"பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதாவது கி.பி. 900-களின் தொடக்கத்தில் டிக்கால் மயான சரிவை நோக்கி செல்லத் தொடங்கியது. இதற்கு காரணம் மற்ற மாயன் பேரரசுகளின் அல்லது மெக்சிக்க பேரரசுகளின் படையெடுப்புக்களோ அல்ல. கொஞ்சம் கொஞ்சமாக டிக்கால் வாசிகள் நகரத்தை விட்டு வெளியேறத் தொடங்கிவிட்டார்கள். வேறு வார்தைகளில் சொல்வது என்றால் நகரம் கைவிடப்பட்டுவிட்டது. இது டிக்கால் நகரத்திற்கு மாத்திரம் நேர்ந்த கதியல்ல அதன் சம காலத்தில் உச்சத்தில் இருந்த வடக்கு மற்றும் தெற்கு மாயன் பேரரசுகளுக்கும் நேர்ந்த கதி. மக்கள் கூட்டம் கூட்டமாக நகரங்களை விட்டு வெளியேறிவிட்டார்கள். இதற்கான காரணத்தை விளக்க கூடிய எத்தகைய வரலாற்று ஆதாரங்களும் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை. அளவுக்கு அதிகமான சனத்தொகை பெருக்கமும், அதற்கு ஈடுகொடுக்க கூடிய அளவிற்கான உணவு உற்பத்தி இன்மையும், பருவ நிலை மாற்றங்களும், மக்கள் மாயன் நகரங்களை கைவிடவைத்திருக்கவேண்டும் என்பது இன்றைய ஆய்வாளர்களின் அனுமானம். இந்த காரணங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவைகள்தான் என்றாலும் முழுமையாக இவைகள் மாத்திரமே காரணங்களாக இருக்க முடியாது என்பது மற்றொரு பிரிவ...