வையகத்து கோமான்கள் (வை.கோ)


தமிழகத்தின் பல போராட்ட களங்கள் இன்று அறிந்திருக்கும் ஒரு வார்த்தை வை.கோ. தெற்கில் கூடங்குள போராட்டம் தொடங்கி வடக்கில் ராஜபக்சே இந்திய வருகை என்று அனைத்து போராட்ட களங்களிலும் போராடுபவர்களுக்கு உறுதுணையாக ஆதரவு குரல் கொடுப்பது மட்டுமில்லாமல் தமிழர்களின் உணர்வுகள் சார்ந்த போராட்டங்களை கட்டமைத்தும்வருகிறார். தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் (விடுதலை புலிகள் மற்றும் நாம் தமிழர் கட்சிகள் நீங்களாக) சுப. உதயகுமாரனை ஒரு தீவிரவாதிபோலவும், தமிழகத்தின் அமைதியை குலைப்பவர் போலவும் சித்தரித்து வரும் நிலையில், வை.கோ அவர்கள் ஆரம்பம் தொட்டு உதயகுமாரனுக்கு ஆதரவு குரல் கொடுத்துவருகிறார்.

இங்கே நாம் ஒன்றை கவனிக்க வேண்டியிருக்கிறது. வை.கோ, உதயகுமாரனுக்கு ஆதரவு குரல் கொடுத்தவருகிறார் என்று குறிப்பிடுகிறோம். காரணம் மிகவும் வெளிப்படை, இதன் அர்த்தமும் வெளிப்படை அது வை.கோ இன்னொருவர் வென்றெடுத்த போராட்டதில், அரசியல் லாப குளிர் காய விரும்பவில்லை என்பது. வை.கோ உணர்வுப்பூர்வமாக கூடங்குள மக்களின் பின்னியில் இருக்கிறாரே தவிர அந்த சாதாரண மக்களின் போராட்டத்தை தனிப்பட்ட ஓட்டு வேட்டையாக வென்றெடுக்க விரும்பவில்லை. இன்றைய காலகட்டத்தில் இத்தகைய அரசியல் நடவடிக்கை சார்ந்த தலைவரை காண்பது அரிது அரிது மானிடராய் பிறத்தலினும் அரிது.

இதற்கும் மேல் திரு. வை.கோ அவர்களின் போராட்ட நடவடிக்கைகளை உள்ளது உள்ளபடி எழுதுவது என்று புகுந்தாலும் அது இறுதியில் முகஸ்துதியாக போய் முடிந்துவிடக்கூடிய சாத்தியம் இருப்பதால் நாம் இத்துடன் இந்த வை.கோ குறித்து விளக்குவதை நிறுத்துகிறோம். இன்றைய நடுநிலை செய்திதாள், தொலைக்காட்சி மற்றும் இணை ஊடகங்கள் தினந்தோறும் வை.கோ அவர்களை குறித்து தகவல்களைத் தந்தபடி இருப்பதால் நாம் தமிழ் உலகம் கண்ட இன்னொரு வை.கோ-வைப் பற்றி பார்ப்போம்.

இந்த வை.கோ-வும் தமிழக வெளியில் ஒரு மறுமலர்ச்சியை கொண்டுவந்தவர்தான். வை.கோ என்கிற இரண்டெழுத்து மறுமலர்ச்சியோடு தொடர்புடையது போலும். தமிழக வாசிப்பு வெளியில் ஒரு புது எழுச்சியை இந்த வை.கோ புகுத்தியிருக்கிறார். தமிழ் புத்தக பதிப்பு துறையின் முன்னோடி இவர். சக்தி வை.கோ என்றால் ஐம்பதுகளில் இயங்கி வந்த அனைத்து தமிழ் இலக்கிய சாம்பவான்களுக்கும் ஒருவித ஈர்ப்பு. இவர் சக்தி என்ற மாத இதழையும் நடத்தியிருக்கிறார். அன்றைய காலகட்டத்தில் சக்தி இதழ்கள் புத்தக வடிவமைப்பிற்கு பெயர் போனவைகள்.

மேல் நாட்டு புத்தக வடிவமைப்பிற்கு ஈடாக தமிழ் புத்தகங்களின் வடிவமைப்பை முன்னேற்ற வேண்டும் என்று இறுதிவரை உழைத்தார். ஐம்பதுகளில் சக்தி இதழ்களை கையில் உணர்வது என்பது அருமையான விசயம். புத்தகங்களின் Design குறித்து அன்றைய இதழ்கள் அவ்வளவாக கண்டுகொள்ளாத நேரத்தில், புத்தகத்தின் வடிவமைப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர் வை.கோ. புத்தகத்தின் வடிவமைப்பு வாசகரின் கவனத்தை கவரகூடியது என்பது உலவியல் உண்மை. இந்த உண்மையை குறித்து அன்றைய இதழ்கள் சிறிதும் சிந்தித்து பார்க்காத தருணத்தில் வை.கோ அந்த உண்மையை தெல்லத்தெளிவாக உணர்ந்திருந்தார்.

சக்தி திரு. வை. கோபால்சாமி, அவர் வாழ்ந்த காலத்திலேயே, அடுத்த ஐம்பது வருடத்திற்கு புத்தக வடிவமைப்பில் கற்பனையும் செய்து பார்க்க முடியாது வடிவமைப்பு புதுமைகளை சாதித்துகாட்டியிருக்கிறார். அதுவும் சாதாரண மக்களின் கையடக்க விலையில். இந்த சாதனைக்காக தன்னுடைய சொத்துகளையும் இழந்திருக்கிறார். Penguin, Bantam, Oxford மற்றும் HarperCollins போன்ற புத்தக பதிப்பாளர்கள் காலங்களை கடந்து இன்றும் வாசிப்பு வெளிகளை உருவாக்கிகொண்டிருக்க, இவைகளுக்கு ஈடாக தமிழ் புத்தகங்களின் வடிவமைப்பு வரவேண்டும் என்று கனவு கண்ட சக்தி வை.கோ இன்று தமிழர்களின் அறியாமையில் காணாமல் போய்விட்டார்.

Comments

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

களப்பிரர் என்னும் கலி அரசர்