தென்னமெரிக்க தமிழர்கள்
இப்பொழுது எழுதிக்கொண்டிருக்கும்....."தென்னமெரிக்க தமிழர்கள்" புத்தகத்தின் சிறு துளி.... சோளம், அவக்காடா, கொக்கோ, ஸ்குவாஷ் பழ வகைகளை பருவ காலங்களில் விளைவித்து உணவு பொருளாக பயன்படுத்திவிட்டு வருடத்தின் மற்ற நாட்களில் இடம் பெயர்ந்து வேட்டையின் மூலம் கிடைக்கும் உணவுப் பொருட்களை பயன்படுத்தும் பாதி நிலையாக தங்குதல் மீதி இடம் பெயர்ந்து செல்லுதல் என்கிற வாழ்கை முறையே கி.மு. 2000 வரை நிலைத்திருந்தது. நிலையான விவசாய கிராம குடியிருப்புக்களுக்கான எத்தகைய தொல்லியல் ஆதாரங்களும் கி.மு. 2000 காலக்கட்டப் பகுதிவரை மெக்சிக்கோவின் எந்த ஒரு நிலப்பகுதியிலும் கிடைத்தப்பாடில்லை. இந்த நிலையில் திடீரென்று கி.மு. 1200-ல் ஓல்மெக் பேரரசின் முதல் தலைநகரான சான் லோரன்சோ (San Lorenzo) வரலாற்றின் வெளிச்சத்திற்கு வருகிறது. நிலையான குடியிருப்புக்கள், குடியிருப்புக்களின் தொகுப்பாக கிராமங்கள், கிராமங்களின் தொகுப்பாக வணிக நகரங்கள் பிறகு தலைநகரம் என்கிற விவசாய நாகரீகத்திற்கே உரிய படி நிலை வளர்ச்சியில் இல்லாமல் வானத்திலிருந்து உருண்டு வந்ததைப்போல சான் லோரன்சோ உருப்பெற்றது இன்றைக்கு வரை வரலாற்று புதிர்களில் ...