பிண்டமே அண்டம், அண்டமே பிண்டம்

Part 1

'வரும் காலம் வசந்த காலம்' என்று நற்செய்தி சொன்ன நம்முடைய ஆட்சியாளர்கள், தாராளமயமாக்கலுக்கும், உலகமயமாக்கலுக்கும் இந்தியாவின் நான்கு திக்கு கதவுகளையும் அகல திறந்துவிட்டார்கள். நம்முடைய பொருளாதார மெஸியாக்களான மன்மோகன் சிங்கும், சிதம்பரமும் இந்தியா, உலக பெரு நிறுவனங்களின் நுகர்வுப் பொருளாக மாறுவதும், தொடர்ந்து அப்படியே இருப்பதும் இந்தியர்களின் மோட்சத்திற்கான ஒரே வழி என்று தீர்க்கதரிசனம் சொன்னார்கள். அவர்களுடைய சிஷியப் பிள்ளைகளான வளர்ச்சி விரும்பிகளும் தங்களுடைய நாக்குளில் பச்சை மிளகாயைத் தடவிக்கொண்டு கிளிகள் போல கடந்து இரு பத்தாண்டுகளாக அதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை தரத்தை உயர்த்தவேண்டிய வளர்ச்சி, வாழும் தரத்தை மேலும் மேலும் குறைத்துக்கொண்டிருக்கிறது. ரத்தக் கொதிப்பும், சர்கரையும் இன்று சமநிலை சமுதாயத்திற்கான குறியீடுகளாக மாறிவிட்டது.

மனிதகுலத்தை மீட்டெடுக்க வந்த நவீன மருத்துவம் இன்றைக்கு பாகாசுர கம்பெனிகளின் பணத் தோட்டமாகிவிட்டது. ஒருவகையில் நவீனம் என்று சொல்லப்படும் இன்றை மருத்துவம் செயற்கையே. பக்க விளைவுகள் இல்லா மருத்துவம் என்பது இன்றைக்கு சாத்தியமே கிடையாது. நம் உடம்பு தொடங்கி நாம் சேர்த்துவைத்திருக்கும் சொத்துவரைக்கும் இன்றைய நவீன மருத்துவத்தின் பக்கவிளைவுகளுக்கு பலியாகிகொண்டிருக்கிறது. இயற்கையோடு பெரிதும் ஒன்றிய தமிழர்களின் வாழ்க்கை முறையும் இன்றைக்கு உலகமயமாக்கலுக்குள் காணாமல்போய்கொண்டிருக்கிறது. ஊடகங்கள் மூலமாக நம்முடைய வாழ்க்கை முறை பெரிதும் மாற்றியமைக்கப்படுகிறது. பாகசுர கம்பெனிகளின் லாப வேட்டைக் குட்டையாக நம்முடைய வாழ்க்கை முறை மாற்றப்படுகிறது. உணவு தொடங்கி, பழக்க வழக்கங்கள் முடிய அனைத்தும் ஏதோ ஒரு பன்னாட்டு கம்பெனியின் லாபத்தை அடிப்படையாக வைத்தே நவீனமாக முன்வைக்கப்படுகிறது. நாம் சாப்பிடும் உணவு, தண்ணீர், உடுத்தும் உடை, மருந்து என்று அனைத்திலும் பன்னாட்டு கம்பெனிகளின் லாப கணக்கு அரசியல் வேலைசெய்துகொண்டிருக்கிறது. வாழ்வை இயற்க்கையிலிருந்து கற்ற தமிழர்கள் இன்று பன்னாட்டு கம்பெனிகளின் leaflet-களிலிருந்து கற்கிறார்கள். நாம் மெல்ல தொலைத்துக்கொண்டிருக்கும் நம்முடைய இயற்கை அறிவியில் கண்டுபிடிப்பான பாரம்பரிய வாழ்க்கை முறை பற்றியதே இக்கட்டுரை.

தொழில் புரட்சி மனிதர்களின் வாழ்வையே புரட்டிப்போட்டுவிடும் என்று நம்பிக்கொண்டிருந்த மேற்குலக நாடுகள் தங்களின் நம்பிக்கையில் இடிவிழுந்து, வாழ்க்கை முறை நடம் புரண்டுபோனதில் அரண்டுபோய் கிடக்கின்றன. தெற்காசிய நாடுகளின் பாரம்பரிய வாழ்க்கை முறையை தலைதெறிக்கத் தங்களின் நவீன கண்டுபிடிப்புகளின் மூலம் மீட்டெடுத்துக்கொண்டிக்கின்றன. நாட்டு மருத்துவம், யோகா என்று நவீன மருந்து கம்பெனிகளின் R&D-கள் தங்களின் ஆராய்ச்சிகளைத் திசைத் திருப்புகின்றன. வேதியியலுக்கு பின்னால் ஓடியவர்கள். இன்று இயற்க்கை மருத்துவ அறிவைப் பெற தெற்காசிய நாடுகளில் பல மருத்துவ உளவாளிகளை உலவ விட்டிருக்கிறார்கள்.


Comments

Post a Comment

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

களப்பிரர் என்னும் கலி அரசர்