திராவிடத்த தீயா தேடணும் திராவிடா



தலைப்பு அச்சுபிச்சுன்னு இருந்தாலும் இந்த கட்டுரையில நாம பாக்கபோற விசயம் அப்படிப்பட்டது இல்ல. திராவிட கருத்தியில், திராவிட கோட்பாடு, திராவிட சித்தாந்தம், திராவிடம் இதெல்லாம் அரசியல் சாரந்து அரசியல் கட்சிகளோடு முடிஞ்சுபோற விசயங்களான்னு யோசிக்குறப்ப தேடலுக்கான ஒரு பாதைதெரியுது.இதுலதிராவிடம்ங்கற சொல்லே இன வெறியை தூண்டுதுங்ற குசும்பு அரசியல் வேறு ஒரு பக்கம் சக்கப்போடு போட்டு box-office hit-ஆ போயிட்டிருக்கு. திராவிடம்ங்ற சொல்லோ, திராவிட சித்தாந்தமோ இனப் பெறுமையில இருந்தோ இல்ல இன வெறியில இருந்தோ உண்டானது இல்ல. அறிவியல் சார்ந்த மானுடவியல் ஆராய்ச்சிதான் முதல் முதல்ல திராவிடம்ங்றத உலகத்துக்கு அறிமுகப்படுத்துது. இன்னிக்கு உலக பல்கலைகழகங்கள் திராவிட ஆராய்ச்சி பத்தின விசயங்கள நடத்தி ஆக்கபூர்வமான விசயங்கள வெளிப்படுத்திக்கிட்டுருக்கும்போது இங்கமட்டும் திராவிடத்தை இனவெறின்னு கழுவி கழுவி ஊத்துறதுல நமக்கு சல்லாப மகிழ்ச்சி.

தமிழன்தான் இந்த திராவிடத்த கண்டுபுடுச்சான்னு நினைச்சுக்கிட்டு இருந்தா உங்கள விட அசடு வேற யாரும் இருக்கமுடியாது. ஏன்னா தமிழன் கண்டுபிடிப்பு, புத்தாக்கம் அது இது யெதுங்கற வீண் வேலயெல்லாம் செய்யறதில்ல. அவன் உண்டு அவன் அறியாமை ஒளி உண்டுன்னு அக்கடான்னு இருக்கான். இன்னிக்கு நேத்தா இப்படின்னு கேட்டா பல நூற்றாண்டுகளா இப்படிதான். அப்ப அரை நூற்றாண்டா திராவிடத்தை முன்னேத்துறதுக்கும், திராவிட முன்னேற்றத்துல அண்ணாவை சேத்துகிட்டதுக்கும் மாத்தி மாத்தி முத்திரை குத்திக்கிட்டிருக்கானேன்னு கேட்டா, தமிழன் எத எதுக்கு செய்யிறோம்ன்னு என்னிக்கு தெரிஞ்சு செஞ்சிருக்கான்!எல்லாம் சித்தன் போக்கு சிவன் போக்குதான். அப்ப தானாவே திராவிடம் வானத்துல இருந்து குதுச்சி விழுந்துடுச்சான்னு பொறுமை இழந்து கைய பிசையாம போய் சுடா ஒரு கப் டீயோ காப்பியோ குடிச்சுட்டு வாங்க நாம பேச வேண்டியது நிறைய இருக்கு.


Made-in-வெளிநாடுதான் தமிழனோட, தமிழ் மொழியோட சிறப்புகளயும் பெறுமைகளயும் கண்டுபிடிக்கணுங்கறது தமிழனோட, தமிழ் மொழியோடmade-in-தலயெழுத்து. துரதிஷ்ட வசமா சித்தர்கள் மொழி ஆராய்ச்சி செய்யாம விட்டுட்டாங்க இல்லன்னா தமிழோட இந்த தலயெழுத்த பத்தி முன்னாடியே சொல்லியிருப்பாங்க. அப்ப சித்தர்கள் சொன்னதயாவது தமிழன் follow பண்றாணான்னு கேட்டா அவனுக்கு twitter-லயும் facebook-லயும் follow பண்ணுறதுக்கு ஆள் புடிக்கறதுலயே பொழுதுபோயிடுது. அவன் என்ன பண்ணுவான் பாவம்! ஆனா அண்ணாச்சி குமுதா happy!

அது ஆங்கிலேயே பெரு வணிக குழுக்கள் கண்டுபிடிப்புங்ற பெருல உலக நாடுகளோட வளங்கல சுரண்டறதுக்கு காலனி ஆதிக்கத்த பரப்பிக்கிட்டிருந்த 18-ஆம் நூற்றாண்டு. மேற்கத்திய நாடுகள்ல மானுடவியல் ஆராய்ச்சியோட சேத்து மொழி ஆராய்ச்சியையும் ஆரம்பிக்க அது இந்தியாவையும் தொத்திகிச்சு. உள்ளூர் மக்களோட மொழிய தெரிஞ்சுகிட்டா கொள்ளையடிக்கறதுக்கு இன்னும் நல்லா வாட்டமாயிருக்கங்ற உண்மைய தெரிஞ்சுகிட்ட மேற்கத்திய வணிக குழுக்கள் வரிந்துகட்டிக்கிட்டு மொழி ஆராய்ச்சிக்கு மொய் எழுதனதோட நிக்காம மேற்கத்திய பல்கலைகழகங்கள்ல பல மொழிகள கத்துக்கறதுக்கான ஏற்பாடுகளயும் செஞ்சாங்க. இதுதான் உலக மொழி ஆராய்ச்சிக்கான தொடக்க புள்ளி. மேற்கத்திய மானுடவியல் மொழி அறிஞர்கள் உலக மொழிகள இந்தோ-ஐரோப்பிய, இந்தோ-சீனான்னு ரெண்டு பெரிய மொழி குடும்பங்கலா பிரிச்சாங்க.

கிரேக்க லத்தீன் மொழிகள் மேற்கத்திய மொழிகளுக்கு பிறப்பிடமாகவும், சமஸ்கிரதம் இந்திய மொழிகளுக்கு மூலமாகவும், மாண்டிரியன் தென்கிழக்கு சீன மொழிகளுக்கு பிறப்பிடமாகவும் இருக்கறதா அறிவிச்சாங்க. இதுக்கும் முன்னாடியே தென்னிந்தியாவுல சமய பணி செஞ்சுகிட்டிருந்த மிஷனரி பாதரியார்கள் ஒரு முக்கியமான விசயத்த திரும்ப திரும்ப பதிவு செஞ்சபடி இருந்தாங்க. தென்னிந்தியாவுக்கு வந்திரங்கிய மிஷனரிகள் சமய பணிக்கு உள்ளூர் மொழியோட அவசியத்த தெரிஞ்சுகிட்டு தமிழ கத்துக்கபோக, அவங்களுக்கே தெரியாம அவங்க முக்கியமான வரலாற்று உண்மைக்கான ஆராய்ச்சிய தொடங்கினாங்க. சமஸ்கிரதம் இந்திய மொழிகளுக்கு மூலமாயிருக்குமாங்கற ஆராய்ச்சிய மொழி அறிஞர்களுக்கு முன்னாடியே தொடங்கிட்ட மிஷனரி பாதரிகள் அப்படி இல்லைங்கற உண்மையையும் பதிவு பண்ண ஆரம்பிச்சாங்க.

தமிழை கத்துக்க தொடங்கிய மிஷனரிகளுக்கு சொல்லப்பட்ட பால பாடம் சமஸ்கிரதமே தமிழுக்கு மூலம்கறது. தமிழ முழுசா கத்துகிட்டு கரைகண்ட மிஷனரிகங்க சொன்ன திருத்த பாடம் தமிழ்தான் இந்திய துணை கண்டத்துல இருக்குற பெரும்பாலான மொழிகளுக்கு தாய்மொழிங்றது. சமஸ்கிரதம் கூட தமிழலயிருந்து பல வார்த்தைகள மூலமா வாங்கியிருக்குங்றதையும் சேத்தே சொன்னாங்க. தமிழ் மொழிக்குன்னு ஒரு குடும்பம் இருக்கறதையும் பெரும்பாலான இந்திய மொழிகள் தமிழை மூலமா கொண்டிருக்கறதையும் வெளிப்படுத்த ஆரம்பிச்சு அவங்களுக்கே தெரியாம அவங்க இந்திய மொழியில் ஆராய்ச்சியோட முன்னோடிகளா இருந்திருக்காங்க. மிஷனரிங்க வந்து சொல்ற வரைக்கும் தமிழன் என்ன பண்ணிக்கிட்டிருந்தான் கேட்டுராதீங்க. அவன் தமிழ கண்டானா சமஸ்கிரதத்த கண்டானா! சமஸ்கிரத்த கத்துகிட்டு இந்திய மொழிகள கத்துக்கறத விட தமிழ கத்துகிட்டு இந்திய மொழிகள கத்துக்கறது சுலபம்ங்ற வழிய மிஷனரிங்க கண்டுபிடிச்சாங்க.

தென்னந்திய மிஷனரிகளோட இந்த கண்டுபிடிப்புகள கண்டுக்காத மேற்கத்திய மொழி அறிஞர்கள் 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில ஆரிய மொழிதான் எல்லா மொழிகளுக்கும் மூலமா இருக்கணும்ங்ற கண்மூடித்தனமான நம்பிக்கையில இந்தோ-ஆரிய கொள்கைய தூக்கி புடிக்க தொடங்குனாங்க. இந்த கால பகுதிதான் திராவிட கருத்தியலுக்கான விதை விழுந்த காலம். கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் வரதுக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னாடியே திராவிடம் முளைக்கத் தொடங்கிடுச்சி. ஆக கால்டுவெல்லும் கூட திராவிட கருத்தியல முதல் முதல்ல உலகத்துக்கு முன்னாடி வைக்கல. ஏற்கனவே விதையா விழுந்து மரமாயிருந்த கருத்தியல ஆலமரமா வளத்ததுதான் திராவிட கருத்தியல்ல  கால்டுவெல்லோட பங்களிப்பு. அதே சமயத்துல, திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்ங்ற மிகச் சிறந்த ஆராய்ச்சியின் மூலமா சமஸ்கிரதம்தான் எல்லாங்ற புனைவு கதையோட சவப் பெட்டியில உறுதியான, இறுதியான ஆணி அடிச்சவர் கால்டுவெல்தான்.

மேற்கத்திய பல்கலைகழகங்கள் 18-ஆம் நூற்றாண்டு வாக்கில் Orientalism-ம்னு சொல்லிகிட்டு சமஸ்கிரதத்தின் முக்கியதுவத்தை இந்திய துணை கண்டத்தில் வலிந்து தேடிக்கொண்டிருந்தது. மேற்கத்திய மொழி அறிஞர்களுக்கு சமஸ்கிரதம் செல்ல பிள்ளையாகிவிட்டது. அதே காலகட்டத்தில் முகலாய பேரரசும் முடிவுக்குவர ஆங்கிலேயே கிழக்கிந்திய வணிக கம்பெனியின் ஆதிக்கம் இந்தியாவில் தொடங்கியது.சுரண்டலுக்கு மொழியின் முக்கியதுவத்தை தெரிந்தகொண்ட கம்பெனியி Orientalis-அ மனபோக்குடைய அறிஞர்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியது.இவர்களுடைய வேலை இந்தியாவில் இருக்கும் கம்பெனியின் பணியாளர்களுக்கு இந்துஸ்தானியும், பாரசீகமும், சமஸ்கிரதமும் கற்றுக்கொடுப்பது. இது தொடர்பாக வங்காலத்தில் 1784 ஆசிய கழகம் அமைக்கப்பட்டது. அதை தொடர்ந்து 1804-ல் College of Fort Williamsதொடங்கப்பட்டது.

ஒட்டுமொத்த இந்திய துணை கண்டத்திலும் சமஸ்கிரதமும், இந்துஸ்தானியும் செல்லுபடியாகும்னு கிழக்கிந்திய கம்பெனியின் மேலிடம் நினைச்சுகிட்டிருக்க தென்னிந்தியாவில் பணியில் இருந்த கம்பெனியின் உயர்மட்ட பணியாளர்கள் ஒரு விசயத்தை உணரத்தொடங்கினார்கள். அது தென்னிந்தியாவில் சமஸ்கிரதமும், இந்துஸ்தானியும் நடைமுறையில் இல்லையென்பதை. தங்களுக்கு முன்னால் இருந்து மிஷனரிங்க எழுதிய உண்மை இப்பதான் தென்னிந்தியாவிலிருந்த ஆங்கிலேயர்களுக்கு புரிய தொடங்கியது. அதுவரை மிஷனரிகளின் கண்டுபிடிப்பாக இருந்த தமிழ் மொழி குடும்ப கருத்தியல் தென்னிந்திய ஆங்கிலேயே பணியாளர்கள் வழியாக இந்திய மொழி ஆராய்ச்சிக்குள் நுழைகிறது. மொழி ஆராய்ச்சியில் தமிழ் மொழி குடும்ப கருத்தியலின் தாக்கம் வலுவானது. இந்திய மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த அறிஞர்களை இரண்டு குழுவா பிரித்துபோட்டது தமிழ் மொழி குடும்ப கருத்தியல். அதுவரை போற்றி பாதுகாக்கபட்ட புனைவுகளை எல்லாம் திருத்தி எழுதவேண்டிய நிர்பந்தத்தை தமிழ் மொழி குடும்ப கருத்தியல் உண்டாக்கிவிட்டது.

தமிழ் மொழி குடும்ப கருத்தியலுக்கு திராவிடம்ங்ற பெர எங்கிருந்து ஆங்கிலேயர்கள் எடுத்துக்கிட்டாங்கங்றது ஆராய்ச்சிக்கு உரிய விசயம். மிஷனரி தமிழ் அறிஞர்கள் மூலமா திராவிடம்ங்ற சொல் புழக்கத்துக்கு வந்திருக்கலாம்.ஆக தமிழ் மொழியின் முக்கியதுவத்தை மைய நீரோட்டத்துக்கு கொண்டுவந்து அறிஞர்கள் மத்தியில் விவாத பொருளாக்கியவர்கள் கும்பெனி பணியாளர்கள். இதில் முக்கியமானவர்கள் Francis Whyte Ellis, Leyden மற்றும் McKenzie. எல்லிஸ் சென்னை மாகாணத்தின் ஆட்சியராக பணியாற்றியவர். திராவிட கருத்தியலை வலுவாக தூக்கிபிடித்து அதற்கான ஆதாரத்தை தேடியதில் எல்லிஸ் முக்கியமானவர்.

திராவிட கருத்தியல் ஆராய்ச்சிக்கு ஆதரவா எல்லிஸ் சென்னை ஜார்ஜ் கோட்டையில் College of Fort St. George கல்லூரியை 1812-ல் தொடங்கினார். திராவிட கருத்தியல தொழில்முறை சார்ந்த ஆராய்ச்சியாக வளர்ப்பதற்கான முயற்ச்சிகளை எல்லிஸ் தலைமையில் இந்த கல்லூரி தொடங்கியது. கால்டுவெல்லுக்கும் முன்பே 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே திரவிட கருத்தியல் பற்றி பேசியபடி இருந்தவர் எல்லிஸ். தமிழை சரளமாக பேசரதோட நிற்காமல் இலக்கண ஆராய்ச்சி செய்யக் கூடிய அளவு தமிழை ஆழமாக கற்றவர். ஜார்ஜ் கோட்டை கல்லூரியோட சேர்த்து பதிப்பகம் ஒன்றையும் தொடங்கினார்.
பத்தொன்பதான் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே சில தனி நபர்கள் ஒலைச் சுவடிகள்ல இருந்து சில பழந்தமிழ் இலக்கியங்கள வணிக நோக்குல புத்தகமா பதிச்சு வெளியிட்டுகிட்டிருதாங்க. குடும்ப சொத்தா வந்த ஒன்னு ரெண்டு பழந்தமிழ் இலக்கியங்களே இப்படி புத்தகங்களா மாறிக்கிட்டிருந்தது. பரந்த அளவுல தமிழகம் முழுவதும் அலைந்து ஒலை சுவடிகள்ல இருக்குற பழந்தமிழ் இலக்கியங்கள, படைப்புகள தேடி கொண்டுவந்து புத்தகமா பதிப்பிக்கிற வேலை திட்டத்தை முதல் முதல்ல முன்வைத்தது எல்லிஸ்தான். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்துல உ.வே. சாமிநாதரும், தமோதரம்பிள்ளையும் செஞ்ச காரியத்த ஒரு நூற்றாண்டுக்கு முன்னாலயே தொழில் முறை சார்ந்து தொடங்கிவைத்தது எல்லிஸ்.

எல்லிஸ், கல்லூரி சார்பில் முத்துசாமி பிள்ளை என்பவருக்கு மிக முக்கியமான ஒரு வேலையை கொடுத்தார். அந்த வேலையோட சேத்து பணமும் முத்துசாமி பிள்ளையிடம் கொடுக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் சுற்றி பழந்தமிழ் இலக்கியங்களை திரட்டுவது, தேவைபடும் இடங்களில் பணத்தை கொடுத்தாவது பழந்தமிழ் ஒலைசுவடிகளை திரட்டுவது. திரட்டிய இலக்கியங்களை ஒலைசுவடியிலிருந்து புனித ஜார்ஜ் கோட்டை கல்லூரி பதிப்பகம் வழியாக புத்தகமாக பதிப்பிப்பது. இதுதான் பக்கா professionalism என்பது.

பழந்தமிழ் இலக்கியங்களின் பதிப்பு வரலாறை தெரிந்தகொள்ள விருப்பமிருந்தால் கமில் சுவலபில் எழுதிய Companion Studies to the History of Tamil Literature புத்தகத்தை படிக்கலாம்.
பதினெட்டாம் நூற்றாண்டில், எந்தவித்துலயும் தொடர்பே இல்லாத ஆங்கிலேயர்கள் திராவிடத்தை ஆக்கபூர்வமான வழியில வளர்த்தெடுத்தது பிரிட்டீஸ் இந்திய ஆவணங்கள்ல வரலாற்று உண்மையா எழுதிகிடக்கு.

Comments

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

களப்பிரர் என்னும் கலி அரசர்