முரட்டுக் கூத்தாடி – எம்.ஆர்.ராதா
மதராசு ராசகோபால ராதாகிருசண நாயுடுவை பழைய கருப்பு வெள்ளைத் திரைப்படங்களில் தோன்றும் வில்லன் நடிகராகவோ, நகைச்சுவை நடிகராகவோ நம்மில் பலர் நிச்சயமாக அறிந்திருப்போம். இன்னும் சிலர் அவரின் திரைப்படமான ரத்தக் கண்ணீர் மூலம் அவரின் ரசிகராக கூட இருக்கலாம். ஆனால் நம்மில் எத்தனைப் பேருக்கு தன்மானமே பெரிது என்று சமரசத்திற்கு இடமலிக்காமல் வாழ்ந்து மறைந்த எம்.ஆர்.ராதாவின் கலகம் கலந்த புரட்சிகர இன்னொரு முகம் தெரியும்? செல்லுலாய்டில் மட்டுமே புரட்சியும், கலகமும் செய்து தங்களின் பெயர்களுக்கு முன்னால் பட்டங்களை வெற்றுப் பெருமையாக போட்டுக் கொண்டவர்களின் மத்தியில், தன் வாழ்வையே புரட்சியும் கலகமாகவும் மாற்றி வாழ்ந்து மறைந்தவன் எம்.ஆர்.ராதா என்கிறக் கலகக்காரன். குரலில் ஏற்ற இறக்கங்களைக் காட்டி திரையில் நகைச்சுவை செய்யும் ராதா உண்மையில் முரட்டு சுபாவம் கொண்டவர். முரட்டு சுபாவம் என்றால் வலிய சென்று வம்பை தேடும் சுபாவம் அல்ல தேடிவரும் வம்பை உண்டு இல்லை என்று பார்க்கும் அளவிற்கு எதற்கும் எந்த நிலைக்கும் இறங்க தயங்காதவர். வம்பை கொண்டுவருபவர் யாராக இருந்தாலும் எப்பேர்பட்டவராக இருந்தாலும் ராதாவின் அதிரடி நடவ...