Posts

ஊர்-ல் காயும் தமிழ் நிலவு

Image
வருடம் கி.மு. 3000 அதாவது இன்றிலிருந்து மிகச் சரியாக 5000 வருடங்களுக்கு முன்பு, அரேபிய ( Arab) நாட்டை தெற்கு வடக்காக கடந்து Persian Gulf -யை அடைந்து பிறகு Euphrates நதிக்கரையில் அமைந்திருக்கும் அந்த புகழ்பெற்ற நகரத்தை நோக்கி ஒரு வணிக கூட்டம் போய்கொண்டிருக்கிறது. அவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டே போகிறார்கள். என்ன ஆச்சரியம் அவர்கள் பேசுவது தமிழ் மொழி, ஆம் அவர்கள் தமிழில் தான் பேசிக்கொள்கிறார்கள். அவர்களை நாம் இன்னும் கொஞ்சம் அருகில் சென்று பார்க்கலாம் வாருங்கள். அடக் கடவுளே அவர்கள் தமிழ் வணிகர்கள். தமிழக வணிகர்களுக்கு இங்கு என்ன வேலை? இந்து மா கடலையும், அரேபியாவின் பாலைவனங்களையும் கடந்து இவர்கள் எங்கே போய்கொண்டிருக்கிறார்கள்? ஊர் ( Ur), அந்த தமிழ் வணிகர்கள் போய்கொண்டிருப்பது இந்த நகரத்தை நோக்கித்தான். அவர்களில் சிலர் ஊர்க் ( Urk) என்கிற நகரத்தை நோக்கி பிறகு செல்வார்கள். இந்த ஊர் மற்றும் ஊர்க் நகரங்கள் எங்கே இருக்கின்றன என்று நீங்கள் புருவம் உயர்த்தினால் இதை படியுங்கள். இந்த இரண்டு நகரங்களும் Mesopotamia நாகரீகம் செழித்து வளர்ந்த Sumeria- யாவில் இருக்கின்றன. Euphrates மற்றும் ...

ஒரு குச்சி, ஒரு பறை, ஒரு குறை

Image
இனக்குழு நடனம் ஒவ்வொரு மனித நாகரீகத்தின் மன இயல்புகளை வெளிப்படுத்தக் கூடிய கலை சாதனம். உலகின் பழமையான அனைத்து நாகரீகங்களுக்கும் அவற்றிர்கே உரிதான புராதன நடன கலை உண்டு. இந்த இனக்குழு நடனத்தின் முக்கிய அம்சம், வேட்டை மற்றும் இனக்குழு மோதல்களை சித்தரிப்பதாக இருக்கும். வேட்டையாடிய மிருகத்தின் தோலைக் கொண்டு இந்த நடனத்திற்கான வாத்தியங்கள் செய்யப்பட்டிருக்கும். இந்த வாத்தியங்கள் எழுப்பும் இசையோடு அமைந்த நடனம் காண்பவரை வசீகரிக்கக் கூடியது. இவ்வகை இனக்குழு நடனங்களில் பெயர் போனவர்கள் ஆப்பிரிக்க பழங்குடிகள். ஆப்பிரிக்க மக்களின் மரபனுவோடு கலந்த ஒன்று இந்த இனக்குழு நடனம். ஆப்பிரிக்க இனத்தவருக்கு நடனம் வெகு இயல்பாக வருவதற்கும் இதுவே காரணம். ஆப்பிரிக்க இனக்குழு நடனங்களும் அதற்கான இசையும் இன்று உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. உலகில் பத்தில் இரண்டு பேர் ஆப்பிரிக்க இனக்குழு நடனத்தையும் இசையும் அறிந்திருக்கிறார்கள். Money M என்கிற இசை குழுவின் புகழ் பெற்ற பாடல்கள் அனைத்துமே முழுக்க முழுக்க ஆப்பிரிக்க இனக்குழு இசையின் மேற்கத்திய பிரதிபலிப்பு. Money M குழுவின் பாடல்களை கேட்டவர்களுக்கு தெரியும் அந்...

நடுநிலை வரலாறு இங்கே விற்பனைக்கு

முஸ்லிம் படையெடுப்புகளையும், முஸ்லிம் படையெடுப்பாளர்களையும் மிகவும் வன்மையாக சித்தரிப்பது இந்திய வரலாற்றின் பண்பு. சிறுபிள்ளைகளின் வரலாற்று பாட புத்தகம் முதல் கல்லூரி வரலாற்று துறைகள் வரை இந்த பண்பை மறைமுகமாக காணமுடியும். முஸ்லிம் படையெடுப்புகளால் இந்திய சமூகம் பாதிக்கப்பட்டுவிட்டதைப் போன்ற தோற்றம் நமது வரலாற்றை சுற்றி கட்டமைக்கப்படுகிறது. இது மிகவும் ஆழ்ந்து நோக்கப்பட வேண்டிய விசயம். இந்த விதமான படையெடுப்புகளைக் குறித்த பின்னனித் தகவல்கள் மிகவும் முக்கியமாகின்றன. மேலும் அக்காலத்திய போர் முறைகளையும், போர் முறைகள் சார்ந்த நடவடிக்கைகளின் பின் விளைவுகளையும் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் அவைகள் எல்லாம் காற்றில் விடப்படுகின்றன. இந்த கட்டுரையில் நாம் ஒட்டுமொத்த முஸ்லிம் படையெடுப்புகளையும் பார்க்கப் போவதில்லை. தென்னிந்தியாவில், அதிலும் முக்கியமாக தமிழகத்தில் நடந்த முஸ்லிம் படையெடுப்பின் தொடக்கத்தையே பார்க்கப் போகிறோம். தென்னிந்தியாவில் முஸ்லிம் படையெடுப்பால் ஏற்பட்ட வரலாற்று நிகழ்வுகள் குறித்து ‘ மதுர விஜயா ’ என்கிற புத்தகம் பேசுகிறது. இது எழுதப்பட்ட காலம் கி.பி. 13 ஆம்...

தமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas)

Image
இன்று உலகமே Mayan என்கிற வார்த்தையை அறிந்திருக்கிறது. Mayan Calendar -யை வைத்து உலகம் முழுவதும் இன்று பரபரப்பு கிளப்பப்படுகிறது. 2012-ல் உலகம் அழிந்திவிடலாம் என்கிற புனைவுகளும் தொலைக்காட்சி மர்மத் தொடர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. Mayan- கள் யார் என்றுத் தெரியாதவர்கள் கூட Mayan என்கிறப் பெயரை உச்சரிக்கிறார்கள். தமிழ் நாட்டின் முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் Mayan Calendar பற்றிய நிகழ்ச்சிகளை வெளிநாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து பிச்சையெடுத்து, தமிழ் படுத்தி கட்டைக் குரல்களில் உலக அழிவைப் பற்றி பேசுகின்றன. வரலாற்று அறிவு கொஞ்சம் கூட இல்லாத நம்முடைய தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் Mayan தொடர்பான வரலாற்று நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவது அபத்தம். Omlec, Aztec, Mayan, Inca இவைகள் வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்த மக்களுடைய நாகரீகங்களின் பெயர்கள். இவர்களை வெள்ளையர்கள் செவ்விந்தியர்கள் என்று பொதுபட அழைத்தார்கள். ஆங்கிலேயர்கள் இவர்களை செவ்விந்தியர்கள் என்று அழைத்ததற்கு வரலாற்று பின்னனி உண்டு. கி.பி. 14, 15 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்...

களப்பிரர் என்னும் கலி அரசர்

Image
கி.பி. 250 தொடங்கி கி.பி. 575 வரையான 325 வருடங்களை தமிழகத்தின், தமிழக வரலாற்றின் இருண்ட காலமாக இந்திய வரலாற்றாளர்கள் வரையறுத்திருக்கிறார்கள். இந்த உலகில் உள்ள எல்லா மனித நாகரிகத்திற்கும் இருண்ட காலம் என்று ஒன்று உண்டு. ஒரு நாகரிகத்தில் புறவயமாகவோ, எதிரிகளாலோ, தனக்குள்ளேயோ ஏற்படும் கலாச்சார சீரழிவுகளை, கொள்ளைகளை, மனித கொலைகளை, இன படுகொலைகளை அந்த நாகரிகத்தின் இருண்ட காலம் என்பார்கள். உலகில் எந்த நாகரிகமும் இந்த காட்டுமிராண்டி செயல்களிலிருந்து தப்பியது கிடையாது. இப்பொழுது நம் முன் இருக்கும் கேள்வி தமிழகத்தின் இருண்ட காலமும் இத்தகைய தன்மைகள் கொண்டவைகள் தானா என்பது. இதை சற்று விரிவாகவே நாம் பார்க்க வேண்டியுள்ளது. தமிழகத்தில் கடை சங்கம் என்று சொல்லப்படும் மூன்றாம் சங்கம் கி.பி. 150 முதல் தடையமே இல்லாமல் மறைந்துவிட்டது. சங்கம் என்பது சேர, சோழ, பாண்டியர் என்று சொல்லப்படும் மூவேந்தர்களால் தமிழ் மொழியின் இலக்கியத்தை வளர்ப்பதற்காக நிறுவப்பட்டது. முதல் தமிழ் சங்கமும், இரண்டாம் தமிழ் சங்கமும் கடல் கோளினால் (சுனாமி) அழிந்துவிட்டது. இந்த இரண்டு தமிழ் சங்கங்களின் காலமும் இன்றிலிருந்து சுமார் 50...