தென்னமெரிக்க தமிழர்கள்.....புத்தகத்தின் சிறு துளி.....
"வடக்கு அமெரிக்க கண்டம் மற்றும் தெற்கு அமெரிக்க கண்டம். இன்றைக்கு வடக்கு கண்டம் அமெரிக்கா (United States of America) என்றும் தெற்கு கண்டம் தென்னமெரிக்கா என்றும் குறிப்பிடப்படுகிறது. இன்றைக்கு இந்த இரண்டு கண்டங்களும் ஐரோப்பிய இனங்களின் குடியேற்றத்தால் நிறைந்திருக்கிறது. அமெரிக்கா ஆங்கில மொழி பேசுபவர்களால் பெரும்பான்மையாகவும், தென்னமெரிக்கா ஸ்பானிய மொழி பேசுபவர்களை பெரும்பான்மையாகவும் கொண்டிருக்கிறது. குடியேற்றக்காரர்களால் நிறைந்திருக்கிறது என்றால் அந்த மண்ணின் பூர்விக குடிகள் அவர்கள் இல்லைப்போலும் என்கிற பொருள்தானே கொள்ளவேண்டியிருக்கிறது. நிச்சயமாக அப்படித்தான். ஏனென்றால் அந்த இரண்டு பெரும் கண்டங்களின் பூர்விக மண்ணின் மைந்தர்கள் ஐரோப்பிய இனங்கள் கிடையாது. அவைகளுக்கு என்று தனித்த வரலாறு உண்டு. மண்ணின் மைந்தர்களின் தனித்த நாகரீகங்கள் உண்டு. அந்த மண்ணிற்கே உரிய வரலாறும் மைந்தர்களும் அழிக்கப்பட்டு இரத்த சரித்திரமாக வரையப்பட்டதே இன்றைய அந்த கண்டங்களின் முகம். இரத்த கரையை மறைத்திருக்கும் நவீன முகத்தைவிட மண்ணின் மைந்தர்களின் உண்மை முகத்தை அவர்களின் வரலாற்றை தெரிந்துக்க...