நீதிக்கு ஒரு கட்சி


உலக அரங்கில் 1920-கள் மிகவும் கொந்தளிப்பான காலகட்டம். தமிழகமும் தன் பங்கிற்கு ஒரு கொந்தளிப்பை உருவாக்கிய காலகட்டம் 1915-களின் பிற்பகுதி. South Indian Liberal Federation என்று அழைக்கப்பட்ட நீதிக் கட்சி இந்த காலகட்டத்தில் மிக வலுவாக உருபெற்றது. காங்கிரஸ் அல்லாத தமிழகத்தின் முதல் அரசியல் காட்சி. மிகச் சிறந்த படிப்பாளிகளால் உருவாக்கபட்டு வழிநடத்தபட்ட மிகத் தெளிவான கொள்கை கொண்ட கட்சி.

கொள்கைகள் வேறு நடவடிக்கைகள் வேறு, கொள்கையே இல்லாத நடிவடிக்கைகள், நடவடிக்கையே இல்லாத கொள்கைகள், சாதி அடையாளம், மத அடையாளம் என்று இன்றைய, நேற்றைய கட்சிகள் போலில்லாமல் மிக மிகத் தெளிவாக ஒரே ஒரு கொள்கையோடு அரசியிலில் இறங்கி இயக்கம் நீதி கட்சி. அந்த ஒரே ஒரு கொள்கையையும் மிகத் தீவிரமாக எந்தவித சமரசத்திற்கும் இடம் இல்லாமல் நிறைவேற்றிய கட்சியும் கூட.

தமிழகத்தை பொறுத்த மட்டில், தான் முன்வைத்த ஒரு கொள்கைக்காக கடைசி நிமிடம் வரை போராடிய முதலும் கடைசியுமான கட்சி நீதி கட்சி மட்டும்தான். நீதி கட்சி முன் வைத்த அந்த ஒரே ஒரு கொள்கை பிராமணர் அல்லாதார் முன்னேற்றம். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் தினசரி வாழ்விலும், சமூக கட்டமைப்பிலும், அதிகார மையங்களிலும் கொடி கட்டிப் பறந்த பார்ப்பனர்களின் மேலாதிகத்திற்கு ஆப்பு வைப்பதே நீதி கட்சி கொண்ட ஒரே கொள்கை. வேறு எந்தவிதமான பகட்டான கொள்கை அலங்கார வார்த்தைகளும் நீதி கட்சியின் Manifesto-ல் கிடையாது.

சர். பிட்டி தியாகராயர், டாக்டர். நடேசன், மற்றும் டாக்டர். டி.எம். நாயர் இந்த மூவர்தான் ஒருங்கினைந்த மதராஸ் மாகாணத்தில் தோன்றிய நீதி கட்சியின் மூளையாக செயல்பட்டவர்கள். பிற்காலத்தில் பனகல் அரசரும் இதில் முக்கிய பங்குவகித்தார். டாக்டர் முத்துலட்சுமி போன்றவர்களும் நீதி கட்சியை சேர்ந்தவர்களே.

திராவிட கொள்கை, அடைந்தால் தனித் தமிழ்நாடு இல்லையேல் மரணதேவி, பிராமண எதிர்ப்பு என்று கவர்சிகரமான சொல்லாடல்களை வியாபாரம் செய்து ஆட்சியை பிடித்து பின்னர் சமரசத்திற்கும், சண்மானத்திற்கும் விலைபோய் கொள்கையின் இருட்டு மூலைக்குள் மறைந்துகொண்ட இந்த திராவிட கட்சிகள் கருவுக்குள் முலைவிடாத காலத்திலேயே பிராமணர்களையும், அதிகாரப் பூர்வ பிராமண கட்சியான காங்கிரஸ்காரர்களையும் கதி கலங்க வைத்தவர்கள் நீதி கட்சிகாரர்கள்.

தெளிவாக திட்டமிட்டு பிராமண மேலாதிக்க கட்டமைப்பை அரசியல் மூலமாக உடைத்தெறிந்தது நீதி கட்சி. ஆட்சிக்கு வந்த நீதி கட்சி பலத்த பிராமண எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றிய சட்டங்களின் பட்டியல் கீழே

சட்டமன்றத்தில் பிராமணர் அல்லாதாருக்கான இட ஒதுக்கீடு
இந்து அறநிலையத் துறை
தேவதாசி முறை ஒழிப்பு
பள்ளிகளில் இலவச சத்துணவு திட்டம்
தொடர் வண்டியில் பிரமாணர்களின் தனி உரிமை பறிப்பு
கல்லூரிகளில் பிராமணர் அல்லாதார் இட ஒதுக்கீடு
பெண்ணகளுக்கு சொத்துரிமை


இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இந்த சட்டங்களை தங்களின் ஆட்சி காலத்திலேயே நிறைவேற்றி செயலிலும் கொண்டுவந்தார்கள். நீதி கட்சியின் சாதனைகள் பல பிற்காலத்தில் காங்கிரஸாலும், திரவிட கட்சிகளாலும் திருடி கொள்ளப்பட்டன. உதாரணத்திற்கு பள்ளிகளில் சத்துணவு திட்டம். இலவச சத்துணவு திட்டம், கல்வி தந்தை காமராஜரால் கொண்டுவரப்பட்டது என்று காங்கிரஸ்காரர்கள் வாய் கூசாமல் அவிழ்த்துவிட, சத்துணவில் முட்டையை சேர்த்து ஆ.தி.மு.க பெருமை தேடிக்கொள்கிறது.

பலத்த பிரமாண மேலாதிக்கத்திற்கு முதல் ஆப்பை எடுத்தவைத்த நீதி கட்சி, விஷம பிரச்சாரங்களுக்கு பலியானது துரதிஷ்டவசமானது. அரசியல் செயல்பாடுகள் மூலம் எதிர்த்து நிற்க முடியாத பிராமணர்கள் வழக்கம் போல தங்களுடைய கீழ்தரமான இரண்டாம் தர நடவடிக்கைகளை மேற்கொண்டு நீதி கட்சிக்கு வலதுசாரி சாயம் பூசிவிட்டார்கள். பிற்காலத்தில் திராவிட இயக்கங்களும் நீதி கட்சியின் மீது வலதுசாரி குற்றம் சாற்றியது மன்னிக்க முடியாதது.

நீதி கட்சியின் மீது பிராமண காங்கிரஸ் வைத்த முக்கியமான குற்றச்சாட்டு, நீதி கட்சி ஆங்கிலேயர்களின் காலை நக்கி ஆட்சி செய்கிறது என்பது. இதே பிராமண காங்கிரஸ் பின்கட்டு வழியாக, காந்தி ஆங்கிலேயர்களுடன் சமரச கூடல் செய்வதற்கு பறையடித்தது ஏனோ! வஞ்சகத்திற்கு வீழ்ந்த நீதி கட்சி பின்னர் எழுந்திருக்கவேயில்லை. பெரியாரிடம் சேர்க்கப்பட்ட இந்த கட்சி பின்னர் காணாமலேயே போய்விட்டது. அதோடு சேர்ந்து ஒரு உன்ன அரசியில் கட்சியின் சாதானைகளும் போயே போய்விட்டது

Comments

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

களப்பிரர் என்னும் கலி அரசர்