மலை முழுங்கிகள்


மனித நாகரீகத்தின் முதல் நாவல் வடிவ இலக்கியமாக இன்று உலக இலக்கிய விமர்சகர்களால் போற்றப்படுவது கில்காமேஸ்(Gilgamesh). இந்த நாவல் எந்தவிதமான மாறுதல்களுக்கும், குறைந்த பட்ச திரிபுகளும்கூட உட்படாமல் ஏறத்தாழ் 7000 வருடங்களாக புழக்கத்திலிருக்கிறது. இது சுமேரிய நாகரீகத்தின் இலக்கிய தொடக்கமாக கருதப்படுகிறது. இன்று ஐரோப்பாவின் கலாச்சாரத்திற்கும், மொழிகளுக்கும் மூலமாக கருதப்படும் கிரேக்கத்தில் 2900 வருடங்களுக்கு முன்பு இலியாட்(Ilayd) தோன்றி, கிரேக்க பாதிக் கடவுள்(Demigod) கதாநாயகர்களின் கதைகளை பேசி இன்றளவும் எந்திவித மாறுதல்களுக்கும் உட்படாமல், உட்படுத்தப்படாமல் கிரேக்கர்களின் கலாச்சார கூறுகளை வெளிச்சமிடுகிறது.

எகிப்தியர்களின் பாப்பைரஸ் சுருள்களுக்கு (Papyrus Scrolls) ஏறத்தாழ ஐந்தாயிரம் வயது. இவைகள் எகிப்திய பாரோ வம்சாவளியினரின் கதைகளை எந்தவிதமான இடைசொறுகல்களும், எந்தவிதமான மாயமால திரிபுகலும் இல்லாமல் உள்ளதை உள்ளவாரு பாதுகாத்து இன்றைய நாகரீக உலகத்திற்கு எடுத்துசொல்லி நம்மை வாய்பிளக்க வைக்கின்றன. நாம் பார்த்த இந்த நாகரீகங்கள் அனைத்தும் அந்நியர்களின் படையெடுப்புகளுக்கும், ஆளுகைகளுக்கும் பிற்காலத்தில் பணிந்துபோயிருக்கின்றன ஆனால் அவர்களுடைய இலக்கியங்கள் மாத்திரம் எத்தகைய மாற்றங்களுக்கும், திரிபுவாதங்களும் பணியவில்லை. ஆனால் உலகின் மிக மிக பழமையான ஒரு இலக்கண காப்பியம் திரிபுவாதங்களுக்கும், மற்றொரு இனத்தின் மாயமால கதைகளுக்கும் பலியாக கொடுக்கப்பட்டது மிகவும் வெட்கக்கேடான விசயம்.

இந்த வெட்கக்கேடான செயலுக்கு உரிமையாளர்கள் தமிழர்கள். வரலாற்று உணர்வு சிறிதும் அற்ற இவர்கள் உலகின் மிகத் தொன்மையான, வருடங்களில் சொல்வதென்றால் பத்தாயிரம் வருடங்களுக்கும் முன்பிலிருந்து வழக்கிலிருக்கும் தமிழ் மொழியின் இலக்கண கருவுலமான தொல்காப்பியம் என்னும் உலகின் மிகப் பழமையான ஒரு இலக்கண நூலை, ஆரியத்திற்கு தாரைவார்த்துவிட்டு வந்து நிற்கிறார்கள்.


இந்திய வரலாற்று ஆசிரியர்களில் சிலர், தொல்காப்பியத்தின் வயதை குறைத்து காட்டுவதில் கங்கணம் கட்டிகொண்டு எழுதியும், பரப்பியும் வருகிறார்கள். தொல்காப்பியத்தின் வயதை இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேல் கொண்டு செல்வதில் இவர்களுக்கு உடன்பாடு கிடையாது. காரணம் மிகத் தெளிவானது, தொல்காப்பியம் அகத்தியரின் மேற்பார்வையில் படைக்கப்பட்டது என்கிற ஆரிய கட்டுகதையை எப்படியாவது பொது அறிவிற்கு புறம்பாக திணித்துவிடவேண்டும் என்பதே இவர்களின் நோக்கம்.

தமிழர்களின் பாழாய்போன அலட்சிய குணத்தால் தொல்காப்பியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆரிய திரிபுகளுக்கு ஆட்பட்டுவிட்டது. தொல்காப்பியத்திற்கு உரை எழுதும் சாக்கில் தங்களுக்கு வசதியான, தங்களின் புகழ்பாடும் விசயங்களை தொல்காப்பியத்தில் பிராமணம் திணித்துவைத்தது. இவைகள் உண்மை வரலாற்றிர்கு முற்றிலும் புறம்பானவைகள். உலகின் வேறு எந்த நாகரீகத்தின் இலக்கியங்களும் இத்தகைய அராஜ நடவடிக்கைகளுக்கு ஆளானது கிடையாது. பிராமணம் திணித்துவைத்த திரிபுவாதங்களையே இன்றைய ஆரிய விசுவாச வரலாற்று ஆசிரியர்கள் பிடித்து தொங்குகிறார்கள்.

தொல்காப்பியத்திற்கு உரை எழுத உட்கார்ந்த பிராமணர்கள், அந்த நூலின் பழமையையும், சிறப்பையும் தங்களின் ஆரிய மேலாதிக்கத்திற்கு கீழ் கொண்டுவரும் விதமாக புராண கதைகளை புனைந்தார்கள். அவற்றில் ஒரு கதாபாத்திரம் ஆரிய முனி அகத்தியர். பொதிய மலைக்கு குடிபெயர்ந்த இவர் வந்தது வராததுமாக, பாவம் பல்லாயிரம் ஆண்டுகள் ஊமைகளாக திரிந்துகொண்டிருந்த தமிழர்களின் வாயில் தமிழை ஊட்டிவிட்டார் (அட கொடுமையே!).  இவர்களின் கதைப்படி அகத்தியரின் இந்த தெய்வீக செயலை கண்டு புலங்காகிதம் அடைந்த இவருடைய சீடர்களில் ஒருவரான தொல்காப்பியர், பிற்கால சந்ததியர் அகத்தியரின் அருமையை தெரிந்துகொள்வதற்காக தொல்காப்பியத்தை எழுதிவைத்தார். அகத்தியரின் அருமை பெருமைகளை இத்தோடு மாத்திரம் நிறுத்திவைக்க பிராமணம் விரும்பவில்லை. மேலும் பல பெருமைகளை ஆரிய அகத்தியருக்கு கதைகளின் மூலம் வாங்கி கொடுத்தார்கள். அதாவது மருத்துவம், கணிதம், தெய்வ வழிபாடு இப்படி பல விசயங்களில் காட்டு பயல்கள் தமிழர்களுக்கு இவர்தான் புத்தி புகட்டினார் என்று அவர்களின் கதை போய்கொண்டேயிருக்கிறது. உலகின் மிகப் பழமையான ஒரு இனத்திற்கு இதைவிட அவமானகரமான விசயம் நேர்ந்திருக்கமுடியாது.

தொல்காப்பியம் மிகத் தெளிவாக தமிழகத்தின் எல்லையை கூறுகிறது. அதில் தென்குமரியை தமிழகத்தின் தெற்கு எல்லையாக எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் புழக்கத்திலிருந்த ஒரு பூகோல விசயமாக சொல்கிறது. தென்குமரி இன்றைய குமரியை குறிக்கவில்லை. இந்த தென்குமரி மூன்றாம் கடல் எழுச்சியால் 9000 வருடங்களுக்கு முன்பே இந்துமா கடலுக்குள் போய்விட்டது. ஆக தொல்காப்பியத்தின் தோன்றம் இன்றையிலிருந்து 9000 வருடங்களுக்கு முற்பட்டது. இந்த காலகட்டத்தில் ஆரியர்கள் எந்த நிலப்பகுதியில் கால்நடைகளை மேய்த்து, சோமபான (சோமபானம் என்பது ஒருவகை போதை தண்ணீர்) குடியில் மயங்கிக்கிடந்தார்கள் என்பது அந்த சோம தேவனுக்கே வெளிச்சம்.

ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தது 3700 வருடங்களுக்கு முன்பு. பிறகு அவர்கள் தமிழகத்திற்குள் நுழைந்தது 2500 வருடங்களுக்கு முன்பு. ஆரிய அகத்திய முனி கற்பனை கதாபாத்திரமாக தோன்றியது 2400 வருடங்களுக்கு முன்பாக இருக்கலாம். இரண்டாயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு தோன்றிய அகத்திய கதாபாத்திரம், அதற்கு ஏழாயிரம் வருடங்களுக்கு முன்பே தோன்றி வழக்கிலிருந்த தமிழ் மொழியை, எப்படி தமிழர்களுக்கு சொல்லித்தந்திருக்க முடியும்? பிராமணம் பொய் சொன்னாலும் பொறுந்த சொல்ல தவறிவிட்டது.

இன்றைக்கு தமிழ் உணர்வாளர்களை குறை கூறும் அறிவு ஜீவிகள், உலகின் மிகத் தொன்மையான இலக்கியமான தொல்காப்பியத்திற்கு ஏற்பட்ட இன அடையாள சிதைவை குறித்து வாய் திறக்காதது ஏன்?

Comments

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

களப்பிரர் என்னும் கலி அரசர்