தமிழர்களின் வணிக கப்பல்கள் எகிப்து மற்றும் சுமேரிய நாகரீக நிலப்பகுதிகளை அடைந்ததுடன் மாத்திரம் நின்றுவிடாமல் இந்திய மற்றும் அட்லாண்டிக் பெருங் கடல்களை கடந்து மீசோ அமெரிக்க நிலப்பகுதிகளுடனும் தன்னுடைய வணிக தொடர்பை விரிவுப்படுத்தியிருந்திருக்கிறது.

Comments

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

களப்பிரர் என்னும் கலி அரசர்