தென்னமெரிக்க தமிழர்கள்.....சிறு துளி....



"சிற்ப கலை, கட்டிடக் கலை, நாள்காட்டி, எழுத்து வடிவம், இராணுவம் என்று முதிர்ந்த நகர கலாச்சாரம் ஒன்றிற்கான அனைத்து அடையாளங்களையும் கொண்டிருந்தது ஓல்மெக் கலாச்சாரம். ஒன்பதிலிருந்து பதினொரு அடி உயரமும் சுமார் இருபது டன் எடையும் கொண்ட தலை சிற்பங்கள் (Olmec colossal heads) ஓல்மெக் நாகரீகத்தின் சிற்பக் கலை நேர்த்திக்கும் முதர்ச்சிக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. ஓல்மெக் நாகரீகம் பரவியிருந்த நிலப்பகுதி முழுவதிலுமிருந்து இதுவரை பதினேழு தலை சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.

பாசால்ட் பாறையில் செதுக்கப்பட்டிருக்கும் இவைகள் உருவாக்கப்பட்டதற்கான நோக்கமும் காரணமும் இதுவரை பிடிபடவில்லை. ஓல்மெக் நாகரீக மர்மங்களின் பட்டியலில் இதையும் இணைத்துக்கொள்வதை தவிர இப்போதைக்கு ஆய்வாளர்களுக்கு வேறு வழி இருப்பதாக தெரியவில்லை. தலை சிற்பங்களின் உருவ அமைப்புக்களை கொண்டு அவைகள் ஆப்பிரிக்க நீக்ராய்ட் இன மக்களை குறிக்கிறது என்று ஒரு பிரிவு ஆய்வாளர்களும், ஆஸ்டிலராய்ட் (தமிழ்) இன மக்களின் மண்டையோட்டு தன்மைகளை கொண்டிருப்பதாக மற்றொரு பிரிவு ஆய்வாளர்களும் இரு வேறு கருத்துக்களை முன் வைக்கிறார்கள்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த எந்த ஒரு ஆப்பிரிக்க இனமும், எகிப்தியர்கள் உட்பட பெருங் கடல்களை கடக்கும் கடல் பயண அனுபவத்தில் தேர்ச்சிப்பெற்றவர்களாக இருக்கவில்லை. அதிலும் நடுக்கடல் பயணம் என்பதை அன்றைய ஆப்பிரிக்க கண்ட மக்களால் நினைத்தும் பார்க்க முடியாது சங்கதி. அப்படியிருக்க ஆப்பிரிக்க இன மக்கள் கி.மு. 1200 வாக்கில் ஓல்மெக் நிலத்தில் கால்பத்திருப்பார்கள் என்பது ஏற்றுக்கொள்ளும்படியானதாக இல்லை. சுமார் கி.மு. 3000 தொடங்கி கி.பி. 700-கள் வரை கடல் பயணத்தில் – முக்கியமாக நடுக்கடல் பயணத்தில் – கொடிக்கட்டிப் பறந்தவர்கள் தமிழர்கள் மாத்திரமே. ஓல்மெக் தலை சிற்பங்கள் தமிழ் மாலுமிகளை சித்தரிப்பதற்கும் வரலாற்று ரீதியிலான வாய்ப்புக்கள் மிக அதிகம்.

ஓல்மெக் நாகரீகத்தின் அடுத்த மிக முக்கிய கண்டுபிடிப்பு மற்றும் பங்களிப்பு நாள்காட்டி. லாங் கவுன்ட் (Long Count), ஹாப் (Haab), சோல்கின் (Tzolkin), கேலண்டர் ரவுண்ட் (Calendar Round) மற்றும் வீனஸ் ரவுண்ட் (Venus Round) என்று ஐந்து விதமான நாள்காட்டி முறையை பின்பற்றியிருக்கிறார்கள் ஓல்மெக்குகள். இவைகளையே பின்னால் வந்த மாயன்களும், ஏஸ்டெக்குகளும், சோப்போடெக்குகளும் பயன்படுத்திக்கொண்டார்கள். மற்ற இரண்டு (எகிப்து மற்றும் மெசப்பட்டோமியா) நாகரீகங்களின் நாள்காட்டி முறையிலிருந்து வேறுப்பட்டது ஓல்மெக் நாள்காட்டி முறை. இதுக் குறித்து விரிவாக மாயன் நாகரீகத்தில் பார்ப்போம்.

ஓல்மெக் நாள்காட்டி 11 ஆகஸ்ட் 3114 கி.மு. (சில ஆய்வாளர்கள் 13 ஆகஸ்ட் என்று அனுமானம் செய்கிறார்கள்)-விலிருந்தே உலக கணக்கை தொடங்குகிறது. இதற்கு காரணம் என்ன என்பது வழமைப்போல மற்றொரு ஓல்மெக் புதிர். மிக சரியாக இதே காலக்கட்டத்தில் அதாவது கி.மு. 4000-3500-களில் சுமேரியாவின் ஊர் மற்றும் ஊர்க் நகரங்களை தமிழ் கடலோடிகள் தங்களுக்கான வணிக நகரங்களாக உருவாக்கினார்கள் என்பதை இங்கே ஒப்பிட்டு பார்க்க வேண்டியது அவசியமாகிறது. ஓல்மெக் நாகரீகத்தின் சான் லோரான்சோவை தமிழ் கடலோடிகள் தங்களுக்கான வணிக நகரமாக - அதாவது கிராமமாக – கி.மு. 3114 ஆகஸ்ட், 11-ல் உருவாக்கியிருந்திருக்க வேண்டும்.

தென்னிந்தியாவுடன் தொடர்ந்த இரண்டாயிரம் ஆண்டு கால வணிகத் தொடர்பின் காரணமாக கி.மு. 1200 சான் லோரான்சோ ஓல்மெக் நாகரீகத்தின் முதல் நகரமாக பரிணமித்திருக்க வேண்டும். இப்படி நிகழ்வதற்கான வரலாற்று முன்னுதாரணங்கள் இல்லை என்று யாராலும் மறுத்துவிட முடியாது. பல ஆயிரம் ஆண்டுகால தென்னிந்திய வணிகத்தின் காரணமாக எகிப்திய நாகரீகத்திலும், மெசப்பட்டோமிய மற்றும் கிரேக்க, ரோமானிய நாகரீகங்களிலும் தமிழர்களின் வணிக நகரங்கள் உருவாக்கப்பட்டிருப்பதும், அதேப்போல தென்னிந்திய பகுதிகளில் கிரேக்க மற்றும் ரோமானிய வணிக குடியிருப்புக்கள் இருந்தமையும் தமிழ் கடலோடிகளின் கொண்டு கொடுத்த (நாகரீகத்தையும் கலாச்சாரத்தையும்) செயல்பாட்டிற்கான உதாரணங்கள்.



உருவாக்கியவர்களே அழித்துவிட்ட புதிரோடு ஓல்மெக் நாகரீகம் முடிவிற்கு வந்துவிட்டாலும் மீசோ அமெரிக்க மண்ணில் நாகரீகங்களுக்கு குறைவே கிடையாது. ஓல்மெக் நாகரீகத்துடன் சம காலத்தில் தலையெடுத்த மற்றொரு நாகரீகம் மாயன் நாகரீகம். யார் மாயன்கள்?"

Comments

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

களப்பிரர் என்னும் கலி அரசர்