தென்னமெரிக்க தமிழர்கள்....புத்தகத்தின் சிறு துளி....

தென்னமெரிக்க தமிழர்கள்....புத்தகத்தின் சிறு துளி.... "மாயன் என்கிற வார்த்தைக்கும் மாயோன் என்கிற தமிழ் வார்த்தைக்குமான தொடர்பை காக்கைகளுக்கு படைத்துவிடுவோம். நிச்சயமாக நாம் அப்படியான மொழி ஆராய்ச்சிகளில் எல்லாம் ஈடுபட்டு நம்முடைய நேரத்தை வீணடிக்க கூடிய மூடர்கள் இல்லை என்பதாலும் நமக்கு சினிமா பாடல் கவிகளின் வார்தை ஜாலங்களை தூர் வாருவதற்கே நூற்றாண்டுகள் போதாமல் இருப்பதின் காரணமாகவும் வரலாற்று ஆய்வுகளை காக்கைகளுக்கு திண்ண கொடுத்துவிடுவதே சான்றோர் செயலாக இருக்கும். பாதி வேட்டை மீதி தோட்ட உணவு உற்பத்தி என்று மாயன் நிலப்பகுதிகளில் சுற்றி அலைந்த மாயன்களின் தொடக்க கால கிராம குடியிருப்புக்களை கி.மு. 1800 தொடங்கி பார்க்க முடிகின்றது. கிராம குடியிருப்புக்கள் என்றால் குறிப்பிட்ட பகுதியில் நானூறு ஐந்நூறு வீடுகள் இருக்கும் என்கிற பொருளுக்குள் சென்றுவிட வேண்டாம். ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு வீடு என்கிற அளவிலேயே தொடக்க கால மாயன் கிராம குடியிருப்புக்கள் இருந்திருக்கின்றன. மாயா என்கிற இனக் குழு பெயர் எங்கிருந்து பெறப்பட்டது என்பதற்கான தெளிவான ஆய்வு முடிவுகள் இதுவரை வெளிவரவில்லை. சில ஆ...