‘எதிர்ப்போ......ம் ஆனா...... எதிர்.....க்க மாட்டோம்’

நேற்று இரவு புதிய தலைமுறையில் கூடங்களும் அணு உலை தொடர்பாக மீண்டும் ஒரு விவாதம் நடந்தது. இதில் கம்யூனிஸ்டுகளின் சார்பாக ராமநாதன் கலந்துகொண்டார். ராமநாதன் இந்த விவாதத்தில் கலந்துகொள்ளாமலேயே இருந்திருக்கலாம். அந்த அளவிற்கு அவரே அவர்களுடைய கொள்கைகளை நாறடித்துகொண்டார். நாம் கம்யூனிஸ கொள்கைகளுக்கு எதிரானவர்கள் கிடையாது. ஆனால் தற்பொழுது இந்தியாவில் செயல்படும் பொலிட் பியூரோவை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. கம்யூனிஸ்டுகள் தாங்களே தங்களை இந்தியாவை ஆளும் தகுதியிலிருந்து தள்ளிவைத்துகொள்ளுகிறார்கள். ரஷ்யா எது செய்தாலும் அதற்கு கண்மூடித்தனமான ஆதரவு ஆனால் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளுக்கு எதிர்ப்பு. ரஷியாவும் கூட இன்றைக்கு வல்லரசு நாடுகளைப் போல பெரு முதலாளிகளின் நலனைத்தான் முதன்மையாக பார்க்கிறது என்பதை இந்திய கம்யூனிஸ்டுகள் ஏற்க மறுப்பது வேதனை சிரிப்பைதான் வரவழைக்கிறது. நேற்று பேசிய ஜி. ராமநாதன் ரஷ்ய அணு உலைகள் மிகவும் பாதுகாப்பானது அதை ஆதரிப்பது கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு அதே சமயத்தில் அமெரிக்கா இந்தியாவிற்குள் கொண்டுவர இருக்கும் அணு உலைகளை எதிர்கிறோம், எதிர்ப்போம் என்றார். அ...