Posts

நடுநிலை வரலாறு இங்கே விற்பனைக்கு

முஸ்லிம் படையெடுப்புகளையும், முஸ்லிம் படையெடுப்பாளர்களையும் மிகவும் வன்மையாக சித்தரிப்பது இந்திய வரலாற்றின் பண்பு. சிறுபிள்ளைகளின் வரலாற்று பாட புத்தகம் முதல் கல்லூரி வரலாற்று துறைகள் வரை இந்த பண்பை மறைமுகமாக காணமுடியும். முஸ்லிம் படையெடுப்புகளால் இந்திய சமூகம் பாதிக்கப்பட்டுவிட்டதைப் போன்ற தோற்றம் நமது வரலாற்றை சுற்றி கட்டமைக்கப்படுகிறது. இது மிகவும் ஆழ்ந்து நோக்கப்பட வேண்டிய விசயம். இந்த விதமான படையெடுப்புகளைக் குறித்த பின்னனித் தகவல்கள் மிகவும் முக்கியமாகின்றன. மேலும் அக்காலத்திய போர் முறைகளையும், போர் முறைகள் சார்ந்த நடவடிக்கைகளின் பின் விளைவுகளையும் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் அவைகள் எல்லாம் காற்றில் விடப்படுகின்றன. இந்த கட்டுரையில் நாம் ஒட்டுமொத்த முஸ்லிம் படையெடுப்புகளையும் பார்க்கப் போவதில்லை. தென்னிந்தியாவில், அதிலும் முக்கியமாக தமிழகத்தில் நடந்த முஸ்லிம் படையெடுப்பின் தொடக்கத்தையே பார்க்கப் போகிறோம். தென்னிந்தியாவில் முஸ்லிம் படையெடுப்பால் ஏற்பட்ட வரலாற்று நிகழ்வுகள் குறித்து ‘ மதுர விஜயா ’ என்கிற புத்தகம் பேசுகிறது. இது எழுதப்பட்ட காலம் கி.பி. 13 ஆம்...

தமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas)

Image
இன்று உலகமே Mayan என்கிற வார்த்தையை அறிந்திருக்கிறது. Mayan Calendar -யை வைத்து உலகம் முழுவதும் இன்று பரபரப்பு கிளப்பப்படுகிறது. 2012-ல் உலகம் அழிந்திவிடலாம் என்கிற புனைவுகளும் தொலைக்காட்சி மர்மத் தொடர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. Mayan- கள் யார் என்றுத் தெரியாதவர்கள் கூட Mayan என்கிறப் பெயரை உச்சரிக்கிறார்கள். தமிழ் நாட்டின் முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் Mayan Calendar பற்றிய நிகழ்ச்சிகளை வெளிநாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து பிச்சையெடுத்து, தமிழ் படுத்தி கட்டைக் குரல்களில் உலக அழிவைப் பற்றி பேசுகின்றன. வரலாற்று அறிவு கொஞ்சம் கூட இல்லாத நம்முடைய தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் Mayan தொடர்பான வரலாற்று நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவது அபத்தம். Omlec, Aztec, Mayan, Inca இவைகள் வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்த மக்களுடைய நாகரீகங்களின் பெயர்கள். இவர்களை வெள்ளையர்கள் செவ்விந்தியர்கள் என்று பொதுபட அழைத்தார்கள். ஆங்கிலேயர்கள் இவர்களை செவ்விந்தியர்கள் என்று அழைத்ததற்கு வரலாற்று பின்னனி உண்டு. கி.பி. 14, 15 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்...

களப்பிரர் என்னும் கலி அரசர்

Image
கி.பி. 250 தொடங்கி கி.பி. 575 வரையான 325 வருடங்களை தமிழகத்தின், தமிழக வரலாற்றின் இருண்ட காலமாக இந்திய வரலாற்றாளர்கள் வரையறுத்திருக்கிறார்கள். இந்த உலகில் உள்ள எல்லா மனித நாகரிகத்திற்கும் இருண்ட காலம் என்று ஒன்று உண்டு. ஒரு நாகரிகத்தில் புறவயமாகவோ, எதிரிகளாலோ, தனக்குள்ளேயோ ஏற்படும் கலாச்சார சீரழிவுகளை, கொள்ளைகளை, மனித கொலைகளை, இன படுகொலைகளை அந்த நாகரிகத்தின் இருண்ட காலம் என்பார்கள். உலகில் எந்த நாகரிகமும் இந்த காட்டுமிராண்டி செயல்களிலிருந்து தப்பியது கிடையாது. இப்பொழுது நம் முன் இருக்கும் கேள்வி தமிழகத்தின் இருண்ட காலமும் இத்தகைய தன்மைகள் கொண்டவைகள் தானா என்பது. இதை சற்று விரிவாகவே நாம் பார்க்க வேண்டியுள்ளது. தமிழகத்தில் கடை சங்கம் என்று சொல்லப்படும் மூன்றாம் சங்கம் கி.பி. 150 முதல் தடையமே இல்லாமல் மறைந்துவிட்டது. சங்கம் என்பது சேர, சோழ, பாண்டியர் என்று சொல்லப்படும் மூவேந்தர்களால் தமிழ் மொழியின் இலக்கியத்தை வளர்ப்பதற்காக நிறுவப்பட்டது. முதல் தமிழ் சங்கமும், இரண்டாம் தமிழ் சங்கமும் கடல் கோளினால் (சுனாமி) அழிந்துவிட்டது. இந்த இரண்டு தமிழ் சங்கங்களின் காலமும் இன்றிலிருந்து சுமார் 50...

காத்திருக்கிறது வாயில் காப்போரின் நிலா சோறு கதைகள்

கடவுள் இந்த சொல் ஒன்று போதும், தமிழன் அடிமைத்தனத்தின் கீழ்த்தரமான எந்த நிலைக்கும் இறங்குவதற்கு தயங்க்கவேமாட்டான். 3000 வருடங்களுக்கு முன்பு இந்த ஒற்றை வார்த்தையை வைத்துதான் ஆரியமும், பார்ப்பனியமும் தமிழனின் நிலையை, தன்மானத்தை, சிறப்புகளை, கலைகளை அடகுக்கு எடுத்துக்கொண்டான். பார்ப்பனியம் வெகு சுலபமாக தமிழனின் ஓட்டுமொத்த வாழ்க்கைக்கும் ஆரிய சாயம் பூசிவிட்டது. மொழித் தொடங்கி கலைகள் வரை அனைத்தும் ஆரியப் பெயர்கள் தாங்கி ஓலைச்சுவடிகளில் ஏறின. தமிழனின் கட்டிடக் கலையும் இதற்கு விதிவிலக்கு கிடையாது. இன்று தமிழர்களின் கட்டிடக் கலையைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்பும் ஒருவர், ‘ மாய மதம் ’ , ‘ காசிப சில்பசாத்திரம் ’ என்கிற இரு ஆரிய மொழி நூல்களைத்தான் படித்தாகவேண்டும். ஏமாந்த தமிழர்களின் கட்டிடக் கலை நுட்பங்களை தமிழ் மொழியிலிருந்து ஆரிய மொழிக்கு மொழிமாற்றம் ( Translation) செய்து எழுதி எடுத்துக்கொண்டு அதைத் தமிழர்களிடமே காட்டி தமிழர்களின் கட்டிடக் கலை நுட்பத்திற்கு மூலம் தங்களின் சமஸ்கிருத நூல்கள் தான் என்று பார்ப்பனியம் சாதித்துவிட்டது. மூலத் தமிழ் நூல்கள் மாயமாய் மறைந்து போய்விட்டன இல்லை இல்லை ...