மாமல்லனோடு மல்யுத்தம்


காஞ்சிபுரத்தை சுற்றிக் கொண்டு நுங்கும் நுரையுமாக கரைபுரண்டு ஓடும் பால் ஆற்றில் இன்னும் சில வினாடிகளில் மாமல்லபுரம் துறைமுகத்திற்கு புறபட இருக்கும் பாய்மர படகில் நாம் எப்படியாவது இடம் பிடித்துவிட வேண்டும். மகேந்திரவர்மனும், நரசிம்ம பல்லவனும் மாமல்லபுரத்தை பார்வையிட அந்த பாய்மர படகில் கிளம்ப போகிறார்கள். பேசுவதற்கு நேரம் இல்லை வாருங்கள் ஓட்டமாக ஓடி படகில் ஏறிக்கொள்வோம்.

ஆயிரத்து முந்நூறு வருடங்களுக்கு முன்பு கலை ஆர்வளர்கள் இப்படிதான் தங்களுக்குள் பேசியபடி மாமல்லபுரம் செல்லும் பாய்மர படகில் இடம் பிடித்திருப்பார்கள். இன்று பால் ஆறு பாலை ஆறாக காட்சியலிக்கிறது. மாமல்லபுரம், அதன் பெயர் தொடங்கி அனைத்து அம்சங்களிலும் வரலாற்றுக்கு முரணான ஆரிய மாயை பூசி நிற்கிறது. ஆரிய மாயையால் பூசி மொழிகி நிறுத்தப்பட்டிருக்கிறது என்பது சரியாக இருக்கும்.

முதலில் மாமல்லபுர பெயர் காரணத்திலிருந்து தொடங்கலாம். மாமல்லபுரம் என்பதுதான் உண்மை வரலாற்றின் அடிப்படையில் அந்த பல்லவர் கால துறைமுக நகரத்திற்கு வழங்கப்பட்ட பெயராகும். மகேந்திரவர்மனின் மகன் நரசிம்மவர்மனுடைய சிறப்பு பெயர்களில் ஒன்று மாமல்லன். இவன் சிறந்த போர் வீரன் என்பது மாத்திரம் இல்லாமல் சிறந்த மல்யுத்த வீரனும்கூட. இவன் பல்லவர்களுடைய துறைமுக நகரத்தை மேம்படுத்த சிறப்பு கவனம் எடுத்துகொண்டதால் அவனை சிறப்பிக்கும் வகையில் அந்த நகரத்திற்கு மாமல்லபுரம் என்று பெயரிட்டிருக்கிறார்கள். இன்று மாமல்லபுரத்தை மகாபலிபுரமாக திரித்து, அதற்கு ஒரு புராண கதையையும் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள்.

எகிப்து நாட்டில் The Valley of Kings பகுதியில் தோன்றிய குடைவரை கட்டிட அமைப்பின் தாக்கம் மாமல்லபுரத்தில் பிரதிபலிக்கிறது. மாமல்லபுரத்தில் ஏறத்தாழ 150 வருடங்களுக்கான கட்டிட கலையின் பரினாம வளர்ச்சி அடங்கியிருக்கிறது. முதலில் குடைவரையில் தொடங்கி பின்னர் கற்றளி கலையில் முடிவடைகிறது. இந்த வளர்ச்சியின் காலகட்டம் இருநூறு வருடங்கள். மாமல்லபுரத்தில் நாம் பார்க்கும் அத்தனை சிற்பங்களும், கட்டிடங்களும் ஏக காலத்தில் கட்டி முடிக்கபட்டவைகளில்லை. சொல்லப்போனால் மாமல்லபுரத்தில் எந்த கட்டிடமும் முழுமை பெற்றது கிடையாது.


மாமல்லபுர கட்டிடங்கள் முழுமை பெறாததற்கு காரணமும் உண்டு. கடற்கரை கோவிலைத் தவிர மாமல்லபுரத்தில் எழுப்பப்பட்டிருக்கும் அனைத்து கற்கோவில்களும் பொது மக்களின் வழிபாட்டிற்காக கட்டப்பட்டவைகளில்லை. அவைகள் அனைத்தும் வரும் காலத்தில் கட்டபடயிருந்த பெரிய கற்றளி கோவில்களின் மாதரி வடிவங்கள். இதை ஆங்கிலத்தில் Prototype என்கிறார்கள். மாமல்லபுர கற்கோவில்களின் கருவறைக்குள் சிலைகளுக்கு பதிலாக வட்டவடிவமான குழி வெட்டிவைத்ததன் காரணம் இது வழிபாட்டு தளம் அல்ல ஆராய்ச்சி நோக்கம் கொண்டது என்பதை பொது மக்களுக்கு உணர்த்துவதற்காகதான்.

முதலாம் வகை கட்டிட கலையான குடைவரை கலையை மகிஷாசுர மர்தினி மண்டபம், அர்ஜுன தபஸ் மண்டபம் மற்றும் அர்ஜுன தபஸ் மண்டபத்தை வெளிவட்டமாக சுற்றியிருக்கும் பாறைகளில் காணலாம் (உண்மை தமிழ் பெயர்கள் மீட்டுருவாக்கம் செய்ய இயலாத வகையில் அழிக்கப்பட்டுவிட்டது. இது ஆரிய கைங்கரியங்களுக்கு உதாரணம்).

இரண்டாம் வகை கட்டிட கலையான முழு கல்லை கோவிலாக மாற்றும் உத்தியை கணேச ரதம், பாண்டவர்கள் ரதம் என்று அழைக்கப்படும் ஐந்து கோவில்களிலும் பிரதான பாறை தொகுதிகளுக்கு சற்றுதள்ளி ஊருக்கு வெளிப்புறம் இருக்கும் கோவில்களிலும் காணலாம். இந்த வகை கோவில்களை ஒரு முழு கல்லை தேர்ந்தெடுத்து அந்த கல்லின் மேல் பாகம் தொடங்கி அடிப்பாகம் வரை கைகளால் செதுக்கியிருக்கிறார்கள். வெண்ணை உருண்டை என்ற புராண கட்டு கதையை சுமந்து நிற்கும் புகழ்பெற்ற கல் இத்தகைய கோவில் ஒன்றை கட்டுவதற்காக பக்கத்திலிருக்கும் பாறை தொகுதியிலிருந்து தனியாக அறுத்து எடுக்கப்பட்டு அப்படியே விடப்பட்டுவிட்டது.

முழு கல்லை கோவிலாக மாற்றும் சிற்ப கட்டிட கலையில் முழுமையாக அமைந்த கோவில்கள் கணேஷ ரதமும் அதற்கு நேர் எதிராக இடபுறமாக சற்று உள் தள்ளியிருக்கும் கோவில்களும் உதாரணம். இதில் முக்கியமான விசயம் இவைகள் முழுமையாக செதுக்கிமுடிக்கப்பபட்டிருந்தாலும் இந்த கோவில்களின் கருவரைக்குள் வெறும் குழி மட்டும்தான் இருக்குமே தவிர சிலைகள் இருக்காது. இதன் காரணத்தை நாம் மேலே பார்த்தோம். பஞ்ச பாண்டவர்கள் ரதம் இந்த கட்டிட அமைப்பின் முழுமை பெறாத வடிவங்கள். பஞ்ச பாண்டவர்கள் ரதம் என்று அழைக்கப்படும் கற்கோவில் தொகுதியில் ஐந்து கோவில்கள் உண்டு. இந்த ஐந்தும் நான்கு வகையான விமான அமைப்புகளுக்கு உதாரணமாக அமைந்தவை. பொதுவாக தமிழக கோவில் கட்டிட கலையில் விமானத்தின் அமைப்பை மூன்றாக பிரிப்பர். முதலாவது இருந்த நிலை விமான அமைப்பு. இந்த வகை விமானம் சதுரமாக இருக்கும். இரண்டாவது நின்ற நிலை விமானம். இது மேல் நோக்கி நீள் சதுரமாக இருக்கும். மூன்றாவது கிடந்த நிலை விமானம். இது பக்கவாட்டில் நீள் சதுரமாக இருக்கும். நான்காவதாக அரிதான கஜபிருஸ்ட விமான அமைப்பும் ஐந்து ரத தொகுதியில் இருக்கிறது.

இந்த ஐந்து ரதங்களின் பக்கவாட்டில் ஒரே கல்லால் செதுக்கப்பட்டிருக்கும் காளையின் சிற்பங்களும், யானையும் காண்பவரை மயக்கக் கூடியது.

மூன்றாவது வகை கட்டிட கலையான கற்றளி கோவில் கலையை கடற்கரை கோவிலில் காணலாம். கற்றளி என்பது பாறைகளை சதுரம் சதுரமாக அறுத்துயெடுத்து, அதை செங்கல் கட்டிடம் கட்டுவதுப்போல் ஒன்றின் மீது ஒன்றாக வைத்து கட்டுவது. பிற்கால சோழ, பாண்டியர்களின் கோவில்கள் இந்த கட்டிட வகையிலேயே கட்டப்பட்டவைகள். மாமல்லபுர கடற்கரை கோவிலின் கருவரை, கட்டிட அமைப்பில் தனி சிறப்பு வாய்ந்து. நாம் மேலே பார்த்த மூன்று வகையான விமான அமைப்புகளையும் ஒன்றின் மீது ஒன்றாக மூன்று மாடி விமானத்தை இந்த கோவில் கொண்டிருக்கிறது. கருவரைக்குள் மூன்று மாடிகளுக்கும் செல்ல படிகளும் இருக்கிறது. ஆனால் அது பொது மக்களின் உபயோகத்திற்கு திரந்துவைக்கப்படவில்லை.

பொதுவாக மாமல்லபுர குடைவரை சிற்பங்களும், புடைப்பு சிற்பங்களும் எகிப்திய பாரோக்களின் உருவ அமைப்பை நகலெடுத்திருப்பது போலிருக்கும். ஆறு ஏழு அடிக்கும் உயரமான உருவம், வலைவுகள் இல்லாத நீண்ட தோல்பட்டையோடு சேர்ந்த கைகள், சிலைகளின் கிரீட அமைப்புகள் என்று பாரோக்களின் நினைவுகளை நம்முன் நிறுத்தும். இந்த அற்புதமான நகரத்தை நிர்மானித்த மகேந்திரவர்மன் மற்றும் நரசிம்மவர்மனுடைய புடைப்பு சிற்பங்களை பிரதான பாறை தொகுதியின் அடிபாகத்தில், இன்றைக்கு ஊரின் வெளிபுரத்தில் உள்ள ஒரு சிறிய குடைவரை கோவிலின் பக்கவாட்டு சுவற்றில் காணலாம். மகேந்திரவர்மன் உட்கார்ந்திருக்க, நரசிம்மவர்மன் நின்றபடி இருப்பார்.

மாமல்லபுரத்தை காணவரும் வெளிநாட்டு பயணிகளுக்கு அந்த இடத்தின் உண்மையான வரலாற்று மற்றும் கட்டிட சிறப்புகளைப் பற்றி தெரிவிக்க நாதி கிடையாது. இந்திய தொல்லியல் துறை மாமல்லபுரத்தின் உன்னத்தை எடுத்து சொல்லக்கூடிய எந்திவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் ஆரிய கட்டு கதைகள் சுதந்திரமாகவும், ஏகபோகமாகவும் உலா வருவதற்கு சாமரம் வீசிக்கொண்டிருக்கிறது. உண்மை நிலை அறியாத வெளிநாட்டு பயணிகளும் ஆரிய முகமே இந்திய முகம் என்று நம்பி ஏமாந்துபோகிறார்கள்.

Comments

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

களப்பிரர் என்னும் கலி அரசர்