ஊர்-ல் காயும் தமிழ் நிலவு

வருடம் கி.மு. 3000 அதாவது இன்றிலிருந்து மிகச் சரியாக 5000 வருடங்களுக்கு முன்பு, அரேபிய ( Arab) நாட்டை தெற்கு வடக்காக கடந்து Persian Gulf -யை அடைந்து பிறகு Euphrates நதிக்கரையில் அமைந்திருக்கும் அந்த புகழ்பெற்ற நகரத்தை நோக்கி ஒரு வணிக கூட்டம் போய்கொண்டிருக்கிறது. அவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டே போகிறார்கள். என்ன ஆச்சரியம் அவர்கள் பேசுவது தமிழ் மொழி, ஆம் அவர்கள் தமிழில் தான் பேசிக்கொள்கிறார்கள். அவர்களை நாம் இன்னும் கொஞ்சம் அருகில் சென்று பார்க்கலாம் வாருங்கள். அடக் கடவுளே அவர்கள் தமிழ் வணிகர்கள். தமிழக வணிகர்களுக்கு இங்கு என்ன வேலை? இந்து மா கடலையும், அரேபியாவின் பாலைவனங்களையும் கடந்து இவர்கள் எங்கே போய்கொண்டிருக்கிறார்கள்? ஊர் ( Ur), அந்த தமிழ் வணிகர்கள் போய்கொண்டிருப்பது இந்த நகரத்தை நோக்கித்தான். அவர்களில் சிலர் ஊர்க் ( Urk) என்கிற நகரத்தை நோக்கி பிறகு செல்வார்கள். இந்த ஊர் மற்றும் ஊர்க் நகரங்கள் எங்கே இருக்கின்றன என்று நீங்கள் புருவம் உயர்த்தினால் இதை படியுங்கள். இந்த இரண்டு நகரங்களும் Mesopotamia நாகரீகம் செழித்து வளர்ந்த Sumeria- யாவில் இருக்கின்றன. Euphrates மற்றும் ...