உலக சினிமாக்களின் திரைக்கதை அமைப்புக்கள்....

உலக சினிமாக்களின் திரைக்கதை அமைப்புக்கள்....

புத்தகத்தின் முன்னோட்ட சிறு துளி....

"பின்கட்டமைப்பு வாதம் (Poststructuralism)

அறுபதுகளுக்கு பின்பும் எழுபதுகளின் தொடக்கத்திலும் கவனம் பெற்று தலையெடுக்கத் தொடங்கியது பின்கட்டமைப்பு வாதம். கட்டமைப்பு வாதத்தின் உட் பிரிவு, கிளை பிரிவு, மற்றொரு பகுதி, அதின் ஒரு பாகம் என்று எப்படி வேண்டுமானாலும் பின்கட்டமைப்பு வாதத்தை வகைப்படுத்த முடியும். அதே சமயத்தில் கட்டமைப்பு வாதத்திற்கு எதிரான போக்கை கொண்டது பின்கட்டமைப்பு வாதம் என்றும் சொல்ல முடியும்.

கட்டமைப்பு வாதத்தை போலவே பின்கட்டமைப்பு வாதமும் மொழியியலை அடிப்படையாக கொண்டிருந்தாலும் சில அடிப்படை கருத்து நிலைகளில் அது கட்டமைப்பு வாதத்திலிருந்து வேறுபட்டு நிற்க கூடியது. யதார்த்த உலகிற்கும், மனித வாழ்வியலுக்கும் அதை குறிப்பிட பயன்படுத்தப்படும் மொழிக்கும் உள்ள வித்தியாசத்தையும் (signifier & signified), வார்த்தைகள் தனக்கு முன் மற்றும் பின் இருக்கும் வார்தைகளில் இருந்தும் தனக்கான அர்த்தங்களை பெறுகிறது, மொழிக்கும் முன்பே இருத்தல் (presence – உலக படைப்புக்கள் அனைத்தும்) கட்டமைப்புக்களின் வழி இயங்குவதும், வார்த்தைகளும் கூட கட்டமைப்பிற்கு உட்ப்பட்டதுதான் என்பது போன்ற அடிப்படை கருத்துக்களை கொண்டது கட்டமைப்பு வாதம் என்பதை முன்பே பார்த்தோம்.
வார்தைத்கள் தனக்கு பின் மற்றும் முன் வரும் வார்த்தைகளில் இருந்து பொருள் கொள்வதற்கும் முன்பாக அது தனக்குத்தானே இரு நிலை (binary) முரண் பொருள்களை உள்ளடக்கியே இருக்கிறது என்கிற கருத்தை முன் வைத்தது பின்கட்டமைப்பு வாதம். ஒரு வார்த்தைக்குள் அல்லது சொல்லுக்குள் இருக்கும் இரு பொருள்களை (ஒன்று வெளிப்படையானது மற்றொன்று மறைமுகமானது) பிரித்துப் பார்த்து (deconstruction) அதன் வழி அந்த சொல்லின் முழு பொருளை காண வேண்டும் என்கிற விமர்சன அறிவியலை முன் வைத்தது பின்கட்டமைப்பு வாதம்.

இதுவரை இலக்கியம் என்று அறியப்படும் (கதை, கவிதை, நாடம், கட்டுரை) எழுத்துக்களின் உள்ளார்ந்த அர்த்தங்களை வெளிப்படுத்த பயன்படும் விமர்சன போக்குகள் குறித்து பார்த்தோம். ஒரு கதையையோ அல்லது கவிதையையோ அல்லது கட்டுரையையோ மேம்போக்காக வாசித்து அதன் வழி உணர்வெழுச்சி தூண்டப்படுவதாக தனக்குள்ளேயே முடிவு கட்டிவிடாமல் விமர்சன ரீதியில் அதை எப்படி அனுகி அது உண்மையிலேயே வெளிப்படுத்த காத்திருக்கும் உணர்ச்சிகளை அடையாளம் கண்டுக்கொள்வது என்பதற்கு வழிகாட்டிகளாக இருக்க கூடியவைகள் இதுவரை நாம் பார்த்த ‘வாதங்கள்’.

சரி இவைகள் முழுக்க முழுக்க எழுத்து சார்ந்த இலக்கியத்திற்கான விமர்சன அறிவியலாக இருக்க இது எப்படி திரைக்கதை எழுத உட்காரும் எனக்கு உதவியாக இருக்கும் என்கிற அடிப்படை கேள்வி இந்த புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கும் திரைக்கதை ஆசிரியரான (அல்லது உங்களின் திரைப்படத்திற்கு நீங்களே திரைக்கதை எழுதுவது என்று உட்காரும் திரைக்கதை எழுத்தாளரான) நீங்கள் முதல் கட்ட யோசனை ஆழலாம். நல்ல திரைக்கதையை அமைக்க அல்லது எழுத ஒரு நல்ல கதையை விமர்சன அறிவியல் ரீதியில் அனுகி அடையாளம் காண வேண்டியது மிக அவசியம்தானே.

அந்த அவசியம் கருதியே எழுத்து இலக்கியத்திற்கான விமர்சன அறிவியலை நாம் முதலில் அறிமுக அளவிலாவது தெரிந்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதைத்தான் இதுவரை நாம் செய்தோம். இனி ஒரு கதை எப்படி கட்டமைக்கப்படுகிறது என்பதை குறித்து அறிந்துக்கொள்ள வேண்டும். அதன் அடிப்படையிலேயே அதை திரைக்கு ஏற்ற வடிவில் திரைக்கதையாக மாற்ற முடியும். இதை குறித்து நமக்கு தெளிவை ஏற்படுத்த கூடியதே கதையியல் (Narratology).

கதையியல்

கதையியல், கட்டமைப்புவாதத்தின் ஒரு கிளை பிரிவு என்பதை முன்பே பார்த்திருக்கிறோம். தொடக்கத்தில் கிளையாக இருந்த இது தற்போது தனிப் பெறும் துறையாக மாற்றமடைந்துவிட்டது என்பதை நாம் அறிவோம். சம்பவங்களை (acts) கால வரிசைப்படி ஒன்றுடன் ஒன்று அர்த்தம் வரும்படி தொடர்புப்படுத்தி அதன் வழி கதையோட்டத்தை (narration) உருவாக்கி இறுதியில் முழுமையான கதை எப்படி உருபெருகிறது என்பதை விளக்குவது கதையியல்.



சம்பவங்களின் அடுக்குகளை பிளாட் என்றும் பிளாட் ஸ்டிரக்சர் என்றும் வகைப்படுத்துவது கதையியல். கதை என்பது சம்பவங்களின் (கால வரிசையின் அடிப்படையில்) தொகுப்பு என்பதையும் அது எப்படி கட்டமைக்கப்படுகிறது என்பதையும் இந்த புத்தகத்தின் இரண்டாம் அத்தியாத்தில் விரிவாக பார்த்துவிட்டதால் அடுத்த நிலையான திரைப்பட கதையியலுக்கு செல்வோம். ஒரு திரைக்கதை எழுத்தாளனின் நோக்கில் இதுதான் மிக முக்கியமானது. நல்ல திரைக்கதைகளை படைப்பதற்கும், அருமையான நாவல் ஒன்றை திரைக்கு ஏற்ற வகையில் சுராசியமான திரைக்கதையாக கட்டமைப்பது என்பதை புரிந்துக்கொள்வதற்கும் திரைக்கதை கதையியல் உதவியாக இருக்கும்...."

Comments

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

களப்பிரர் என்னும் கலி அரசர்