Posts

‘எதிர்ப்போ......ம் ஆனா...... எதிர்.....க்க மாட்டோம்’

Image
நேற்று இரவு புதிய தலைமுறையில் கூடங்களும் அணு உலை தொடர்பாக மீண்டும் ஒரு விவாதம் நடந்தது. இதில் கம்யூனிஸ்டுகளின் சார்பாக ராமநாதன் கலந்துகொண்டார். ராமநாதன் இந்த விவாதத்தில் கலந்துகொள்ளாமலேயே இருந்திருக்கலாம். அந்த அளவிற்கு அவரே அவர்களுடைய கொள்கைகளை நாறடித்துகொண்டார். நாம் கம்யூனிஸ கொள்கைகளுக்கு எதிரானவர்கள் கிடையாது. ஆனால் தற்பொழுது இந்தியாவில் செயல்படும் பொலிட் பியூரோவை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. கம்யூனிஸ்டுகள் தாங்களே தங்களை இந்தியாவை ஆளும் தகுதியிலிருந்து தள்ளிவைத்துகொள்ளுகிறார்கள். ரஷ்யா எது செய்தாலும் அதற்கு கண்மூடித்தனமான ஆதரவு ஆனால் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளுக்கு எதிர்ப்பு. ரஷியாவும் கூட இன்றைக்கு வல்லரசு நாடுகளைப் போல பெரு முதலாளிகளின் நலனைத்தான் முதன்மையாக பார்க்கிறது என்பதை இந்திய கம்யூனிஸ்டுகள் ஏற்க மறுப்பது வேதனை சிரிப்பைதான் வரவழைக்கிறது. நேற்று பேசிய ஜி. ராமநாதன் ரஷ்ய அணு உலைகள் மிகவும் பாதுகாப்பானது அதை ஆதரிப்பது கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு அதே சமயத்தில் அமெரிக்கா இந்தியாவிற்குள் கொண்டுவர இருக்கும் அணு உலைகளை எதிர்கிறோம், எதிர்ப்போம் என்றார். அ...

காவிரி புகும் இடத்தில் துலைந்த சுவடுகள்

Image
மனித நாகரீகம் தான் கடந்து வந்த பாதைகளில் மறக்க முடியாத அதே சமயத்தில் ஆச்சரியமான பல நகரங்களை உருவாக்கியிருக்கிறது. சுமேரியர்களின், பாபிலோன் நகரம் பல ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் உள்ளடக்கி இருந்தது. வல்லரசு அடையாளத்தை இந்த பாபிலோன் நகரம் வரலாறு முழுவதும் சுமந்து திரிந்திருக்கிறது. வரலாற்று காலத்து உலக அதிசயங்களில் ஒன்றான தொங்கும் தோட்டம் இந்த நகரில்தான் இருந்தது. பைபிலிலும் கூட இந்த நகரத்தின் பிரம்மாண்டம் குறித்த செய்திகள் உண்டு. மேலை எகிப்தில் ( Upper Egypt) தோன்றி கீழை எகிப்தில் (Lower Egypt) முடியும் நைல் நதியின் இருகரை நெடுக எகிப்தியர்கள் பல நகரங்களை கட்டி எழுப்பியிருந்தாலும், மத்தியத் தரைகடல் பகுதியில் நைல் நதியின் கழிமுகத்தில் அலெக்ஸாண்டரால் தோற்றுவிக்கப்பட்ட அலெக்ஸாண்டிரியா நகரம் வரலாற்றில் மிக அழுத்தமான ஒரு அடையாளத்தை பதிவு செய்தது. உலகம் அதுவரை கண்டிராத ஒரு நூலகத்தை அலெக்ஸாண்டர் அந்த நகரத்தில் கட்டியெழுப்ப திட்டமிட்டு அது நிறைவேற்றபட்டது. அன்றைய காலகாட்டத்தில் அதாவது இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வல்லரசாக இருந்த அனைத்து நாடுகளின் அறிவு சொத்துகளும், மிக நீ...

வையகத்து கோமான்கள் (வை.கோ)

தமிழகத்தின் பல போராட்ட களங்கள் இன்று அறிந்திருக்கும் ஒரு வார்த்தை வை.கோ. தெற்கில் கூடங்குள போராட்டம் தொடங்கி வடக்கில் ராஜபக்சே இந்திய வருகை என்று அனைத்து போராட்ட களங்களிலும் போராடுபவர்களுக்கு உறுதுணையாக ஆதரவு குரல் கொடுப்பது மட்டுமில்லாமல் தமிழர்களின் உணர்வுகள் சார்ந்த போராட்டங்களை கட்டமைத்தும்வருகிறார். தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் (விடுதலை புலிகள் மற்றும் நாம் தமிழர் கட்சிகள் நீங்களாக) சுப. உதயகுமாரனை ஒரு தீவிரவாதிபோலவும், தமிழகத்தின் அமைதியை குலைப்பவர் போலவும் சித்தரித்து வரும் நிலையில், வை.கோ அவர்கள் ஆரம்பம் தொட்டு உதயகுமாரனுக்கு ஆதரவு குரல் கொடுத்துவருகிறார். இங்கே நாம் ஒன்றை கவனிக்க வேண்டியிருக்கிறது. வை.கோ, உதயகுமாரனுக்கு ஆதரவு குரல் கொடுத்தவருகிறார் என்று குறிப்பிடுகிறோம். காரணம் மிகவும் வெளிப்படை, இதன் அர்த்தமும் வெளிப்படை அது வை.கோ இன்னொருவர் வென்றெடுத்த போராட்டதில், அரசியல் லாப குளிர் காய விரும்பவில்லை என்பது. வை.கோ உணர்வுப்பூர்வமாக கூடங்குள மக்களின் பின்னியில் இருக்கிறாரே தவிர அந்த சாதாரண மக்களின் போராட்டத்தை தனிப்பட்ட ஓட்டு வேட்டையாக வென்றெடுக்க விரும்ப...

மண்ணில் புதைந்த பால்நிலாவின் வெளிச்ச சிதறல்கள்

Image
அது 1880-களின் தொடக்கம். கிழக்கு பாகிஸ்தானில் லாகூர், ராவில்பிண்டி இடையே உச்சி வெயிலில் ரயில் பாதை அமைத்துகொண்டிருந்த அந்த தொழிலாளர்கள் தீடிரென்று ரயில் பாதை வேலையை அப்படியே போட்டது போட்டபடி நிறுத்திவிட்டார்கள். அங்கே அவர்கள் பார்த்த காட்சி அவர்களை முற்றிலும் குழப்பிவிட்டது. மேற்கொண்டு என்ன செய்வது என்றே அவர்களுக்கு புரியவில்லை. அந்த திட்டத்தின் பொறியாளர் மண்டைய திறக்கும் வெயிலையும் கூட பொருட்படுத்தாமல் அடித்துபிடித்துகொண்டு அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார். அவரும் தன்னுடைய வாழ் நாளில் அப்படி ஒரு காட்சியை கண்டதில்லை. வெள்ளை மேலதிகாரிகளுக்கு தகவல் பறந்தது. அது லண்டனில் பிரதிபலித்து, பிரிட்டீஸ் இந்திய தொல்லியல் துறையின் இயக்குனர் அலெக்ஸாண்டர் கன்னிங்கம் அங்கு வந்து சேர்ந்தார். அந்த நொடியிலிருந்து மண்ணில் புதைந்து கிடந்த அரப்பா மற்றும் மோகஞ்சதரோ நகரங்களை உள்ளடக்கிய சிந்து நாகரீகத்தின் ரகசியங்கள் வெளி உலகிற்கு தெரியத்துவங்கின. ஆரியமே இந்தியா, இந்தியாவே ஆரியம் என்று கற்பனை செய்துகொண்டிருந்தவர்களின் தலையில், முதல் இடி இறங்கிய தருணமும் இதுதான். இந்தியாவின் வரலாறு ஆரியர்களின் வருகையோடுத...

மலை முழுங்கிகள்

Image
மனித நாகரீகத்தின் முதல் நாவல் வடிவ இலக்கியமாக இன்று உலக இலக்கிய விமர்சகர்களால் போற்றப்படுவது கில்காமேஸ்( Gilgamesh). இந்த நாவல் எந்தவிதமான மாறுதல்களுக்கும், குறைந்த பட்ச திரிபுகளும்கூட உட்படாமல் ஏறத்தாழ் 7000 வருடங்களாக புழக்கத்திலிருக்கிறது. இது சுமேரிய நாகரீகத்தின் இலக்கிய தொடக்கமாக கருதப்படுகிறது. இன்று ஐரோப்பாவின் கலாச்சாரத்திற்கும், மொழிகளுக்கும் மூலமாக கருதப்படும் கிரேக்கத்தில் 2900 வருடங்களுக்கு முன்பு இலியாட்( Ilayd) தோன்றி, கிரேக்க பாதிக் கடவுள்( Demigod) கதாநாயகர்களின் கதைகளை பேசி இன்றளவும் எந்திவித மாறுதல்களுக்கும் உட்படாமல், உட்படுத்தப்படாமல் கிரேக்கர்களின் கலாச்சார கூறுகளை வெளிச்சமிடுகிறது. எகிப்தியர்களின் பாப்பைரஸ் சுருள்களுக்கு ( Papyrus Scrolls) ஏறத்தாழ ஐந்தாயிரம் வயது. இவைகள் எகிப்திய பாரோ வம்சாவளியினரின் கதைகளை எந்தவிதமான இடைசொறுகல்களும், எந்தவிதமான மாயமால திரிபுகலும் இல்லாமல் உள்ளதை உள்ளவாரு பாதுகாத்து இன்றைய நாகரீக உலகத்திற்கு எடுத்துசொல்லி நம்மை வாய்பிளக்க வைக்கின்றன. நாம் பார்த்த இந்த நாகரீகங்கள் அனைத்தும் அந்நியர்களின் படையெடுப்புகளுக்கும், ஆளுகைகளுக்க...

மாமல்லனோடு மல்யுத்தம்

Image
‘ காஞ்சிபுரத்தை சுற்றிக் கொண்டு நுங்கும் நுரையுமாக கரைபுரண்டு ஓடும் பால் ஆற்றில் இன்னும் சில வினாடிகளில் மாமல்லபுரம் துறைமுகத்திற்கு புறபட இருக்கும் பாய்மர படகில் நாம் எப்படியாவது இடம் பிடித்துவிட வேண்டும். மகேந்திரவர்மனும், நரசிம்ம பல்லவனும் மாமல்லபுரத்தை பார்வையிட அந்த பாய்மர படகில் கிளம்ப போகிறார்கள். பேசுவதற்கு நேரம் இல்லை வாருங்கள் ஓட்டமாக ஓடி படகில் ஏறிக்கொள்வோம் ’ . ஆயிரத்து முந்நூறு வருடங்களுக்கு முன்பு கலை ஆர்வளர்கள் இப்படிதான் தங்களுக்குள் பேசியபடி மாமல்லபுரம் செல்லும் பாய்மர படகில் இடம் பிடித்திருப்பார்கள். இன்று பால் ஆறு பாலை ஆறாக காட்சியலிக்கிறது. மாமல்லபுரம், அதன் பெயர் தொடங்கி அனைத்து அம்சங்களிலும் வரலாற்றுக்கு முரணான ஆரிய மாயை பூசி நிற்கிறது. ஆரிய மாயையால் பூசி மொழிகி நிறுத்தப்பட்டிருக்கிறது என்பது சரியாக இருக்கும். முதலில் மாமல்லபுர பெயர் காரணத்திலிருந்து தொடங்கலாம். மாமல்லபுரம் என்பதுதான் உண்மை வரலாற்றின் அடிப்படையில் அந்த பல்லவர் கால துறைமுக நகரத்திற்கு வழங்கப்பட்ட பெயராகும். மகேந்திரவர்மனின் மகன் நரசிம்மவர்மனுடைய சிறப்பு பெயர்களில் ஒன்று மாமல்லன். இவன் சி...

நதியோடு ஒரு பயணம்

Image
நைல் நதியின் ஓட்டம் மேலை எகிப்து( Upper Egypt) , கீழை எகிப்து( Lower Egypt) என்று இரண்டு நாகரீகங்களை உருவாக்கியது. யூப்ரடீஸ் மற்றும் டைகீரிஸ் நதிகள் சுமேரிய நாகரீகத்தை உருவாக்கியது. இந்த வரிசையில் மேலே குறிப்பிடப்பட்ட நைல், யூப்ரடீஸ், டைகீரிஸ் நதிகளைப் போல் இன்னும் குறிப்பாக சொல்வதென்றால் இந்த நதிகளுக்கெல்லாம் வெகு காலத்திற்கு முன்பே ஒடிய ஒரு நதி உலகின் மிகப் மிகப் பழமையான நாகரீகம் ஒன்றை வளர்தெடுத்தது. உலகின் தென்பாகத்தில் ஓடிய அந்த நதி இலக்கியங்களில் குறிப்பிட்டபட்ட மிகப் பழமையான நதியும் கூட. இன்று இந்துமகா சமுத்திரத்தின் அடி ஆழத்தில் புதைந்துவிட்ட அது தன்னோடு கூட உலகின் உன்னதமான ஒரு நாகரீகத்தின் அடையாளங்களையும் கொண்டு சென்றுவிட்டது. பல நூறு வருடங்களின் வரலாற்றை தன்னோடு அணைத்தபடி அது சமுத்திரத்தின் இருண்ட பாகத்தில் உறங்கி கிடக்கிறது. சமுத்திரத்திற்குள் முழ்கி அந்த நதியின் கரைகளில் புதைந்து கிடக்கும் வரலாற்றை மீட்டு எடுக்க வேண்டிய நாடு இன்று சுயநல அரசியல் வாதிகளால் பாழ்பட்டு கிடக்கிறது. வரலாற்று சுரணையற்ற அந்த நாட்டின் மக்களும் சித்தம் போக்கு சிவன் போக்கு என்று உழன்று கொண்ட...