வேப்பிலை அடிக்கும் உலகமயமாக்கலும் சாமியாடும் நுகர்வு கலாச்சாரமும்

உலகமயமாக்கலும், திறந்தவெளி சந்தையும் மனிதர்களை அந்நியப்படுத்துவதில் தீராத வேட்கையோடு மனித உறவுகளையும் உணர்வுகளையும் வேட்டையாடிக்கொண்டிருக்கின்றன. இயற்கையிடம் இருந்து மனிதன் அந்நியப்பட்டு பல பத்தாண்டுகள் ஓடிவிட்டன. தங்கள் வாழ்வின் பெரும் பகுதியை இயற்கையோடு பங்கிட்டு அனுசரித்து வாழ்ந்த மனிதர்கள் இன்று இயற்க்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக எழுந்து நிற்கிறார்கள். தங்களுக்குள் அந்நியப்படுவதிலும் போட்டிப்போட்டுகொண்டிருக்கிறார்கள். உலக நாகிரீகம் ஒவ்வொன்றும் இயற்க்கையிலிருந்து தங்களுக்கான உணவையும், நல் வாழ்வுக்கான மருந்துகளையும் சூழல் அமைவிற்கு ஏற்ப பெற்றுக்கொண்டிருந்த உறவு அறுக்கப்பட்டு, ஒருசில பாகசுர கும்பெனிகளின் லாப பேராசையை தணிக்கும் விதமாக, Research & Development Lab-களிலிருந்து இன்றைய உலக மக்கள் தங்களுக்கான உணவையும், மருந்துகளையும் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கே உரித்தான மண் சார்ந்த வாழ்க்கைமுறை என்பது இன்றைக்கு உலகத்திலிருக்கும் எல்லா மனித நாகரீகத்திற்கும் சென்ற தலைமுறையின் பழங்கதையாகிவிட்டது. வளர்ச்சி என்கிற பெயரில் வந்த அறிவியல் கண்டுபிடிப்புகள், உலக நாகரீகங்களை அதனுடைய...