மலை முழுங்கிகள்

மனித நாகரீகத்தின் முதல் நாவல் வடிவ இலக்கியமாக இன்று உலக இலக்கிய விமர்சகர்களால் போற்றப்படுவது கில்காமேஸ்( Gilgamesh). இந்த நாவல் எந்தவிதமான மாறுதல்களுக்கும், குறைந்த பட்ச திரிபுகளும்கூட உட்படாமல் ஏறத்தாழ் 7000 வருடங்களாக புழக்கத்திலிருக்கிறது. இது சுமேரிய நாகரீகத்தின் இலக்கிய தொடக்கமாக கருதப்படுகிறது. இன்று ஐரோப்பாவின் கலாச்சாரத்திற்கும், மொழிகளுக்கும் மூலமாக கருதப்படும் கிரேக்கத்தில் 2900 வருடங்களுக்கு முன்பு இலியாட்( Ilayd) தோன்றி, கிரேக்க பாதிக் கடவுள்( Demigod) கதாநாயகர்களின் கதைகளை பேசி இன்றளவும் எந்திவித மாறுதல்களுக்கும் உட்படாமல், உட்படுத்தப்படாமல் கிரேக்கர்களின் கலாச்சார கூறுகளை வெளிச்சமிடுகிறது. எகிப்தியர்களின் பாப்பைரஸ் சுருள்களுக்கு ( Papyrus Scrolls) ஏறத்தாழ ஐந்தாயிரம் வயது. இவைகள் எகிப்திய பாரோ வம்சாவளியினரின் கதைகளை எந்தவிதமான இடைசொறுகல்களும், எந்தவிதமான மாயமால திரிபுகலும் இல்லாமல் உள்ளதை உள்ளவாரு பாதுகாத்து இன்றைய நாகரீக உலகத்திற்கு எடுத்துசொல்லி நம்மை வாய்பிளக்க வைக்கின்றன. நாம் பார்த்த இந்த நாகரீகங்கள் அனைத்தும் அந்நியர்களின் படையெடுப்புகளுக்கும், ஆளுகைகளுக்க...