நதியோடு ஒரு பயணம்


நைல் நதியின் ஓட்டம் மேலை எகிப்து(Upper Egypt), கீழை எகிப்து(Lower Egypt) என்று இரண்டு நாகரீகங்களை உருவாக்கியது. யூப்ரடீஸ் மற்றும் டைகீரிஸ் நதிகள் சுமேரிய நாகரீகத்தை உருவாக்கியது. இந்த வரிசையில் மேலே குறிப்பிடப்பட்ட நைல், யூப்ரடீஸ், டைகீரிஸ் நதிகளைப் போல் இன்னும் குறிப்பாக சொல்வதென்றால் இந்த நதிகளுக்கெல்லாம் வெகு காலத்திற்கு முன்பே ஒடிய ஒரு நதி உலகின் மிகப் மிகப் பழமையான நாகரீகம் ஒன்றை வளர்தெடுத்தது.

உலகின் தென்பாகத்தில் ஓடிய அந்த நதி இலக்கியங்களில் குறிப்பிட்டபட்ட மிகப் பழமையான நதியும் கூட. இன்று இந்துமகா சமுத்திரத்தின் அடி ஆழத்தில் புதைந்துவிட்ட அது தன்னோடு கூட உலகின் உன்னதமான ஒரு நாகரீகத்தின் அடையாளங்களையும் கொண்டு சென்றுவிட்டது. பல நூறு வருடங்களின் வரலாற்றை தன்னோடு அணைத்தபடி அது சமுத்திரத்தின் இருண்ட பாகத்தில் உறங்கி கிடக்கிறது.

சமுத்திரத்திற்குள் முழ்கி அந்த நதியின் கரைகளில் புதைந்து கிடக்கும் வரலாற்றை மீட்டு எடுக்க வேண்டிய நாடு இன்று சுயநல அரசியல் வாதிகளால் பாழ்பட்டு கிடக்கிறது. வரலாற்று சுரணையற்ற அந்த நாட்டின் மக்களும் சித்தம் போக்கு சிவன் போக்கு என்று உழன்று கொண்டிருக்கிறார்கள். அந்த நாட்டின் மக்கள் தமிழர்கள், இந்திய சமுத்திரத்திற்குள் முழ்கிய அந்த நதி ஃபற்றுளி நதி.

ஃபற்றுளி நதியை பற்றி பேசுவதற்கு முன்பு நாம் லெமுரியா கண்டத்தைப் பற்றி பார்த்தாக வேண்டும். இன்று வழக்கில் இருக்கும் ஐந்து கண்டங்களோடு சேர்த்து 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு லெமுரீயா என்கிற நிலப்பகுதி கிழக்கில் ஆஸ்திரேலியா தொடங்கி மேற்கில் மடகாஸ்கர் தீவுகள் உட்பட ஆப்பிரிக்கா வரை இன்றைக்கு இந்துமகா சமுத்திரம் இருக்கும் பகுதியில் நீண்டு இருந்தது. ஒரு சாரார் லெமுரீயா என்பது கற்பனை வாதம் என்று ஒதுக்க, ஆராய்ச்சியாளர்களில் பலர் லெமுரீயா என்று ஒரு கண்டம் இருந்தது உறுதி என்று வாதிடுகிறார்கள். எது எப்படியோ ஆனால் தமிழ் இலக்கியமான தொல்காப்பியம் மிக மிக தெளிவாக எந்தவித ஐய்யப்பாடுகளும் இல்லாமல் மிக ஆணித்தரமாக ஃபற்றுளி நதியைப் பற்றி குறிப்பிடுகிறது.

இந்துமகா சமுத்திரத்தில் 1997-ஆம் வருடம் மேற்கொள்ளப்பட்ட ஒரு தனியார் ஆராய்ச்சி, முன்பு இந்துமகா சமுத்திரம் நிலப் பகுதியாக இருந்தது என்று உறுதி செய்திருக்கிறது. இலங்கையின் தெற்கு முனையிலிருந்து பல மைல்கள் தெற்கு, மேற்கு, கிழக்காக அந்த நிலப் பகுதி பரந்து விரிந்துகிடந்திருக்கிறது. இன்றைய இலங்கைத் தீவின் தெற்கு முனையிலிருந்து பல நூறு மைல்கள் தெற்கே ஃபற்றுளி ஆறு தன்னுடைய இரு கரைகளையும் செழுமைப் படுத்தியபடி ஒடியிருக்கிறது. இன்றையிலிருந்து பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பே தமிழர்களின் நகரங்கள் இந்த ஆற்றின் கரையோரங்களில் காணப்பட்டிருக்கவேண்டும்.


நைல் நதியின் செழுமையை பயன்படுத்திக்கொண்ட எகிப்தியர்களின் நாகரீகம் கி.மு. 5000 வருடங்களுக்கு முன்பு வரை செல்கிறது. சுமேரியர்களின் நாகரீகம் கி.மு. 7000 வருடங்களுகு முன்பு வரை செல்கிறது. ஆனால் ஃபற்றுளி ஆற்றின் செழுமையை பயன்படுத்திய தமிழர்களின் நாகரீகம் கி.மு. 10000 வருடங்களுகு முன்பு வரை நீல்கிறது. தமிழர்களின் முதல் தமிழ் சங்கம் இந்த ஆற்றின் கரையில் அமைந்த ஏதோ ஒரு நகரத்தில்தான் தோன்றியிருக்கவேண்டும்.

இனக்குழு வாழ்விலிருந்து, நகர நாகரீகத்திற்கு வளர்ச்சி பெற்ற தமிழர்களின் முதல் பேரரசான, பாண்டிய பேரரசின் தலைநகரமான முதல் மதுரை மாநகரம் இந்த ஆற்றின் கரையோரத்தில்தான் நிர்மானிக்கப்பட்டிருக்கவேண்டும். இந்துமகா சமுத்திரத்தில் கடல் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டால் தமிழர்களின் நாகரீகம் பற்றிய பல உண்மைகளை வெளியே கொண்டுவரமுடியும் ஆனால் நம்மை ஆண்டுகொண்டிருக்கும் திராவிட கட்சிகளுக்கு இதைப்பற்றிய விழிப்புணர்ச்சியே கிடையாது. இந்திய அரசாங்கமோ அகண்ட பாரத ஆரிய வர்தமானத்தை வலிந்து இந்திய வரலாற்றில் தினிப்பதும், அதை இந்தியாவின் முகம் என்று வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பரப்புவதுமே வேலையாக திரிந்துகொண்டிருக்கிறது.

தொல்காப்பியம் மூன்று கடல்கோல்களைப் பற்றியும் பேசுகிறது. முதல் கடல்கோளில் இந்த ஃபற்றுளி நதி கடலுக்குள் மூழ்கிவிட்டது. முதல் கடல்கோளில் தப்பித்த தமிழர்கள் ஃபற்றுளி ஆற்றின் வடக்கே பல மைல்கள் முன்னேறி கபாடபுறம் என்ற நகரத்தை நிர்மானித்தார்கள். கபாடபுறத்தில் ஃபற்றுளி ஆற்றின் மிச்சம் மீதி பகுதி இருந்ததா என்பது தெரியவில்லை ஆனால் இரண்டாம் முறையாக ஏற்பட்ட கடல்கோளில் கபாடபுறமும் கடலுக்குள் மூழ்கிவிட்டது. இயற்கையின் சீற்றத்திற்கு ஈடுகொடுத்த தமிழர்கள் மேலும் பல மைல்கள் வடக்கே முன்னேறி தென்குமரி என்கிற நகரத்தை நிர்மானித்தார்கள். இரண்டாம் தமிழ் சங்கம் கபாடபுறத்திலும், தென்குமரியிலும் சிறப்பாக நடந்திருக்கவேண்டும்.

தென்குமரியும் மூன்றாம் கடல்கோளில் காணாமல் போக, மேலும் பல மைல்கள் முன்னேரி இன்றைய மதுரை நகரை தமிழர்கள் நிர்மானித்தார்கள். தெற்கு திசையிலேயே தங்களுடைய முன்னோர்களின் பூர்விகமும் சிறப்பும் இருந்ததால் தமிழர்களின் கலாச்சாரத்தில், தெற்கு திசையும், தென் கிழக்கு திசையும் போற்றப்பட்டது. ஆனால் ஆரிய வருகைக்கு பின் இந்த திசைகளின் சிறப்பு புராண கதைகளுக்கு பலியாகிவிட்டது.

பத்தாயிரம் ஆண்டுகளாக இந்துமகா சமுத்திரத்தின் அடர்ந்த அடி ஆழத்திற்குள், தமிழர்களுடைய மூன்று பெறு நாகரீக நகரங்களான ஃபற்றுளி ஆற்று நகரங்கள், கபாடபுற நகரங்கள் மற்றும் தென்குமரி நகரங்கள் தங்களுடைய தனி சிறப்புகளோட காத்துக்கொண்டிருக்கின்றன தமிழர்களின் மத்தியில் ஒரு விடியல் ஏற்றபட்டு வெளிவருவதற்காக.

Comments

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

களப்பிரர் என்னும் கலி அரசர்