Posts

மாற்று சினிமா திரைக்கதை அமைப்புக்கள்......

மாற்று சினிமா திரைக்கதை அமைப்புக்கள்...... புத்தகத்தின் முன்னோட்ட சிறு துளி.... "இந்த புத்தகத்தின் முதல் சில அத்தியாயங்களில் நடைமுறையியல் குறித்தும் கட்டமைப்புவாதம் குறித்தும் விரிவாக பார்த்தோம். அவைகளின் அடிப்படை கோட்பாடுகளில் ஒன்று படைப்பாளியால் எழுத்தைக்கொண்டு எதார்த்த உலகை அப்படியே கதைகளில் மீட்டுருவாக்கம் செய்ய முடியாது என்பது. படைப்பாளி என்னத்தான் இலக்கியம் என்கிற பெயரில் தலை கீழா நின்று வார்த்தை மாயவித்தை காட்டினாலும் எதார்த்த உலகை எழுத்துக்களால் பிரதிபலிக்க முடியாது. இதைத்தான் நமக்கு நடைமுறையியலும் கட்டமைப்புவாதமும் மொழியியல் ஆராய்ச்சிகளின் வழி தெளிவுப்படுத்துகின்றன. எழுத்துக்களால் ஆன நாவல் அல்லது கதைகளையும், காட்சிகளால் ஆன திரைப்படங்களையும் (திரைக்கதை) ஒப்பு நோக்கும் வேலையில் எழுத்துக்களால் எதார்த்த (realistic) உலகை பிரதிபலிக்க முடியாது என்கிற விமர்சன அறிவியல் கருத்து (நடைமுறையியல் மற்றும் கட்டமைப்புவாதம்) முக்கியத்துவம் கொண்டதாக இருக்கிறது. கதையாக கற்பனை செய்து பிறகு அதை திரைக்கதையாக மாற்றுவதாக இருந்தாலும், நல்ல நாவல் ஒன்றை திரைப்படத்திற்கு ஏற்...

உலக சினிமாக்களின் திரைக்கதை அமைப்புக்கள்....

உலக சினிமாக்களின் திரைக்கதை அமைப்புக்கள்.... புத்தகத்தின் சிறு துளி.... "ஃபேபுலா (கதை) மற்றும் சியோசட் (பிளாட்): ஃபேபுலா என்பது கதை. சியோசட் என்பது ஒரு கதை சொல்லப்படும் விதம். இது இரண்டையும் ஒரு உதாரணத்தின் மூலம் பார்ப்போம். ராஜ் பிறந்தது சற்று வசதியான குடும்பத்தில்தான். அவனுடைய தலைமுறைக்கு வீட்டில் அக்கடா என்று உட்கார்ந்து சாப்பிட்டு அழிக்கும் அளவிற்கு வசதி உண்டு. அப்படி இருந்தும் பணத்தின் மீது அவனுக்கு பிடிப்பு. அதிலும் குறுக்கு வழியில் பணம் அவனை வந்தடைய வேண்டும் என்பது அவனுடைய இலட்சியம் என்று கூட சொல்லலாம். அதை சாத்தியப்படுத்த அவன் ஒரு வங்கியை கொள்ளையடிப்பது என்று திட்டம் போட்டு ஒரு நாள் வங்கி கொள்ளையிலும் ஈடுபட்டான். கொள்ளையடிக்கும்போது போலீசிடம் சிக்கிக்கொண்டு இறுதியில் சிறைக்கு சென்றான். இது கதை. பேராசை பிடித்த ஒருவன் சட்டத்திற்கு புறம்பாக நடந்து சட்டத்தால் தண்டிக்கப்பட்டான் என்பது இந்த கதையின் அடிப்படை. இதே கதையை எப்படி வேண்டுமானாலும் சொல்ல முடியும். அப்படி சொல்வதே சியோசட் (பிளாட்). பேராசை, திருட்டு, சட்டத்தால் தண்டிக்கப்படுதல் இவைகள் செயல...

உலக சினிமாக்களின் திரைக்கதை அமைப்புக்கள்....

உலக சினிமாக்களின் திரைக்கதை அமைப்புக்கள்.... புத்தகத்தின் முன்னோட்ட சிறு துளி.... "பின்கட்டமைப்பு வாதம் (Poststructuralism) அறுபதுகளுக்கு பின்பும் எழுபதுகளின் தொடக்கத்திலும் கவனம் பெற்று தலையெடுக்கத் தொடங்கியது பின்கட்டமைப்பு வாதம். கட்டமைப்பு வாதத்தின் உட் பிரிவு, கிளை பிரிவு, மற்றொரு பகுதி, அதின் ஒரு பாகம் என்று எப்படி வேண்டுமானாலும் பின்கட்டமைப்பு வாதத்தை வகைப்படுத்த முடியும். அதே சமயத்தில் கட்டமைப்பு வாதத்திற்கு எதிரான போக்கை கொண்டது பின்கட்டமைப்பு வாதம் என்றும் சொல்ல முடியும். கட்டமைப்பு வாதத்தை போலவே பின்கட்டமைப்பு வாதமும் மொழியியலை அடிப்படையாக கொண்டிருந்தாலும் சில அடிப்படை கருத்து நிலைகளில் அது கட்டமைப்பு வாதத்திலிருந்து வேறுபட்டு நிற்க கூடியது. யதார்த்த உலகிற்கும், மனித வாழ்வியலுக்கும் அதை குறிப்பிட பயன்படுத்தப்படும் மொழிக்கும் உள்ள வித்தியாசத்தையும் (signifier & signified), வார்த்தைகள் தனக்கு முன் மற்றும் பின் இருக்கும் வார்தைகளில் இருந்தும் தனக்கான அர்த்தங்களை பெறுகிறது, மொழிக்கும் முன்பே இருத்தல் (presence – உலக படைப்புக்கள் அனைத்...

உலக சினிமாக்களின் திரைக்கதை அமைப்புக்கள்....

Image
உலக சினிமாக்களின் திரைக்கதை அமைப்புக்கள்: An Introductory To Next Gen Screenwriting.... புத்தகத்தின் முன்னோட்ட சிறு துளி... "இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரையில் (அதாவது 1960-களுக்கு முன்பு வரை) இலக்கியமாக கருதப்படும் எழுத்துக்களில் சமகால அரசியலின் பிரதிபலிப்பை விமர்சன ரீதியில் தேடுவதும் ஆராய்வதும் வாசிப்பு அனுபவத்திற்கு இடையூறை ஏற்படுத்துவதாக இருக்கும் என்கிற எழுதப்படாத நம்பிக்கை பரவலாக நடைமுறையில் இருந்தது. இந்த நம்பிக்கையை உடைத்துக்கொண்டு உருவெடுத்தது எழுத்துக்களின் அரசியல் விமர்சனம். பின்கட்டமைப்புவாத (Poststructuralism) காலக்கட்டத்தில் (1980-களுக்கு பிறகு) எழுத்துக்கள் பிரதிபலிக்கும் சமூக-அரசியல் சூழ்நிலை என்பது பழமை வாதமாக பார்க்கப்பட்டாலும் விமர்சன கலையில் அவைகளுக்கான இடம் முற்றிலுமாக மறுக்கப்படவில்லை. மேற்கை பொருத்தவரையில் எழுத்துக்களின் சமூக-அரசியல் பிரதிபலிப்பு என்பது மூன்று நிலைகளில் வெளிப்படுகிறது. அவை மார்க்ஸ்சிசம், பெண்ணியம் மற்றும் இன வாதம் (வெள்ளை – மற்ற இனங்கள்). நம்மை பொருத்தவரையில் இனவாதம் என்பது இரண்டு கிளைகளாக பிரியக் கூடியது. திராவிடம் மற்றும் தலித்...

உலகத் திரைப்படங்கள் விமர்சனப் பார்வை

Image
உலகத் திரைப்படங்கள் விமர்சனப் பார்வை: திரைக்கதை உத்தி, எடிட்டிங் உத்தி, கேமிரா உத்தி புத்தகம் வெளிவந்துவிட்டது. இதன் Ebook pdf version-யை கீழே இருக்கும் படத்தை சொடக்கி அதற்கென்று வரும் இணைய பக்கத்தில் வாங்கலாம். புத்தகமாக சென்னை வடபழனியில் உள்ள Pure Cinema புத்தக கடையில் விற்பனைக்கு கிடைக்கும்..... இதன் விலை ரூ. 150/-

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

Image
‘என்ன கொடும சார் இது. எல்லா வழியும் ரோமுக்கு போகுது’. 2100 வருசங்களுக்கு முன்னால நீங்க மத்திய தரை கடலை சேர்ந்த ஏதாவது ஒரு நாட்டுலயோ இல்ல மேற்கு ஐரோப்பாவுல ஏதாவது ஒரு சந்துலயோ, போய் சேர வேண்டிய இடத்தோட விலாசத்த தொலச்சுட்டு வழி தேடிக்கிட்டிருந்தீங்கன்னா இப்படித்தான் பொலம்பி இருப்பீங்க. கிரேக்க நாகரீகத்த கபளீகரம் செஞ்ச ரோம பேரரசோட மெய்கீர்த்தி அப்படி.பேரரசோட வல்லரசுன்னு சொன்னா வரலாறு கோச்சுக்காது. Age of Expansion, Age of Exploration, Age of Empires, Age of Consolidation, Age of ......கிழிஞ்சது இப்படியே போனா படிக்கிற உங்களுக்கு Age of கடுப்பு வந்துடும். இதெல்லாம் வேற ஒன்னுமில்லீங்க ரோம பேரரசர்கள் அவங்களோட நாடு புடிக்கிற ஆசைக்கு வச்சுகிட்ட punch subtitles. கட்டுக்கடங்காத ராணுவத்த கட்டுக்கடங்காம எந்த நாட்டுமேல கட்டவிழ்த்து விடலாம்னு யோசிக்கறது ரோமபேரரசர்களோட பதினாறு மணி நேர வேலைதிட்டம். உடனே ரோம பேரரசர்களோட வேலயே இதானோன்னு நினைச்சுட வேண்டாம்.ரோம பேரரசர்களோட கவனம், war -க்கு எந்த நாடும் சிக்காத பொழுது சிறிது கலைக்கும் ஈயப்பட்டது. கலைன்னா போர் கலை தொடங்கி கட்டிட கலை, சிற்பக் கலை, ...

திராவிடத்த தீயா தேடணும் திராவிடா

Image
தலைப்பு அச்சுபிச்சுன்னு இருந்தாலும் இந்த கட்டுரையில நாம பாக்கபோற விசயம் அப்படிப்பட்டது இல்ல. திராவிட கருத்தியில், திராவிட கோட்பாடு, திராவிட சித்தாந்தம், திராவிடம் இதெல்லாம் அரசியல் சாரந்து அரசியல் கட்சிகளோடு முடிஞ்சுபோற விசயங்களான்னு யோசிக்குறப்ப தேடலுக்கான ஒரு பாதை தெரியுது.இதுலதிராவிடம்ங்கற சொல்லே இன வெறியை தூண்டுதுங்ற குசும்பு அரசியல் வேறு ஒரு பக்கம் சக்கப்போடு போட்டு box-office hit -ஆ போயிட்டிருக்கு. திராவிடம்ங்ற சொல்லோ, திராவிட சித்தாந்தமோ இனப் பெறுமையில இருந்தோ இல்ல இன வெறியில இருந்தோ உண்டானது இல்ல. அறிவியல் சார்ந்த மானுடவியல் ஆராய்ச்சிதான் முதல் முதல்ல திராவிடம்ங்றத உலகத்துக்கு அறிமுகப்படுத்துது. இன்னிக்கு உலக பல்கலைகழகங்கள் திராவிட ஆராய்ச்சி பத்தின விசயங்கள நடத்தி ஆக்கபூர்வமான விசயங்கள வெளிப்படுத்திக்கிட்டுருக்கும்போது இங்கமட்டும் திராவிடத்தை இனவெறின்னு கழுவி கழுவி ஊத்துறதுல நமக்கு சல்லாப மகிழ்ச்சி. தமிழன்தான் இந்த திராவிடத்த கண்டுபுடுச்சான்னு நினைச்சுக்கிட்டு இருந்தா உங்கள விட அசடு வேற யாரும் இருக்கமுடியாது. ஏன்னா தமிழன் கண்டுபிடிப்பு, புத்தாக்கம் அது இது யெதுங்கற வீ...