காத்திருக்கிறது வாயில் காப்போரின் நிலா சோறு கதைகள்
கடவுள் இந்த சொல் ஒன்று போதும், தமிழன் அடிமைத்தனத்தின் கீழ்த்தரமான எந்த நிலைக்கும் இறங்குவதற்கு தயங்க்கவேமாட்டான். 3000 வருடங்களுக்கு முன்பு இந்த ஒற்றை வார்த்தையை வைத்துதான் ஆரியமும், பார்ப்பனியமும் தமிழனின் நிலையை, தன்மானத்தை, சிறப்புகளை, கலைகளை அடகுக்கு எடுத்துக்கொண்டான். பார்ப்பனியம் வெகு சுலபமாக தமிழனின் ஓட்டுமொத்த வாழ்க்கைக்கும் ஆரிய சாயம் பூசிவிட்டது. மொழித் தொடங்கி கலைகள் வரை அனைத்தும் ஆரியப் பெயர்கள் தாங்கி ஓலைச்சுவடிகளில் ஏறின. தமிழனின் கட்டிடக் கலையும் இதற்கு விதிவிலக்கு கிடையாது. இன்று தமிழர்களின் கட்டிடக் கலையைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்பும் ஒருவர், ‘ மாய மதம் ’ , ‘ காசிப சில்பசாத்திரம் ’ என்கிற இரு ஆரிய மொழி நூல்களைத்தான் படித்தாகவேண்டும். ஏமாந்த தமிழர்களின் கட்டிடக் கலை நுட்பங்களை தமிழ் மொழியிலிருந்து ஆரிய மொழிக்கு மொழிமாற்றம் ( Translation) செய்து எழுதி எடுத்துக்கொண்டு அதைத் தமிழர்களிடமே காட்டி தமிழர்களின் கட்டிடக் கலை நுட்பத்திற்கு மூலம் தங்களின் சமஸ்கிருத நூல்கள் தான் என்று பார்ப்பனியம் சாதித்துவிட்டது. மூலத் தமிழ் நூல்கள் மாயமாய் மறைந்து போய்விட்டன இல்லை இல்லை ...