Posts

உலக சினிமாக்களின் திரைக்கதை அமைப்புக்கள்....

உலக சினிமாக்களின் திரைக்கதை அமைப்புக்கள்.... புத்தகத்தின் முன்னோட்ட சிறு துளி.... "பின்கட்டமைப்பு வாதம் (Poststructuralism) அறுபதுகளுக்கு பின்பும் எழுபதுகளின் தொடக்கத்திலும் கவனம் பெற்று தலையெடுக்கத் தொடங்கியது பின்கட்டமைப்பு வாதம். கட்டமைப்பு வாதத்தின் உட் பிரிவு, கிளை பிரிவு, மற்றொரு பகுதி, அதின் ஒரு பாகம் என்று எப்படி வேண்டுமானாலும் பின்கட்டமைப்பு வாதத்தை வகைப்படுத்த முடியும். அதே சமயத்தில் கட்டமைப்பு வாதத்திற்கு எதிரான போக்கை கொண்டது பின்கட்டமைப்பு வாதம் என்றும் சொல்ல முடியும். கட்டமைப்பு வாதத்தை போலவே பின்கட்டமைப்பு வாதமும் மொழியியலை அடிப்படையாக கொண்டிருந்தாலும் சில அடிப்படை கருத்து நிலைகளில் அது கட்டமைப்பு வாதத்திலிருந்து வேறுபட்டு நிற்க கூடியது. யதார்த்த உலகிற்கும், மனித வாழ்வியலுக்கும் அதை குறிப்பிட பயன்படுத்தப்படும் மொழிக்கும் உள்ள வித்தியாசத்தையும் (signifier & signified), வார்த்தைகள் தனக்கு முன் மற்றும் பின் இருக்கும் வார்தைகளில் இருந்தும் தனக்கான அர்த்தங்களை பெறுகிறது, மொழிக்கும் முன்பே இருத்தல் (presence – உலக படைப்புக்கள் அனைத்...

உலக சினிமாக்களின் திரைக்கதை அமைப்புக்கள்....

Image
உலக சினிமாக்களின் திரைக்கதை அமைப்புக்கள்: An Introductory To Next Gen Screenwriting.... புத்தகத்தின் முன்னோட்ட சிறு துளி... "இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரையில் (அதாவது 1960-களுக்கு முன்பு வரை) இலக்கியமாக கருதப்படும் எழுத்துக்களில் சமகால அரசியலின் பிரதிபலிப்பை விமர்சன ரீதியில் தேடுவதும் ஆராய்வதும் வாசிப்பு அனுபவத்திற்கு இடையூறை ஏற்படுத்துவதாக இருக்கும் என்கிற எழுதப்படாத நம்பிக்கை பரவலாக நடைமுறையில் இருந்தது. இந்த நம்பிக்கையை உடைத்துக்கொண்டு உருவெடுத்தது எழுத்துக்களின் அரசியல் விமர்சனம். பின்கட்டமைப்புவாத (Poststructuralism) காலக்கட்டத்தில் (1980-களுக்கு பிறகு) எழுத்துக்கள் பிரதிபலிக்கும் சமூக-அரசியல் சூழ்நிலை என்பது பழமை வாதமாக பார்க்கப்பட்டாலும் விமர்சன கலையில் அவைகளுக்கான இடம் முற்றிலுமாக மறுக்கப்படவில்லை. மேற்கை பொருத்தவரையில் எழுத்துக்களின் சமூக-அரசியல் பிரதிபலிப்பு என்பது மூன்று நிலைகளில் வெளிப்படுகிறது. அவை மார்க்ஸ்சிசம், பெண்ணியம் மற்றும் இன வாதம் (வெள்ளை – மற்ற இனங்கள்). நம்மை பொருத்தவரையில் இனவாதம் என்பது இரண்டு கிளைகளாக பிரியக் கூடியது. திராவிடம் மற்றும் தலித்...

உலகத் திரைப்படங்கள் விமர்சனப் பார்வை

Image
உலகத் திரைப்படங்கள் விமர்சனப் பார்வை: திரைக்கதை உத்தி, எடிட்டிங் உத்தி, கேமிரா உத்தி புத்தகம் வெளிவந்துவிட்டது. இதன் Ebook pdf version-யை கீழே இருக்கும் படத்தை சொடக்கி அதற்கென்று வரும் இணைய பக்கத்தில் வாங்கலாம். புத்தகமாக சென்னை வடபழனியில் உள்ள Pure Cinema புத்தக கடையில் விற்பனைக்கு கிடைக்கும்..... இதன் விலை ரூ. 150/-

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

Image
‘என்ன கொடும சார் இது. எல்லா வழியும் ரோமுக்கு போகுது’. 2100 வருசங்களுக்கு முன்னால நீங்க மத்திய தரை கடலை சேர்ந்த ஏதாவது ஒரு நாட்டுலயோ இல்ல மேற்கு ஐரோப்பாவுல ஏதாவது ஒரு சந்துலயோ, போய் சேர வேண்டிய இடத்தோட விலாசத்த தொலச்சுட்டு வழி தேடிக்கிட்டிருந்தீங்கன்னா இப்படித்தான் பொலம்பி இருப்பீங்க. கிரேக்க நாகரீகத்த கபளீகரம் செஞ்ச ரோம பேரரசோட மெய்கீர்த்தி அப்படி.பேரரசோட வல்லரசுன்னு சொன்னா வரலாறு கோச்சுக்காது. Age of Expansion, Age of Exploration, Age of Empires, Age of Consolidation, Age of ......கிழிஞ்சது இப்படியே போனா படிக்கிற உங்களுக்கு Age of கடுப்பு வந்துடும். இதெல்லாம் வேற ஒன்னுமில்லீங்க ரோம பேரரசர்கள் அவங்களோட நாடு புடிக்கிற ஆசைக்கு வச்சுகிட்ட punch subtitles. கட்டுக்கடங்காத ராணுவத்த கட்டுக்கடங்காம எந்த நாட்டுமேல கட்டவிழ்த்து விடலாம்னு யோசிக்கறது ரோமபேரரசர்களோட பதினாறு மணி நேர வேலைதிட்டம். உடனே ரோம பேரரசர்களோட வேலயே இதானோன்னு நினைச்சுட வேண்டாம்.ரோம பேரரசர்களோட கவனம், war -க்கு எந்த நாடும் சிக்காத பொழுது சிறிது கலைக்கும் ஈயப்பட்டது. கலைன்னா போர் கலை தொடங்கி கட்டிட கலை, சிற்பக் கலை, ...

திராவிடத்த தீயா தேடணும் திராவிடா

Image
தலைப்பு அச்சுபிச்சுன்னு இருந்தாலும் இந்த கட்டுரையில நாம பாக்கபோற விசயம் அப்படிப்பட்டது இல்ல. திராவிட கருத்தியில், திராவிட கோட்பாடு, திராவிட சித்தாந்தம், திராவிடம் இதெல்லாம் அரசியல் சாரந்து அரசியல் கட்சிகளோடு முடிஞ்சுபோற விசயங்களான்னு யோசிக்குறப்ப தேடலுக்கான ஒரு பாதை தெரியுது.இதுலதிராவிடம்ங்கற சொல்லே இன வெறியை தூண்டுதுங்ற குசும்பு அரசியல் வேறு ஒரு பக்கம் சக்கப்போடு போட்டு box-office hit -ஆ போயிட்டிருக்கு. திராவிடம்ங்ற சொல்லோ, திராவிட சித்தாந்தமோ இனப் பெறுமையில இருந்தோ இல்ல இன வெறியில இருந்தோ உண்டானது இல்ல. அறிவியல் சார்ந்த மானுடவியல் ஆராய்ச்சிதான் முதல் முதல்ல திராவிடம்ங்றத உலகத்துக்கு அறிமுகப்படுத்துது. இன்னிக்கு உலக பல்கலைகழகங்கள் திராவிட ஆராய்ச்சி பத்தின விசயங்கள நடத்தி ஆக்கபூர்வமான விசயங்கள வெளிப்படுத்திக்கிட்டுருக்கும்போது இங்கமட்டும் திராவிடத்தை இனவெறின்னு கழுவி கழுவி ஊத்துறதுல நமக்கு சல்லாப மகிழ்ச்சி. தமிழன்தான் இந்த திராவிடத்த கண்டுபுடுச்சான்னு நினைச்சுக்கிட்டு இருந்தா உங்கள விட அசடு வேற யாரும் இருக்கமுடியாது. ஏன்னா தமிழன் கண்டுபிடிப்பு, புத்தாக்கம் அது இது யெதுங்கற வீ...

மாரடித்தழும் அசகாயசூரர்கள்

Image
Spider Man, Super Man, He Man, Batman, Catwoman, Watchman, இப்படி அனைத்துவிதமான Man- களையும் தமிழ் கூறும் நல்லுலகம் அனேகமாக அறிந்தேவைத்திருக்கிறது . நம்முடைய Super- கள் மற்றும்  Star- களின் படங்களுக்கு இடையே , சில நேரங்களில் போட்டியாகவே இந்த ஹாலிவுட் அசகாயசூரர்கள் திரை அரங்குகளை தங்களின் கட்டுப்பாட்டிற்குள்கொண்டுவருவதுண்டு .  தமிழ் சமுகத்தின் கடைத்தேற்றமே நம்முடைய படங்கள் மட்டும்தான் என்று நம்மிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமா நட்சத்திரங்களுக்கும் ஹாலிவுட் அசகாயசூரர்களுக்கும் அதிக வித்தியாசம் ஒன்றும் கிடையாது . ஆனால் இவர்களுக்கு இடையே இருக்கும் சில வித்தியாசங்கள் மிக முக்கியமானவைகள் . மக்களுக்கு பெரிய ஆபத்துகள் வரும்பொழுதெல்லாம் ,  அவர்களுக்குள் ஒருவனாக ,  தங்களுடைய உண்மை அடையாளத்தை மறைத்து வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த அசகாய சூரர்கள் தாங்களாகவே வரிந்துகட்டிக்கொண்டு ஓடியோ , பறந்தோ , புரண்டோ வந்து மக்களை அந்த ஆபத்துகளிலிருந்து காப்பாற்றி சாவுவிமோசனம் தருவார்கள் . இதில் ஆச்சரியம் இந்த அசகாயசூரர்களின் கதைகள் அனைத்திலும் மக்களுக்கு ஆபத்தை உண்டுபண்ணுபவர்கள் வேற்ற...

பிண்டமே அண்டம், அண்டமே பிண்டம்

Part 1 'வரும் காலம் வசந்த காலம்' என்று நற்செய்தி சொன்ன நம்முடைய ஆட்சியாளர்கள், தாராளமயமாக்கலுக்கும், உலகமயமாக்கலுக்கும் இந்தியாவின் நான்கு திக்கு கதவுகளையும் அகல திறந்துவிட்டார்கள். நம்முடைய பொருளாதார மெஸியாக்களான மன்மோகன் சிங்கும், சிதம்பரமும் இந்தியா, உலக பெரு நிறுவனங்களின் நுகர்வுப் பொருளாக மாறுவதும், தொடர்ந்து அப்படியே இருப்பதும் இந்தியர்களின் மோட்சத்திற்கான ஒரே வழி என்று தீர்க்கதரிசனம் சொன்னார்கள். அவர்களுடைய சிஷியப் பிள்ளைகளான வளர்ச்சி விரும்பிகளும் தங்களுடைய நாக்குளில் பச்சை மிளகாயைத் தடவிக்கொண்டு கிளிகள் போல கடந்து இரு பத்தாண்டுகளாக அதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை தரத்தை உயர்த்தவேண்டிய வளர்ச்சி, வாழும் தரத்தை மேலும் மேலும் குறைத்துக்கொண்டிருக்கிறது. ரத்தக் கொதிப்பும், சர்கரையும் இன்று சமநிலை சமுதாயத்திற்கான குறியீடுகளாக மாறிவிட்டது. மனிதகுலத்தை மீட்டெடுக்க வந்த நவீன மருத்துவம் இன்றைக்கு பாகாசுர கம்பெனிகளின் பணத் தோட்டமாகிவிட்டது. ஒருவகையில் நவீனம் என்று சொல்லப்படும் இன்றை மருத்துவம் செயற்கையே. பக்க விளைவுகள் இல்லா மருத்துவம் என்பது இன்றை...