நடுநிலை வரலாறு இங்கே விற்பனைக்கு


முஸ்லிம் படையெடுப்புகளையும், முஸ்லிம் படையெடுப்பாளர்களையும் மிகவும் வன்மையாக சித்தரிப்பது இந்திய வரலாற்றின் பண்பு. சிறுபிள்ளைகளின் வரலாற்று பாட புத்தகம் முதல் கல்லூரி வரலாற்று துறைகள் வரை இந்த பண்பை மறைமுகமாக காணமுடியும். முஸ்லிம் படையெடுப்புகளால் இந்திய சமூகம் பாதிக்கப்பட்டுவிட்டதைப் போன்ற தோற்றம் நமது வரலாற்றை சுற்றி கட்டமைக்கப்படுகிறது.

இது மிகவும் ஆழ்ந்து நோக்கப்பட வேண்டிய விசயம். இந்த விதமான படையெடுப்புகளைக் குறித்த பின்னனித் தகவல்கள் மிகவும் முக்கியமாகின்றன. மேலும் அக்காலத்திய போர் முறைகளையும், போர் முறைகள் சார்ந்த நடவடிக்கைகளின் பின் விளைவுகளையும் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் அவைகள் எல்லாம் காற்றில் விடப்படுகின்றன. இந்த கட்டுரையில் நாம் ஒட்டுமொத்த முஸ்லிம் படையெடுப்புகளையும் பார்க்கப் போவதில்லை. தென்னிந்தியாவில், அதிலும் முக்கியமாக தமிழகத்தில் நடந்த முஸ்லிம் படையெடுப்பின் தொடக்கத்தையே பார்க்கப் போகிறோம்.

தென்னிந்தியாவில் முஸ்லிம் படையெடுப்பால் ஏற்பட்ட வரலாற்று நிகழ்வுகள் குறித்து மதுர விஜயா என்கிற புத்தகம் பேசுகிறது. இது எழுதப்பட்ட காலம் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு. தென்னிந்தியாவில் விஜய நகர பேரரசை நிறுவிய புக்கனின் மனைவி எழுதிய புத்தகம் இது. முஸ்லிம் படையெடுப்பை தடுத்து விஜய நகர அரசை தமிழகத்தில் ஏற்படுத்த படை திரட்டி வந்த புக்கனோடு அவன் மனைவியும் உடன் வந்தால். செல்லும் வழி முழுவதும் அவள் கண்ட காட்சிகளின் தொகுப்புதான் இந்த புத்தகம். வழியெங்கும் பனை மரங்களில் மனித தலைகள் சொருகிவைக்கப்பட்டிருக்கின்றன. ஊரெல்லாம் எரிந்து தீக்காடாக இருக்கின்றன. முஸ்லிம் படைகள் கடந்துபோனதற்கான அடையாளங்கள்.

இந்த புத்தகம் இன்று முஸ்லிம் படையெடுப்பாளர்களின் வன்மைக்கு ஆதாரமாக முன் வைக்கப்படுகிறது. இது உண்மையும் கூட. ஆனால் இதைப் போன்று உண்மை வரலாற்றில் மறைந்து போய்விட்ட படுகொலைகளையும் நடுநிலமையோடு ஏன் நமது வெகு சனவரலாறு பேசுவது கிடையாது?

தமிழகத்தில் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு வாக்கில் சமணர்களையும், பௌத்தர்களையும் எதிர்த்து பக்தி இயக்கம் தோன்றியது. களப்பிரரின் ஆட்சியில் சமண மதமும் பௌத்த மதமும் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்று இருந்தன. பார்ப்பனிய வைதீக மதங்கள் அடங்கி ஒடுங்கியே இருந்தன. களப்பிரர் வீழ்ச்சி அடைந்ததும் வைதீக சைவ வைஷ்ணவ சக்திகள் துள்ளியெழுந்தன. அதன் விளைவாக பக்தி இயக்கம் உருவாக்கப்பட்டது. இறையனார் அகப்பொருள் போன்ற பக்தி இயக்க நூல்கள் இயற்றப்பட்டன. தமிழக மக்களிடம் செல்வாக்கு பெற்றிருந்த சமண பௌத்த மதத்திற்கு எதிரான வேலைகள் தொடங்கின.
  
வைதீக சைவ வைஷ்ணவ சக்திகள் மீண்டும் தமிழக மக்களை தங்களிடம் திருப்ப சமண பௌத்த மதங்களின் மீது அவதூருகள் பரப்பின. பக்தி இயக்க சிரோமணிகள், சமண பௌத்த துறவிகளை அனல் வாதம் மற்றும் புனல் வாதத்திற்கு அழைத்தார்கள். வாய் சண்டையில் இடுபடுவதே அனல் வாதம், புனல் வாதம். அனல் வாதம், புனல் வாதத்தின் முடிவில் பௌத்த விகாரைகளும், சமண தளங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. கி.பி. 6 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் பௌத்த மடாலயங்களால் நிரம்பியிருந்தது. பௌத்த பல்கலைகழகம் ஒன்றும் காஞ்சியில் இருந்தது. காஞ்சிபுரம் பௌத்தர்களின் புனித தளங்களில் ஒன்று. சீனாவிலிருந்தும், இலங்கையிலிருந்தும் வரும் பௌத்த அரசபிரதிநிதிகள் தங்குவதற்கு ஏற்ற அதிகார வர்க்க கட்டிடங்கள் காஞ்சிபுரத்தில் இருந்தன. அவைகள் அனைத்தும் வைதீக சைவ வைஷ்ணவ சக்திகளால் கொளுத்தப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டன. பௌத்த மதத்தின் தலைநகரங்களுள் ஒன்றாக இருந்த காஞ்சிபுரத்தில் இன்று பௌத்த மதம் தொடர்பாக ஒரு துரும்பை கூட நம்மால் அடையாளம் காண முடியாது.

இந்த நிலை காஞ்சிபுரத்திற்கு மட்டும் கிடையாது, காவிரிபூம்பட்டினம், நாகப்பட்டினம், மதுரை இப்படி தமிழகம் முழுவதும் சமண பௌத்த மத குடியிருப்புகளும், கோயில்களும் கொளுத்தப்பட்டு இன்று ஒரு துரும்புகூட மிச்சமில்லாமல் அழிக்கப்பட்டுவிட்டன. தமிழகத்தின் வழிநெடுக சமண பௌத்த மக்களின் ஊர்கள் தீக்காடாக மாற்றப்பட்டன. ஏறத்தாழ துறவிகள் உட்பட 80,000 சமண பௌத்த மக்கள் கொல்லப்பட்டதாக தமிழ் இலக்கியங்கள் போகிற போக்கில் வரலாற்று உண்மையை பதிவுசெய்கின்றன. எண்பதாயிரம் என்பது உத்தேச கணக்கு உண்மை எண்ணிக்கை வரலாற்றுக்கே வெளிச்சம்.

பனைமரக் கழுவில் சமண பௌத்த சமயத்தவர்களின் தலைகள் ஆயிரக் கணக்கில் சொருகிவைக்கப்பட்டு கழுகுகளுக்கு இரையாக்கப்பட்டன. பிணக் குவியல்களில் நரிகளும் ஓநாய்களும் சுற்றியலைந்திருக்கின்றன. பௌத்தத் துறவிகள் சீனாவிற்கும், இலங்கைக்கும் தப்பியோடினார்கள். சமணர்களுக்கு போக்கிடம் இல்லாத்தால் பனைமரக் கழுவிற்கு தங்கள் உயிர்களை இழந்தார்கள். உயிர் பிச்சை கேட்டவர்கள் சமண பௌத்த மதத்தை விட்டுவிட சொல்லி மிரட்டப்பட்டார்கள்.

கி.பி. 13 ஆம் நூற்றாண்டு மதுர விஜயம் விவரிக்கும் முஸ்லிம் படையெடுப்பின் கொலை பாதகச் செயல்கள் அனைத்துமே கி.பி. 6 ஆம் நூற்றாண்டு வைதீக சைவ வைஷ்ணவ சக்திகளால் சமண பௌத்த மதத்தை சேர்ந்த மக்கள் மீது நடத்தப்பட்டிருக்கிறது. வலுபெரும் ஒரு சமூகம் பிறிதொரு சமூகத்தின் மேல் நடத்தும் இத்தகைய போர் சார்ந்த நடவடிக்கைகள் வரலாற்று காலங்களில் வழக்கம். மனித நாகரீகம் முழுவதும் இத்தகைய போர் சார்ந்த நடவடிக்கைகளால் நிரம்பிகிடக்கிறது. இன்று அவைகள் மனித நேயத்திற்கு எதிராக பார்க்கப்பட்டாலும் மனித சமூகம் அவைகளை கடந்துதான் வந்திறுகின்றது. இவர்களை அவர்கள் அழித்துவிட்டார்கள், அவர்களை இவர்கள் அழித்துவிட்டார்கள் என்று மேலோட்டமாக வரலாற்றை எழுதி செல்வது நடுநிலையான வரலாற்றை மீட்டெடுக்க ஒருபோதும் உதவி செய்யாது.

Naveena Alexander

Comments

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

களப்பிரர் என்னும் கலி அரசர்